அன்றாடம்
ஆண்டாள் கல்யாணம் 2018
ஜனவரி 13ம் தேதி 2018 அன்று மினசோட்டாவில் உள்ள S V கோவிலில் ஆண்டாள் கல்யாண விழா சடங்கு, நடனம் பாட்டு போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டாள் (கோதை) ரங்கநாதரை மார்கழி மாதம் கடைசி நாள் மணமுடிப்பதாக சம்பிராதயம். இந்த விழாவை மனிதர்கள் திருமன விழா போல் சிறப்பாக நடத்தினார்கள். மார்கழி மஹோத்சவம் 2017-18 ஒரு பகுதியாக மினசோட்டா தேவகணம் அமைப்பு சார்பில் நடைபெற்றது. இந்த விழாவை கடந்த மூன்றாண்டாக மினசோட்டா தேவகணம் அமைப்பு சார்பில் “ட்வின் […]
சங்கமம் 2018
மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தும் சங்கமம் விழா, இவ்வாண்டு ஜனவரி 13ஆம் தேதியன்று ஹாப்கின்ஸ் ஹை ஸ்கூலில் கோலாகலமாக நடைபெற்றது. இது பத்தாவது ஆண்டு விழா என்பது குறிப்பிடத்தக்கது. மதியம் 12 மணிக்குச் சிறப்புப் பொங்கல் விருந்துடன் தொடங்கிய இவ்விழாவில், மினசோட்டாவில் வசிக்கும் தமிழ் மக்கள் பெருமளவில் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர். கருப்பட்டிப் பொங்கலுடன் தமிழ் பாரம்பரிய மதிய உணவு பரிமாறப்பட்டது. மதிய விருந்திற்குப் பிறகு, 2 மணிக்குத் தமிழ் தாய் […]
தெய்வத் தமிழிசை – பாகம் 2
( * பாகம் 1 * ) டிசம்பர் 30ம் தேதியன்று, லயசாரம் மற்றும் “க்ளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவினிட்டி ” (Global Organization for Divinity) இணைந்து நடத்தி வரும் Spirits of Margazhi 2018 “தெய்வத் தமிழ் இசை” நிகழ்ச்சியின் மூன்றாவது வாரமாக நடந்த கச்சேரியில் முதலில் “தேவ கானம் ” குழுவினரின் கானம் அழகாக இருந்தது . சிறிய குழந்தைகள் பாசுரம் பாடியது பக்தியோடு கூடிய பாமாலை. சங்கீத வித்துவான்கள் ஒரு அஷ்டாவதானி […]
மினசோட்டாவில் கர்நாடக சங்கீதம்
கர்நாடக சங்கீதம் என்னும் சாகரத்தில் கல்பித சங்கீதம், கல்பனா சங்கீதம் என்று இரு வேறு சாகரங்கள் உண்டு. இதில் ஒரு சாகரத்தைக் கடப்பதற்கே ஒரு ஆயுட்காலம் போதாது. இதில் இரண்டு சாகரங்களையும் கற்று, முறையாகப் பயிற்சி செய்து, அதில் தேர்ந்து, வெற்றி பெறுவதென்பது அசாத்தியமான காரியம். குருவருளும் , திருவருளும் கூட இணைந்து செல்வி.நந்தினி ஸ்ரீதர் மாதிரி சிறிய வயதிலேயே சங்கீதத்தில் தலை சிறந்த பாடகர்களாக வருவது மிகப் பாராட்டத் தக்க விஷயம். செல்வி. நந்தினி ஸ்ரீதர் […]
வேலைக்காரன்
தனி ஒருவன் படத்திற்குப் பிறகு இயக்குனர் மோகன் ராஜாவும், ரெமோ படத்திற்குப் பிறகு சிவகார்த்தி்கேயனும் இந்த வேலைக்காரனில் கைகோர்த்திருக்கிறார்கள். தங்கள் முந்தையப் படங்களில் வெற்றிப் பெற்ற இயக்குனரும் நாயகனும் தரும் அடுத்தப் படம் என்பதால் இயல்பாகவே இப்படத்தின் மீது ஒரு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்பைப் படம் பூர்த்திச் செய்ததா எனப் பார்ப்போம். கொலைகாரக் குப்பத்தில், குப்பத்து மக்களுக்கெனப் பிரத்யேக ஃஎப்.எம். சர்விஸ் தொடங்குகிறார், அம்மக்களுக்கான அக்கறையுடன் அங்கிருக்கும் படித்த வேலையில்லாத இளைஞரான சிவகார்த்திகேயன். அந்த வானொலிக்கான […]
அமெரிக்காவில் விடுமுறை 2017 கொண்டாட்டங்கள்
அமெரிக்காவில் டிசம்பர் மாதம் என்றாலே நினைவுக்கு வருவது விடுமுறை கொண்டாட்டங்கள், நத்தார் (Christmas) தினக் கொண்டாட்டம் மற்றும் சிறப்பு விருந்துகள் ஆகியவையே ஆகும். இந்தக் கொண்டாட்டங்களின்போது வண்ண வண்ண அலங்கார விளக்குகள் பலவற்றை அலங்கரித்துச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு மையக் கருத்தை வைத்து அலங்காரம் செய்வார்கள். அதுபோன்ற அலங்காரங்களிலும், கொண்டாட்டங்களிலும் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்களுக்காக:
தெய்வத் தமிழிசை
“மாதங்களில் நான் மார்கழி” என்று கீதையில் பகவான் கிருஷ்ணரே கூறி இருப்பதை நாம் அறிவோம். மார்கழி என்றாலே , அதிகாலை நேரம், கோயில் மணிகள், வண்ண வண்ணக் கோலங்கள், சூடான பொங்கல், மெல்லிய பனி, கச்சேரிகளோடு காற்றில் கலந்த சங்கீதம்மற்றும் பக்தி இவைதான் நமக்கு நினைவில் வருவது. மினசோட்டாவின் இந்த ஆண்டு மார்கழியும் அது போலவே. முழுப் பனி, சூடான பொங்கல், காற்றில் கலந்த சங்கீதம் மற்றும் பக்தியே. லயசாரம் மற்றும் “க்ளோபல் ஆர்கனைசேஷன் ஆஃப் டிவினிட்டி […]
2017 டாப் 10 சாங்ஸ்
இந்த வருடம் நாம் அவ்வப்போது பார்த்து வந்த டாப் சாங்ஸ் வரிசைகளைப் பின்வரும் இணைப்புகளில் காணலாம். ஃபிப்ரவரி 2017 ஏப்ரல் 2017 ஜூலை 2017 செப்டம்பர் 2017 நவம்பர் 2017 கீழ் வருபவை அனைத்தும் இவ்வருடம் இதுவரை வெளியான படங்களில் உள்ள பாடல்கள். ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘2.0’ போன்ற படங்களிலிருந்து பாடல்கள் வெளியாகி இருந்தாலும், படங்கள் இன்னும் வெளியாகாததால் அவற்றை இவ்வரிசையில் சேர்க்கவில்லை. பத்து பாடல்கள் தான் என்று ஒரு […]