அன்றாடம்
சிவராத்திரி நடன விழா 2024
2024ம் ஆண்டு சிவராத்திரியை முன்னிட்டு மினசோட்டா மாநிலம், ‘எடினா’ நகரத்தில் உள்ள வெங்கடேஸ்வர திருக்கோவிலில் (SV Temple, Edina, MN) பரதநாட்டிய திருவிழா கடந்த மார்ச் எட்டாம் தேதியன்று நடைபெற்றது. கோவில் நிர்வாகத்தால், இந்த விழா மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் சிறுவர் முதல் பெரியோர் உட்பட பரதநாட்டியம் பயின்ற பலரும் பங்கேற்றனர். முறையாக நாட்டியம் பயின்ற மாணவ மாணவிகள் தனியாகவோ அல்லது குழுவாகவோ ஆடி, தங்கள் திறமையை வெளிப்படுத்தி, பார்வையாளர்களை மகிழ்வித்தனர். அன்றைய தினம் […]
அலெக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் 2024
‘அலெக்ஸ்’ என்று செல்லமாக அறியப்படும் மேடைச் சிரிப்புரையாளர் அலெக்ஸாண்டர் பாபு சென்ற மார்ச் 22ஆம் தேதி அன்று மினசோட்டா, ஹாப்கின்ஸ் (Hopkins)நகரில் உள்ள அரங்கத்தில் “அலெக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் – Alexperience” என்ற மேடை நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்தினார். “யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளில் ஆரம்பித்து, அதற்குண்டான உரையை வழங்கி, பல்வேறு தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடி, பலதரப்பட்ட விளக்கங்களையும் வழங்கி மக்களை மகிழ்வித்தார். இந்த நிகழ்விற்கு பல்வேறு […]
“உன் நிலம் நோக்கி நகரும் மேகம்” காதல் ரசம் சொட்டும் கவிதை நூல்.
2022 இல் YMCA மைதானத்தில் நடைபெற்ற 45வது சென்னை புத்தகக் கண்காட்சியில் கவிதாயினி சங்கரி சிவகணேசன் அவர்களின் “உன் நிலம் நோக்கி நகரும் மேகம்” எனும் கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. எழிலினி பதிப்பகம் மூலம் வெளியான இந்தப் புத்தகத்தை, கடந்த மாதம் அமேசான் கிண்டலில் (Amazon Kindle) வாங்கிப் படித்தேன் அத்தனையும் காதல் ரசம் கொட்டும் கவிதைகள். நான் தமிழ் படித்த கலாநிதி, பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் முன்னுரையுடன் தொடங்கும் இந்த நூலுக்கு, முனைவர் பேராசிரியர் […]
திரைக் கவிஞர்கள் பார்வையில் அழகு
தமிழ்த் திரையிசையில் பிரதான இடம் பிடித்தவை காதல் பாடல்கள். நாயகன் – நாயகி இருவருக்குள்ளும் பிறந்த காதலை விளக்குவதற்குப் பெரிதும் துணை நின்றவை, இன்றும் நிற்பவை, பாடல்களே. ஒருவருக்கு ஒருவரைப் பிடிக்கப் பல காரணங்கள் உண்டென்றாலும் அந்தக் காரணங்களை எடுத்துச் சொல்வது, அதிலும் மெய்ப்பிக்கும் வகையில் சொல்வது மிகக் கடினமான விஷயம். ‘சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை தந்துவிட்டேன் என்னை’ என்று எந்தக் காரணமும் இல்லாமல் மற்றவர் மீது ஏற்பட்ட காதலை, ஈர்ப்பைச் சொன்னது கண்ணதாசனின் சிந்தனைக்கோர் சிகரம். […]
பன்முகத் தமிழ் மரபு கலை வித்தகர் திரு. பாவேந்தன் ராஜா பேட்டி
பன்முகத் தமிழ் மரபு கலை வித்தகர் திரு. பாவேந்தன் ராஜா பேட்டி பரதம், கரகம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறை, சிலம்பம் எனத் தமிழ் மரபு கலைகள் பலவற்றிலும் தேர்ச்சி பெற்று, ஆய்வுகள் செய்து, மாணவர்களுக்குக் கற்று கொடுத்து வரும் திரு. பாவேந்தன் ராஜா அவர்களுடன் ஓர் இனிய உரையாடல்.
கலைக்கு மயங்காதவர் மனிதரே அல்ல!! – வேலு ஆசான்
பறை கலைஞர் மற்றும் ஆசிரியர் திரு. வேலு ஆசான் அவர்களுடனான உரையாடலின் இப்பகுதியில் திரைத்துறையில் அவருக்குக் கிடைத்த வாய்ப்புகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். இந்த உரையாடலின் காணொலியை இங்கு காணலாம்.
சங்கமம் 2024
மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் பொங்கல் விழாவான ‘சங்கமம்’, இந்தாண்டு ஹாப்கின்ஸ் மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி மாதம் 13ஆம் தேதியன்று நடைபெற்றது. மதியம் 12:30 மணியளவில் தொடங்கிய இவ்விழா, இரவு ஒன்பது மணி வரை நடைபெற்றது. தமிழ் மரபு சார்ந்த கலை நிகழ்ச்சிகள், திரைப்பாடல்களுக்கான நடன நிகழ்ச்சிகள், குழந்தைகள் பங்கேற்ற மலரும் மொட்டும், தன்னார்வலர்களுக்கான விருது, போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு என இடைவிடாமல் ஆட்டம், பாட்டம், பாராட்டு, அங்கீகாரம் என நிறைவாக இவ்விழா நடைபெற்றது. […]
பறை கலைஞர் வேலு ஆசான் பேட்டி
சமீபத்தில் தமிழ்நாட்டில் இருந்து மினசோட்டா வந்திருந்த பறை கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பறை கலைஞராகவும், பறை ஆசிரியராகவும் பல நாடுகளுக்கு சென்று வரும் அவருடன் பறை குறித்தும், அவருடைய பிற அனுபவங்கள் குறித்தும் இந்த உரையாடலில் பேசினோம். இந்த உரையாடலின் முதல் பகுதியை இங்கு காணலாம்.
2023இல் கவனம் ஈர்த்த பாடல்கள்
இவ்வருடம் படங்கள் நிறைய வந்திருந்தாலும் கவனத்தை ஈர்த்த பாடல்கள் என்றால் ஒப்பீட்டளவில் குறைவே. தமிழில் இவ்வருடத்தின் பெரிய வசூல் புரிந்த படங்களான ஜெயிலர் மற்றும் லியோ இரண்டிற்கும் அனிருத் இசையமைத்திருந்தார். அது போல, இந்திய அளவில் பெரிய வசூல் படைத்த படமான ஜவானுக்கும் அனிருத்தே இசை. அது அவருக்குத் தனி இசையமைப்பாளராக முதல் ஹிந்தி படமும் கூட. தமிழ்த் திரையுலகின் தற்போதைய டாப் இசையமைப்பாளர் யார் என்று இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்குத் திரையுலகில் […]