அன்றாடம்
நன்றி நவிலல் நாள் நற்கேள்விகள்
வட அமெரிக்காவில் பிரதானமாக நன்றி நவிலல் நாளில் உண்ணப் படுவது, பன்றி செம்மறி ஆடு வான் கோழி அரிசி உணவு கீழே தரப்பட்டவையில் வழக்கமாக உட்கொள்ளப்படாதது பூசணி மாக்கோது (Pumpkin pie) மசித்த உருளைக்கிழங்கு – (mashed potato) கிரான்பெரி பழவினி ரசம் வற்றாளங்கிழங்கு – (Sweet potato) மேலே கூறப்பட்ட அனைத்தும் நன்றி நவிலல் நாள் அன்று குடும்பத்தவரை விருநதோம்பும் வழக்கம் தொடங்கியது எப்போது? பதினெட்டாம் நூற்றாண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு இருபதாம் நூற்றாண்டு பதினேழாம் […]
பூரிக்க வைக்கும் மஞ்சள் பூசணியும் பச்சிலையும்
வட அமெரிக்கக் குளிர் மாதங்களில், பனிக் காலத்தில் எம்மை உற்சாகப்படுத்த உணவு வகை உதவி தரும். பனிக் காலத்தில் எமது உடலின் நோய் தடுப்புத் தன்மையை உந்து செய்ய மஞ்சள் (turmeric) திரவியமும், சற்று இதமான இனிப்புத் தன்மையான மஞ்சள், செம்மஞ்சள் நிறப் பூசணியும். சிறு கருநீல கேல் (kale), கீரை போன்ற இலை தழையும் இனிமையாகும். குளிர் காலத்தின் வெயில் இல்லாத் தன்மை நுண்கிருமிகள் ஆதிக்கம் அதிகரிக்க வாய்ப்புக்களை உருவாக்குகிறது. பூசணி பற்றிய சிறு வரலாறு […]
மாநாட்டுச் செய்தி அறிவிப்பு – சிகாகோ
அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அதன் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு சூலை திங்கள் 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது சிகாகோ, இல்லினாய், செப்டெம்பர் 15, 2018. பெருமதிப்புக்குரிய தமிழ் அறிஞர் பெருமக்களே வணக்கம். 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ பெருநகரில், 2019-ஆம் ஆண்டு, சூலை திங்கள் 3 முதல் 7ஆம் நாள் வரை நடைபெற இருப்பதை உங்களில் பலர் அறிந்திருக்கக் கூடும். […]
96 – திரைப்பட விமர்சனம்
ஒரு மாமாங்கத்திற்கு ஒருமுறை மெச்சிக் கொள்ளும்படி ஒரு காதல் திரைப்படம் தமிழில் வெளியாகும். அப்படி ஒரு படம் இம்மாதம் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வந்துள்ள 96 தான் அப்படம். பிரிந்த காதலர்கள் சந்தித்தால் என்னவாகும் எனும்போது அதற்குப் பல பதில்கள் உருவாகலாம். அறிமுக இயக்குனர் பிரேம்குமார் பார்ப்போரை நெகிழச்செய்யும் வண்ணம் ஒரு பதிலை இப்படத்தில் கூறியிருக்கிறார். இயற்கை புகைப்படக் கலைஞராகவும், புகைப்படக் கலை ஆசிரியராகவும் இருக்கும் விஜய் சேதுபதி ஒரு சமயம் தனது […]
மைத்ரீ – சிநேகத்தின் சங்கீதம் (Maithree: The Music of Friendship)
இசை என்னும் தங்கச் சங்கலியால் உலக மக்கள் எல்லோரையும் இணைக்க முடியும் என்பது வெறும் கூற்றல்ல. அது நிஜமாவதை நேரில் காண மினசோட்டா மக்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு. நம் மினசோட்டா வாழ் தமிழ் மக்களின் பெருமை வீணை விதூஷி நிர்மலா ராஜசேகர் என்றால் அது மிகை ஆகாது . அவரின் மைத்ரீ – சிநேகத்தின் சங்கீதம் (Maithree: The Music of Friendship) “இசைத் தட்டு” வெளியீட்டு விழா அக்டோபர் 28 ஆம் தினம் தி […]
அமெரிக்க கொலு 2018
இந்தியாவில் இருந்து பல ஆயிரம் மைல்கள் தள்ளி இருந்தாலும், நமது கலாச்சாரம் நம்முடன் என்றும் நெருக்கமாகத் தான் இருக்கிறது. கொலு வைக்கும் வழக்கம் உள்ள குடும்பத்தினர், அந்த வழக்கத்தைக் கைவிடாமல் இங்கும் மினசோட்டாவில் குடும்பத்தினருடன், நண்பர்களுடன் இணைந்து கொலு வைத்து நவராத்திரியைக் கொண்டாடி வருகின்றனர். இவ்வருடம் வைக்கப்பட்ட கொலு புகைப்படங்கள் சில இங்கே உங்கள் பார்வைக்கு. வெங்கட் – உமா குடும்பத்தினர் மாறன் – அர்ச்சனா குடும்பத்தினர் சுப்பு – லக்ஷ்மி குடும்பத்தினர் பிரபு – ராதிகா குடும்பத்தினர் […]
காமராஜர் இல்லம் – புகைப்படப் பதிவு
சமீபத்தில் சென்னை சென்றிருந்த சமயம், பெருந்தலைவர் காமராஜரின் இல்லத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மக்களின் பேரன்பைப் பெற்றவர் வாழ்ந்த வாழ்வின் சிறு துளியைக் காண்பதற்கு நிறைவாக இருந்தது. அங்கு கண்டதை விவரித்து எழுதத் தேவையில்லை. அங்கு எடுத்த இப்புகைப்படங்களே, விஷயங்கள் பலவற்றைக் கூறும். நகரின் மையத்தில் இருக்கும் இந்த இடத்திற்கு நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாகச் சென்று வாருங்கள். முகவரி – https://goo.gl/maps/wo18rn4YEcx 1/10, Thirumalai Pillai Road, Thirumurthy Nagar, T Nagar, Chennai, Tamil […]
நவராத்திரி திருவிழா 2018
முப்பெருந்தேவியரான லட்சுமி, சக்தி, சரஸ்வதி ஆகிய மூவரையும் போற்றும் விதமாகக் கொண்டாடப்படுவது நவராத்திரி. நவம் என்ற சொல்லுக்கு வட மொழியில் ஒன்பது என்று பொருள். ஒன்பது நாட்கள் நடைபெறும் இவ்விழாவை இந்தியாவின் பல பகுதிகளில் பலவிதமாகக் கொண்டாடுகிறார்கள். குஜராத் மாநிலத்தில் இவ்விழா நடனத் திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது. ஓவ்வொரு இரவும் மக்கள் ஒன்று கூடி நடனமாடுவார்கள். இந்த வகையான நடனத்தை கார்பா (garba) அல்லது தாண்டிய (dandiya) என்று அழைப்பார்கள். இந்த ஆண்டு மினசோட்டா மாநிலத்தில் உள்ள குஜராத் […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 10 சாங்ஸ் (அக்டோபர் 2018)
இவ்வருடத்தின் முந்தைய பகுதிகள். காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (மார்ச் 2018) காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஜூன் 2018) காற்றில் உலவும் கீதங்கள் மூலம் உங்களைச் சந்தித்து வருவதில் சின்ன இடைவெளி விழுந்துவிட்டதால், அதை ஈடுகட்டும் விதமாக, நமது இந்த லிஸ்ட்டில் பத்துப் பாடல்கள். கோலி சோடா 2 – பொண்டாட்டி கோலி சோடாவின் இரண்டாம் பாகம் முதல் பாகம் ஓடிய அளவுக்கு ஓடவில்லை. படத்தில் சமுத்திரக்கனி, […]
செக்கச் சிவந்த வானம்
எத்தனை தோல்விகள் கொடுத்தாலும், மணிரத்னம் என்ற கலைஞனுக்கு இருக்கும் மவுஸ் குறையாது என்று மீண்டும் நிருபித்து இருக்கிறது – செக்கச் சிவந்த வானம். விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், ஜோதிகா எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளம் அவருடன் இப்படத்தில். எதிர்பார்ப்புக்குச் சொல்லவா வேண்டும்? எதிர்பார்த்ததைப் போலவே படத்திற்கு மாஸ் ஓப்பனிங். எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறாரா மணிரத்னம் என்பதைப் பார்ப்போம். கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை என மணிரத்னத்தின் […]