அன்றாடம்
மாங்குளம் வன்னியின் சுவை உணவகம்
வன்னிக் காட்டுக் சாலையில் இருந்து விடுபட்டு அயல் புழுதி கூடிய சிறு பாதையில் திரும்பி வாகனத்தை தரிப்பிடத்தில் நிறுத்தினார் வாகனச் சாரதியார் ராஜா. “அண்ணை இங்கேயும் ஒருக்கால் சாப்பிட்டுப் பாருங்கோவன்” என்றார் அவர். நாம் அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு வன்னிக் காட்டுப் பகுதிகள் சென்று மதியமளவில் வெய்யிலில் வந்ததால் பசி வேறு வயிற்றைத் துளைத்தது. சரி சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே என்று கூறி உடன் வந்த நண்பர்களுடன் அழகான அயல் பூஞ்செடிகள் பார்த்தவாறு விசாலமான ஓட்டுக் கூரையுடனான கட்டடத்தின் […]
மினசோட்டாவில் இந்திய சுதந்திர தின விழா 2018
இந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை மினசோட்டாவில் உள்ள ‘இந்தியா அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா’ (IAM) அமைப்பினர், செயின்ட் பாலில் உள்ள மாநில தலைமைக் கட்டிட மைதானத்தில் கடந்த 18ம் தேதி நடத்தினர். விழா மைதானத்தில் பல வகையான இந்திய உணவகங்கள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடங்கள், குழந்தைகள் விளையாட பல்வேறு விளையாட்டுப் பகுதிகள், மெஹந்தி கூடங்கள் என நிரம்பி வழிந்தன. இவை தவிர மினசோட்டாவிலுள்ள இந்தியச் சங்கங்களின் கூடங்களும் மற்ற நிறுவன கடைகளின் கூடாரமும் இடம்பெற்றிருந்தன. சுமார் இரண்டு […]
பௌவெள 2018-வசிப்பி கலாச்சார விழா
பூர்வீக மக்கள் மிதேவாகட்டன் சூ சமூக வசிப்பி 2018 Mdewakanton Sioux Community Wacipi உங்கள் அனைவரையும் நல்லிதயத்துடனும், இதமான கை குழுக்களுடனும் வரவேற்கிறோம் என்றது மினசோட்டா மாநில சாக்கோப்பி நகர மிதேவாகட்டன் பூர்விகத்தினர் சமூகம். இது வருடா வருடம் கோடை முடிவில் ஆகஸ்ட் மாத நடுவில் வரும் வார இறுதி மூன்று நாட்கள் நடைபெறும் நடன உற்சவம் ஆகும். இம்முறை ஆகஸ்ட் 17, 18, 19 ஆம் தேதிகளில் இந்நிகழ்வு நடை பெற்றது. வசிப்பி என்றால் […]
கமலின் விஸ்வரூபம்
பலமுறை பலராலும் பலவிதமாகப் பாராட்டப்பட்டது கமலஹாசனின் கடின உழைப்பு, விடா முயற்சி, படைக்கும் கலையின்மீது அவர் கொண்டுள்ள மாறாக் காதல், எல்லாவற்றையும் செய்யத் துடிக்கும் அவரின் ஆர்வம் – சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் படமும் அவரின் இக்குணாதிசயங்களைக் காட்டுவதில் விதி விலக்கல்ல. விஸ்வரூபம் முதல் பகுதி வெளிவந்த தினத்திலேயே கமல் சொன்னதாக வெளிவந்த செய்தி, பகுதி இரண்டுக்குத் தேவையான அளவுக்கு பல காட்சிகளும் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டது என்பதாக நினைவு. 2014ஆம் ஆண்டிலேயே வெளிவரும் என்றும் […]
ஆர் யு ஹங்ரி 2018 ஆம் ஆண்டு 5 / 10 மைல் ஓட்டம்
ஆகஸ்ட் 5ம் தேதி ஆர் யு ஹங்ரி (Are you hungry MN) சார்பில் ஐந்து மற்றும் பத்து மைல் ஓட்டப் பந்தயம் மினசோட்டா மாநிலத்தில் உள்ள ஈடன் ப்ரைரே (Eden Prairie) நகரத்திலுள்ள புர்கடோரி க்ரீக் பூங்காவில் (Purgatory Creek Park) நடைபெற்றது. இப்போட்டியை “ஆர் யு ஹங்ரி” நிர்வாகக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் 5 மைல் ஓட்டம் முதல் இடம் ஜாக் லார்சன் (JACK LARSON) இரண்டாவது இடம் […]
ரோக்கியோவில் கோடைக்காலம்
கோடைக்காலச் சராசரி உஷ்ணமான 35 °C, பச்சைப் பசேல் என்ற பைன், சாலையோர வரிசையான கிங்கோ மரங்கள் மத்தியில் நடந்து செல்கிறார்கள் ரோக்கியோ நகரவாசிகள். ரோக்கியோ நகரத்தின் மையத்தில் உள்ளது பச்சை மைதானம், சக்கரவர்த்தியின் அரண்மனை, அழகிய தொங்குபாலங்கள், பச்சைப் பாசி படர்ந்து, தற்போதும் பயன்படும் கோட்டைகள், மற்றும் அழகிய செர்ரிப் பூ மரங்கள். சக்கரவர்த்தி குடும்பம் இப்போதெல்லாம் பண்டிகைகளுக்கு மாத்திரம் அரண்மனையைப் பயன்படுத்துகிறார்களாம். ரோக்கியோ நகரவாசிகளை விட, மற்ற யப்பானிய மாகாணங்களில் இருந்து வரும் உல்லாசப் […]
கடவுளின் எல்லையற்ற அன்பு
கடவுள் நம்மேல் அன்பும் இரக்கமும் நிறைந்தவர். அன்பு என்பது கடவுளின் குணமாகும், கடவுள் தன் அன்பைத் தம்முடைய படைப்புகளோடு எப்போதும் பகிர்ந்து கொள்கிறார். மனித குலத்திற்கான அவரது அன்பு அவரது படைப்புகளில் வெளிப்படுகிறது. கடவுள் ஆணும், பெண்ணுமாக மனிதரை உருவாக்கினார். மனிதர்கள் பழுகிப் பெருகவும் செய்தார். தன் சாயலாக எண்ணற்ற நல்ல ஆத்மாக்களைப் பெருகச் செய்து, அவர்களைப் பரலோக ராஜ்யத்தில் சேர்த்தார். மனிதனைப் படைப்பதற்கு முன் கடவுள் மனிதனுடைய தேவைகளை அறிந்திருந்து […]
தமிழ்ப் படம் 2.0
இன்னமும் தமிழ் சினிமா சார்ந்த மேடைகளில் பிற நடிகர்களையோ, படங்களையோ பற்றி விமர்சனம் செய்து கருத்துக் கூறுவது அரிது. எதற்கு மல்லாந்து படுத்துக்கொண்டு துப்புவது, கண்ணாடி வீட்டில் கல்லெறிவது என்று காரணம் கூறுவார்கள். நிலைமை அப்படி இருக்கும் போது, பிற படங்களைக் கிண்டல் செய்து எடுக்கப்படும் ஸ்பூஃப் வகைத் திரைப்படங்கள் தமிழில் சாத்தியமா என்ற கேள்வி நெடுநாட்களுக்கு இருந்தது. அதற்கு விடையாக 2010 இல் “தமிழ்ப்படம்” வந்தது. அச்சமயம் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட அப்படம் வெற்றியடைந்து நல்ல […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஜூன் 2018)
ஏப்ரலில் சினிமா ஸ்ட்ரைக் முடிய, காத்திருந்த படங்கள் எல்லாம் கடந்த இரு மாதங்களாக வர தொடங்கியது. அதனால், ஏற்கனவே வெளிவந்து ஹிட்டாகி இருந்த பாடல்களை, திரையில் காண ரசிகர்களுக்கு வாய்ப்பு அமைந்தது. இரும்புத்திரை – முதல் முறை விஷாலுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு அமைந்த ஹிட் திரைப்படம். டிஜிட்டல் இந்தியாவில் இருக்கும் பிரச்சினைகளைப் பேசிய திரைப்படம். யுவன் பாடல்களை விட, படத்தின் பின்னணி இசையில் கலக்கியிருந்தார். இந்த ‘முதல் முறை’ அவருடைய டிபிக்கல் சாங் […]
அமெரிக்கக் கெய்ஜின் உணவு
கடல் உணவு ரசிகரா நீங்கள்? அப்படியென்றால், உங்களுக்குக் கஜூன் வகை உணவு பற்றித் தெரிந்திருக்கலாம். தெரிந்திருந்தால், அப்படியே ஜம்ப் செய்து அடுத்தப் பத்திக்கு சென்று விடுங்கள். தெரியாதவர்களுக்கு, ஒரு சிறிய அறிமுகம். கஜூன் என்ற சமையல் முறைக்குச் சொந்தக்காரர்கள், அகாடிய இனக்குழு மக்கள். 18 ஆம் நூற்றாண்டில் இந்த மக்கள் கனடாவிலிருந்து, அமெரிக்காவின் லூசியானா மாநில சதுப்பு நிலப்பரப்பில் குடியமர்த்தப்பட்டனர். அப்போது இந்த அடிமை மக்களின் வாழ்வியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. நிலப்பரப்பு, தட்பவெட்பம், உணவு பொருட்கள் […]