அன்றாடம்
நம்மில் ஓர் அன்பின் ஒளி பிறந்தது…….
டிசம்பர் மாதம் என்றாலே குளிர்காலம் வந்துவிட்டது என்பதை அறிவோம். நீண்ட விடுமுறை நாட்கள் கிடைக்கும். இந்த விடுமுறை, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடும் அன்பான நேரங்களைக் கொண்டது. டிசம்பர் 25ம் தேதி உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் இயேசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நீங்கள் எல்லாரும் இறைமகன் இயேசு பிறந்த கிறிஸ்துமஸ் பண்டிகையைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுவீர்கள் என்று நினைக்கிறேன். ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன், மரியாள் என்ற ஒரு […]
அருவி – திரை விமர்சனம்
தவிர்க்கவே முடியாத, தவிர்க்க கூடாத ஒரு சினிமா தமிழில் வந்திருக்கிறது. போஸ்டர் டிசைன், டீஸர், ட்ரைலர், பாடல்கள் என ஏகத்துக்கும் எகிறிவிட்ட எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறதா இந்த அருவி என்றால், நிச்சயமாகச் செய்திருக்கிறது, சொல்லப் போனால் எல்லா எதிர்பார்ப்பையும் மீறி இருக்கிறது இந்தப் படம். ஜோக்கர், தீரன் இப்போது அருவி போன்ற நல்ல படங்களைக் கொடுக்கும் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்குப் பாராட்டுகள். இப்படி ஒரு கதையையும் காட்சியமைப்பையும் யோசித்த இயக்குனருக்கு அன்பின் முத்தங்கள்.. சரி படத்துல […]
நன்றி நவிலும் நந்நாள் ஓட்டப் பந்தயம்
ஓவ்வொரு ஆண்டும் நன்றி நவிலும் நந்நாளன்று (Thanksgiving Day) காட்டேஜ் குரோவ் நகரத்தில் 5 மைல் ஓட்டம் நடைபெறும். உள்ளூரிலிருந்து பெருமளவு மக்கள் இந்தப் பந்தயத்தில் கலந்து கொள்வர். இந்த வருடம், இந்த ஓட்டப் பந்தயத்தில் சுமார் 500 பேர் பங்கேற்றனர். இதில் வசூலாகும் தொகையை உள்ளுரில் உள்ள சில தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினர். இந்த ஓட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்களுக்கு முத்திரை பதித்த மேற்சட்டை வழங்கப்பட்டது. சீருடை போல் இதனை […]
தீரன் அதிகாரம் ஒன்று
விதவிதமான போலீஸ் கதைகள் பார்த்திருக்கிறோம். முழுக்க சினிமாத்தனமான போலீஸ் கதைகள், தினசரிக் குற்றங்களைப் பதிவு செய்த கதைகள், பிரபலக் கொலை வழக்குகள் சார்ந்த கதைகள் என வந்துகொண்டே தான் இருக்கின்றன. போலீஸ் கதை என்றால் நன்றாகக் கதை விடலாம் என்ற அதிகாரம் இயக்குனர்களுக்கு வந்துவிடும். அதிலும் தெரிந்த உண்மைக் கதைகள் என்றால் அதைப் பார்ப்பதில் ரசிகர்களுக்கும் ஒரு ஆர்வம் வந்துவிடும். தொண்ணூறுகளில் இந்த ஜானரில் செல்வமணி நட்சத்திர இயக்குனராக மிளிர்ந்தார். புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் ஆகிய […]
பக்த விஜயம்
ஒவ்வொரு யுகங்களுக்கும் ஒவ்வொரு பக்தி முறை உண்டென்பது சாஸ்திரம் வகுத்த விதிமுறை. அந்த வழியே கலியுகத்தில் இறைவனை உணர நாம சங்கீர்த்தனம் மட்டுமே போதுமானது. கலியின் ப்ரவாகத்தில் கரை சேர வழி உண்டென்றால் அது நாம சங்கீர்த்தனம் என்ற கயிறே. “சங்கீத ஞானமு பக்தி வினா” என்று த்யாகப்ரஹ்மமும், “காயன பாடிதவா ஹரி மூர்த்தி நோடிதவா ” என்ற புரந்தர தாஸரின் பாடல் வரிகளும் மனதில் வந்து போயின. ‘க்ளோபல் ஆர்கனைசேஷன் ஆஃப் டிவினிட்டி மினசோட்டா’ (Global […]
நன்றி நவிலல் நாள் விருந்து 2017
* English Version * மினசோட்டா மாநிலத்தில் நவம்பர் 25ம் தேதி “நன்றி நவிலல் நாள்” விருந்தை Dr.டேஷ் குடும்பத்தினர் மற்றும் மினசோட்டா இந்து கோவில் நிர்வாகத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விருந்துக்கு உள்ளுர் சங்க அமைப்பினர்கள், கோவில் நிர்வாகத்தினர், மாநில நிர்வாகத்தினர் மற்றும் உள்ளுர் பிரமுகர்கள் வந்து பங்கேற்றனர். இந்த விருந்தில் மாலை சிற்றுண்டி, கலைநிகழ்ச்சி, மற்றும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலை நிகழ்ச்சியில் பாட்டு, பரதம் மற்றும் குச்சிப்புடி நடன […]
சிங்கறால் பொரித்த சோறு
வட அமெரிக்கப் பண்டிகைக் காலங்கள் அண்மிக்கின்றன, இதன் போது கடலுணவு வேண்டும் தமிழர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கீழேயுள்ள சமையலைத் தருகிறோம். சிங்கறால் பொரியல் சோறு இறால், மற்றும் நண்டு, கணவாய், சிப்பி போன்ற கடல் உணவுகளுடனும் தயாரித்துக் கொள்ளலாம். கடலுணவு வகைகளின் சுவை, அவை எவ்வளவு பக்குவமாகச் சமைக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தே அமையும். தேவையானவை: 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி பப்பிரிக்கா (paprika) 1 – 2 கரண்டி கறித் தூள் 2 கோப்பை […]
காசேதான் கடவுளடா நாடகம்
அக்டோபர் ௮, 2017 , மினியாபொலிஸ் நகரைச் சிரிப்பு புயல் தாக்கியது. 1970 ல் வெளிவந்த காசேதான் கடவுளடா தமிழ்ப் படத்தை நாடகமாக்கியுள்ளார் Y Gee மகேந்திரன். அவர் நடத்தும் யுனைடெட் அமெசூர் ஆர்ட்டிஸ்ட் (United Amateur Artists) நிறுவனத்தினர் அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். ஷங்கர் கிருஷ்ணன் நடத்தும் மினசோட்டா பிரெண்ட்ஸ் கேரியோக்கி (Minnesota Friends Karaoke) என்னும் மினியாபொலிஸ் அமைப்பு இவர்களை அழைத்து வந்தது. திரு Y Gee மகேந்திரன் இந்த நாடகத்தில் தேங்காய் ஸ்ரீனிவாசன் […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (நவம்பர் 2017)
வருட இறுதியை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். வருட இறுதியில் இந்த ஆண்டில் வெளிவந்த சிறந்த பாடல்களைக் காணப் போகும் முன்பு, சென்ற இரு மாதங்களில் வந்த பாடல்களில் மனதைக் கவர்ந்த சிலவற்றைப் பார்த்து விடலாம். மகளிர் மட்டும் – அடி வாடி திமிரா பெண்களை மையமாகக் கொண்டு இயக்குனர் பிரம்மா இயக்கத்தில், நடிகர் சூர்யா தயாரித்த இப்படத்தின் இப்பாடல் வெகுக்காலத்திற்கு முன்பே வெளியாகி ஹிட்டாகி இருந்தது. இசையமைப்பாளர் ஜிப்ரான் அவ்வப்போது எங்கோ போய்விடுகிறார். வரும்போது, கவனிக்கத்தக்க பாடல்களைத் தந்துவிடுகிறார். ஜோதிகா […]