\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அன்றாடம்

ஆர் யு ஹங்ரி 2018 ஆம் ஆண்டு 5 / 10 மைல் ஓட்டம்

ஆர் யு ஹங்ரி  2018 ஆம் ஆண்டு   5 / 10 மைல் ஓட்டம்

ஆகஸ்ட்  5ம் தேதி ஆர் யு ஹங்ரி (Are you hungry MN) சார்பில் ஐந்து மற்றும் பத்து மைல்  ஓட்டப் பந்தயம் மினசோட்டா மாநிலத்தில் உள்ள ஈடன் ப்ரைரே (Eden Prairie) நகரத்திலுள்ள புர்கடோரி க்ரீக் பூங்காவில்  (Purgatory Creek Park) நடைபெற்றது. இப்போட்டியை “ஆர் யு ஹங்ரி” நிர்வாகக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்தப் போட்டியில்  வெற்றி பெற்றவர்கள் 5 மைல் ஓட்டம் முதல் இடம் ஜாக் லார்சன் (JACK LARSON) இரண்டாவது இடம் […]

Continue Reading »

ரோக்கியோவில் கோடைக்காலம்

ரோக்கியோவில் கோடைக்காலம்

கோடைக்காலச் சராசரி உஷ்ணமான 35 °C, பச்சைப் பசேல் என்ற பைன், சாலையோர வரிசையான கிங்கோ மரங்கள் மத்தியில் நடந்து செல்கிறார்கள் ரோக்கியோ நகரவாசிகள். ரோக்கியோ நகரத்தின் மையத்தில் உள்ளது பச்சை மைதானம், சக்கரவர்த்தியின் அரண்மனை, அழகிய தொங்குபாலங்கள், பச்சைப் பாசி படர்ந்து, தற்போதும் பயன்படும் கோட்டைகள், மற்றும் அழகிய செர்ரிப் பூ மரங்கள். சக்கரவர்த்தி குடும்பம் இப்போதெல்லாம் பண்டிகைகளுக்கு மாத்திரம் அரண்மனையைப் பயன்படுத்துகிறார்களாம். ரோக்கியோ நகரவாசிகளை விட, மற்ற யப்பானிய மாகாணங்களில் இருந்து வரும்  உல்லாசப் […]

Continue Reading »

கடவுளின் எல்லையற்ற அன்பு

கடவுளின் எல்லையற்ற அன்பு

     கடவுள் நம்மேல் அன்பும் இரக்கமும் நிறைந்தவர். அன்பு என்பது கடவுளின் குணமாகும்,  கடவுள் தன் அன்பைத் தம்முடைய படைப்புகளோடு எப்போதும் பகிர்ந்து கொள்கிறார். மனித குலத்திற்கான அவரது அன்பு அவரது படைப்புகளில் வெளிப்படுகிறது.       கடவுள் ஆணும், பெண்ணுமாக மனிதரை உருவாக்கினார். மனிதர்கள் பழுகிப் பெருகவும் செய்தார். தன் சாயலாக எண்ணற்ற நல்ல ஆத்மாக்களைப் பெருகச் செய்து, அவர்களைப் பரலோக ராஜ்யத்தில் சேர்த்தார்.       மனிதனைப் படைப்பதற்கு முன் கடவுள்  மனிதனுடைய தேவைகளை அறிந்திருந்து […]

Continue Reading »

தமிழ்ப் படம் 2.0

தமிழ்ப் படம் 2.0

இன்னமும் தமிழ் சினிமா சார்ந்த மேடைகளில் பிற நடிகர்களையோ, படங்களையோ பற்றி விமர்சனம் செய்து கருத்துக் கூறுவது அரிது. எதற்கு மல்லாந்து படுத்துக்கொண்டு துப்புவது, கண்ணாடி வீட்டில் கல்லெறிவது என்று காரணம் கூறுவார்கள். நிலைமை அப்படி இருக்கும் போது, பிற படங்களைக் கிண்டல் செய்து எடுக்கப்படும் ஸ்பூஃப் வகைத் திரைப்படங்கள் தமிழில் சாத்தியமா என்ற கேள்வி நெடுநாட்களுக்கு இருந்தது. அதற்கு விடையாக 2010 இல் “தமிழ்ப்படம்” வந்தது. அச்சமயம் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட அப்படம் வெற்றியடைந்து நல்ல […]

Continue Reading »

காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஜூன் 2018)

காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஜூன் 2018)

ஏப்ரலில் சினிமா ஸ்ட்ரைக் முடிய, காத்திருந்த படங்கள் எல்லாம் கடந்த இரு மாதங்களாக வர தொடங்கியது. அதனால், ஏற்கனவே வெளிவந்து ஹிட்டாகி இருந்த பாடல்களை, திரையில் காண ரசிகர்களுக்கு வாய்ப்பு அமைந்தது.   இரும்புத்திரை – முதல் முறை   விஷாலுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு அமைந்த ஹிட் திரைப்படம். டிஜிட்டல் இந்தியாவில் இருக்கும் பிரச்சினைகளைப் பேசிய திரைப்படம். யுவன் பாடல்களை விட, படத்தின் பின்னணி இசையில் கலக்கியிருந்தார். இந்த ‘முதல் முறை’ அவருடைய டிபிக்கல் சாங் […]

Continue Reading »

அமெரிக்கக் கெய்ஜின் உணவு

அமெரிக்கக் கெய்ஜின் உணவு

கடல் உணவு ரசிகரா நீங்கள்? அப்படியென்றால், உங்களுக்குக் கஜூன் வகை உணவு பற்றித் தெரிந்திருக்கலாம். தெரிந்திருந்தால், அப்படியே ஜம்ப் செய்து அடுத்தப் பத்திக்கு சென்று விடுங்கள். தெரியாதவர்களுக்கு, ஒரு சிறிய அறிமுகம். கஜூன் என்ற சமையல் முறைக்குச் சொந்தக்காரர்கள், அகாடிய இனக்குழு மக்கள். 18 ஆம் நூற்றாண்டில் இந்த மக்கள் கனடாவிலிருந்து, அமெரிக்காவின் லூசியானா மாநில சதுப்பு நிலப்பரப்பில் குடியமர்த்தப்பட்டனர். அப்போது இந்த அடிமை மக்களின் வாழ்வியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. நிலப்பரப்பு, தட்பவெட்பம், உணவு பொருட்கள் […]

Continue Reading »

பட்டமளிப்பு விழா 2018

பட்டமளிப்பு விழா 2018

மினசோட்டாவில்    உள்ள மேப்பிள் குரோவ் இந்து கோவிலில் பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரி செல்லவிருக்கும்  மாணவர்களுக்கு மே மாதம் 20 ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இவர்கள் அனைவரும் கோவில் மற்றும் கோவில் பள்ளிகளில் பணியாற்றிய தன்னார்வலத் தொண்டர்கள். இந்த விழாவில் பங்கேற்ற மாணவர்கள்  தங்களது எதிர்காலக் கல்வித் திட்டத்தைத் தெரிவித்தனர். அவர்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டி கோவில் நிர்வாகம் சார்பாக சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கோயில் பள்ளிக் […]

Continue Reading »

காலா!!

காலா!!

வாரணம் பொருத மார்பு.. வரையினை எடுத்த தோள்கள் … நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நா… தாரணி மௌலி பத்து, சங்கரன் கொடுத்த வாள், வீரம் …. இவையெல்லாம் கவிச்சக்ரவர்த்தி கம்பன் வில்லன் ராவணன் குறித்துப் புகழ்ந்து எழுதியவை. இவை தவிர, தனது கம்பராமாயாணத்திலே இன்னும் சொல்லலங்காரமாய் ராவணனைப் புகழ்ந்து – திரும்பவும் படிக்கவும், புகழப்பட்டது ராமனல்ல, ராவணன் – கம்பன் எழுதி எழுதி மாய்ந்துள்ளான். அவ்வளவு சிறப்புகள் மிக்கவன் ராவணன் என்பதில் கவிச்சக்கரவர்த்திக்கு எந்தச் சந்தேகமும் […]

Continue Reading »

காலா சொல்லும் பத்துப் பாடங்கள்

காலா சொல்லும் பத்துப் பாடங்கள்

இது காலா படத்தில் சொன்ன பாடங்கள் அல்ல. காலாவைச் சுற்றி நடப்பதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 10 பாடங்கள், தெரியாத விஷயங்களில் தலையை நுழைக்காதே – இந்தப் படத்திற்காகத் தான் ரஜினி தூத்துக்குடி சென்றிருப்பாரென்றால் அது முட்டாள்த்தனமான முடிவு என்று ரஜினியே இப்போது அறிந்திருப்பார். அதனால் இருந்த இமேஜும் டேமேஜ் ஆனது தான் மிச்சம். சினிமாவும் ரியலும் வேறு – இது ரஜினி ஒத்துக்கொண்ட விஷயம். ரஜினி படத்தில் பேசுவதை அவர் கருத்து என்று எடுக்கக் […]

Continue Reading »

தூத்துக்குடித் துயரம்

தூத்துக்குடித் துயரம்

மயானமாகக் காட்சியளிக்கிறது தூத்துக்குடி! ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விரிவாக்கத்தை எதிர்த்துத் தொடங்கிய போராட்டம் நூறாவது நாளை எட்டிய நிலையில், தூத்துக்குடி கலெக்டரிடம் மனு அளிக்கப் பேரணியாகச் சென்ற பொது மக்கள் போலீஸாரால் சுடப்பட்டு, அடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, இன்னும் பல்வேறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். 13 பேர் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், உண்மையான எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என்று தகவல்கள் வந்தவண்ணமுள்ளன. அந்தப் பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக இணையம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. அதை மீறி வரும் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad