அன்றாடம்
மோர் பான்கேக் ஆப்பம் (Buttermilk Pancake)
வட அமெரிக்காவில் மீண்டும் இலை துளிர் காலம் ஆரம்பிக்கவுள்ளது. மினசோட்டா , ஒன்ராரியோ மற்றும் அயல் வடகிழக்கு நிலங்களில் இது சர்க்கரை மேப்பிள் மரங்கள் இனிக்கும் இரசங்களை வடிக்கும் காலம். மேப்பிள் இரசச் சேகரிப்பு பூர்வீக வாசிகளும், ஸ்கந்திநேவியக் குடியேறிகளும் மகிழ்வுடன் பங்கு பெறும் ஒரு சில வாரக் குதூகலம் ஒன்றுண்டு. அது எதுவென்று கேட்கிறீர்களா? அது பஞ்சு மெத்தை போன்ற மோர் பான் கேக்கும் அதன் மேல் மெதுவாக ஊற்றிக் குழந்தைகளும், பெரியவர்களும் சுவைத்து மகிழும் […]
குளிர்காலமா? குளிக்கலாமா? (துருவக்கரடித் தோய்தல் Polar Bear Plunge 2018)
குளிர் காலத்தில் சுடுதண்ணீரில் குளிப்பதற்கே ஒரு விதமான அலுப்பு! அதுவும் மினசோட்டாக் குளிரில் மக்கள் உறைபனி ஏரியில் பனிக்கட்டியைத் துளைபோட்டு வெட்டியெடுத்து வெறும் நீச்சலுடையுடன் நீருக்குள் பாய்ந்து கடும் குளிரில் நீந்துகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? மினசோட்டா மாநிலத்தில் வாழும் ஐரோப்பியச் சந்ததியினரில் சிலருக்கு இது பனிக்காலச் சாகசப் பொழுது போக்குப் போட்டி, கூத்துக் கும்மாளம் எனலாம். மேலும் விபரங்களுக்கு பனிப்பூக்களில் வெளியான இந்தப் படைப்பைப் பார்க்கவும்: https://www.panippookkal.com/ithazh/archives/5522 2018ஆம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வின் புகைப்படங்கள் […]
ப்ளாக் பேந்தர் (Black Panther)
ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ படங்களுக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. சூப்பர் ஹீரோ படங்களில் ரசிகர்கள் சலிப்புறாமல் இருக்க இவற்றை வெவ்வேறு வகையிலும், புதுப் புதுப் பரிமாணத்திலும் காட்டப் பிரயத்தனப்படுகிறார்கள். சூப்பர் ஹீரோ எல்லையில்லா சக்தி கொண்டவன் என்பதில் இருந்து இறங்கி, அவனும் அல்லது அவளும் நம்மைப் போல ஆசாபாசம் கொண்டவர்கள் தான் என்றும், அவ்வப்போது அடியும் வாங்குவார்கள் என்றும் கடந்த சில வருடங்களாக இவர்களின் கதாபாத்திரங்கள் இந்திய செண்டிமெண்ட் படங்களுக்குக் குறைவில்லாமல் படைக்கப்படுகின்றன. ஏன் சூப்பர் ஹீரோ […]
சின்மய மிஷனீன் வண்ண கொண்டாட்டம் 2018
ட்வின் சிட்டிஸில் உள்ள சின்மய மிஷன் சார்பில் வண்ண (ஹோலி) கொண்டாட்டம் 2018 வூட்புரி நகரில் மார்ச் 3ம் தேதி கொண்டப்பட்டது. ட்வின் சிட்டிஸில் உள்ள இந்திய குடும்பம் மற்றும் உள்ளூர் பக்தர்கள் கலந்து கொண்டார்கள். அரங்கில் சிறிய கடைகள் அமைத்து உணவு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அமைப்பை ஏற்பாடு செய்து இருந்தனர். குழந்தைகளுடைய பத்திப் பாடல்களுடன் ஆரம்பித்து பலவிதமான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தாண்டியா நடன நிகழ்ச்சியுடன் முடிவுற்றது. அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படம் உங்களுக்காக: […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (மார்ச் 2018)
2018 தொடங்கியதில் இருந்து வெளி வந்த படங்களில் உள்ள சிறந்த பாடல்கள் என்று கணக்கிட்டால் குறைவு தான். முன்னணி இசையமைப்பாளர்கள் படங்கள் ஏதும் சொல்லிக் கொள்ளும்படி வரவில்லை. தவிர, கடந்த இரு வாரங்களாகப் படங்கள் எதுவுமே ஸ்ட்ரைக்கால் வெளிவரவில்லை. பார்ப்போம், போகப் போக எப்படிப் போகிறது என்று. தானா சேர்ந்த கூட்டம் – சொடக்கு மேல சொடக்கு அனிருத் இசையில் இந்த வருடம் வந்த முதல் படமான இதில் இருந்த பாடல்கள் நன்றாக ஹிட்டடித்தது. முக்கியமாக, இந்த […]
ஸ்ரீதேவி – சிவகாசி மத்தாப்பூ
சினிமாவிலும் சரி, தினசரி பேச்சு வழக்கிலும் சரி அழகுக்கு உதாரணமாக அனைவரும் சொல்வது, ஸ்ரீதேவியைத்தான். இது ஏதோ அவர் கதாநாயகியாக நடித்துவரும் காலத்தில் சொல்லப்பட்டது அல்ல. இப்போது வரை அதுதான் நிலை. அப்படி அழகின் இலக்கணமாய்த் திகழ்ந்தவர். 1963 இல் சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி, கடந்த வாரம் துபாய்க்கு ஒரு திருமணத்திற்குச் சென்ற இடத்தில் தன்னுடைய 54 ஆம் வயதில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று மரணமடைந்த செய்தி, அவருடைய ரசிகர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஸ்ரீதேவி […]
குளிரில் வெப்பக் காற்று பலூன் பயணம் 2018
குளிர்காலம் என்றாலே நமக்கு நினைவு வருவது மங்கி குல்லா, கம்பளி போர்வை ஆனால் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாநிலத்தில் ஹட்ஸன் என்ற நகரில், குளிர்காலத்தில், வெப்பக் காற்று பலூன் நிகழ்வை 29 ஆவது வருடமாக நடத்துகிறார்கள். ஜனவரி மாதக் கடைசியில் இரு தின விழாவாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். இவ்விழாவில் உள்ளுர் வியாபார நிறுவனங்களின் கண்காட்சியும், தள்ளுபடி விற்பனையும் இடம்பெற்றிருந்தது. இது போக காற்று பலூனின் இயந்திரத்தை மட்டும் பள்ளி மைதானத்தில் வைத்து அதன் செயல்முறை விளக்கத்தை அளித்தனர். […]
பத்மாவத் – திரை விமர்சனம்
மதம் – அரசியல் – சினிமா, இம்மூன்றும் எக்காலத்திலும் இல்லாத வகையில் தற்காலத்தில் ஒரு பெரும் தொடர்போடு செயல்பட்டு வருகிறது. அது இந்த ‘பத்மாவத்’ திரைப்படத்தின் மூலம் மேலும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. பிரமாண்ட இதிகாசப் படங்களுக்குப் புகழ் பெற்ற ஹிந்திப் பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, இந்த முறை கையில் எடுத்துக் கொண்டது, ராஜபுத்திர ராணியான பத்மாவதி பற்றி பதினாறாம் நூற்றாண்டில் மாலிக் முகமது ஜயாஸி என்னும் கவிஞர் எழுதிய ‘பத்மாவத்’ இதிகாசப் படைப்பை. ராணி […]
செயிண்ட் பால் குளிர்காலத் திருவிழா
1885 ஆம் ஆண்டு ஒரு நியூயார்க் பத்திரிக்கையில் செயிண்ட் பாலை (Saint Paul) குளிர்காலத்தில் மக்கள் வாழத் தகுதியற்ற இடம் என்று ஒரு பத்திரிக்கையாளர் குறிப்பிட்டு எழுதியிருந்தாராம். உடனே ரோஷம் கொண்ட செயிண்ட் பால் மக்கள் வாழ்வதற்கான தகுதி மட்டும் அல்ல, கொண்டாட்டத்திற்கும் இது ஏற்ற இடம் எனச் சூளுரைத்துத்தொடங்கியது தான் இந்தச் செயிண்ட் பால் குளிர்காலத் திருவிழா (Saint Paul Winter Carnival). 1886 இல் இருந்து ஆண்டுதோறும் நடக்கும் இந்தத் திருவிழா, இரண்டாம் உலகம் […]
தெய்வத் தமிழிசை – பாகம் 3
( * பாகம் 2 * ) “மனஸ்சேன லக்ணம் குரோரங்ரி பத்மே ததஹ் கிம் ததஹ் கிம் ததஹ் கிம் ததஹ் கிம்” என்ற ஆதி சங்கரரின் குரு அஷ்டகத்தின் வரிகளைத் துணைக் கொண்டு, குருவின் பாதங்களை சரணம் கொண்டபடி இந்த கட்டுரையைத் தொடங்குவது உசிதம் என நினைக்கிறேன். எவ்வளவு பெயர், புகழ், திடகாத்திரமான சரீரம், பணம் இருப்பினும் மனமானது குருவின் திருவடிகளை அடையாவிடில் என்ன பயன் என்ன பயன் என்ன பயன்.( ததஹ் […]