அன்றாடம்
“லக்ஷ்மி” குறும்படம்
அண்மையில் வெளியாகி, சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பல விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பியுள்ள குறும்படம் – லக்ஷ்மி. முழுநீளத் திரைப்படங்கள் பலவும் கவனிக்கப்படாமல் போய்விடும் காலக்கட்டத்தில் குறும்படம் ஒன்று மக்களைச் சென்றடைந்துள்ளது மகிழ்வளிக்கிறது. இதற்கு படத்தில் கையாளப்பட்டுள்ள கருத்தும் காரணமாயிருக்கலாம். மிகச் சராசரியான குடும்பத்தைச் சேர்ந்த லக்ஷ்மி எனும் பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவம் பற்றியது தான் கதை. கணவன், ஒரு பிள்ளை என்ற சிறிய வட்டத்துக்குள் இயந்திரமாக வாழும் லக்ஷ்மி, ஒரு சந்தர்ப்பத்தில் அந்நியன் ஒருவனின் அன்பில் […]
சொற்சதுக்கம் 6
கீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்துக்கள் கொண்டவையாகவோ அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்கள் கொண்டவையாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே உங்களுக்குத் தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம். விடைகள்
மால் ஒஃப் அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டம்
மின்னியாபொலிஸ் நகரில் உள்ள மிகப்பெரிய மால் ஒஃப் அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டம் நடைப்பெற்றது. -சரவணகுமரன்
மாலைப் பொழுதில் மயக்கும் சப்தஸ்வரங்கள்
உடல், பொருள், நாடி, நரம்பு, ஆன்மா அனைத்தும் சங்கீதம் பற்றிய நினைப்போடு துடிக்க வேண்டும் என்றால் நீங்கள் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருக்க வேண்டும். “Sapthswarangal a evening of musical enchantment ” என்ற தலைப்புக்கு ஏற்ற வாறு ஒரு “ இசையால் மந்திரித்த” மாலைப் பொழுது. கச்சேரியின் முதல் வர்ணமாக “Cool” ராகமாக ஆரம்பித்த பெஹாக் “வனஜாக்ஷி ” காதுகளில் தேன் போல் வந்தது. கம்பீரமாக வந்த “அடாணா” வில் “ஸ்ரீ மஹாகணபதி” களை கட்டியது. […]
மெர்சல்
ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. அட்லீயின் ஸ்டைல், ஏற்கனவே ஹிட்டான ஒரு படத்தைத் தற்போதைய ட்ரெண்டிற்கு மீள் – உருவாக்கம் செய்வது. மௌனராகம், சத்ரியன் என முதல் இரண்டு படங்களில் மணிரத்னத்தை ஃபாலோ செய்தவர், மூன்றாம் படமான மெர்சலில் அபூர்வ சகோதரர்கள் சாயல் கதையை, தனது குருநாதர் ஷங்கர் பட பாணியில் படமாக்கியிருக்கிறார். முதல் முறையாக, மூன்று வேடங்களில் விஜய். பத்து வேடங்களில் நடித்தாலும், விஜய் வித்தியாசம் காட்ட மாட்டார் என்று தெரியும். அவரென்ன வச்சுக்கிட்டா […]
அஹிம்சை தினம் 2017
மினசோட்டா மாநிலத்தில், இந்திய அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா மஹாத்மா காந்தியின் பிறந்த தினத்தை ஒட்டி, அக்டோபர் மாதம் 12ஆம் திகதி. அஹிம்சை தினம் (NON-VIOLENCE DAY) கொண்டாடினர். சென்ற ஆண்டைத் தொடர்ந்து, இரண்டாம் முறையாக் கொண்டாடப்பட்ட இந்த தினம், மினசோட்டா மாநிலத்தின் தலை நகரக் கட்டிட அரங்கில் நடைபெற்றது. புருஷ் கோரி இந்திய மினசோட்டா அசோசியேஷன் சார்பில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழக்கினார். மினசோட்டா கவர்னர் மார்க் டேட்டன் கையெழுத்திட்ட, மாநிலச் சான்றிதழ் வழங்கப்பட்டு இந்திய அசோசியேஷன் […]
ஆப்பிள் டோநட் பணியாரம்
வட அமெரிக்காவில் இலையுதிர் காலம் வந்து விட்டது. இதனால் இவ்விடம் இலை தழைகள் நிறம் மாறுவது ஒரு புறம்; சுவையான பழ அறுவடைகள் மறுபுறம். தமிழர் பிறந்த நிலங்களில் கறுவாப்பட்டை, ஏலக்காய் வாசம் இயல்பாகவே உள்ளது. ஆயினும், அமெரிக்காவுக்கு வருகை தந்த ஐரோப்பியக் குடிகள் கொண்டுவந்து அறிமுகப்படுத்திய ஆப்பிள் பழச் சோலைகளின் பாரம்பரியமோ தனி வகை. மென்மையான ஆப்பிள் பழ நறுமணம் கறுவாப்பட்டையுடன் கலந்து மூக்கை மொய்த்து வயிற்றையும் நாக்கையும் ஊற வைக்கும் வாசம், வட அமெரிக்காவில் […]
மின்னசோட்டாவில் இலையுதிர் வர்ண ஜாலம்
இயற்கையின் கால மாற்றங்களில் இலையுதிர் காலமானது மிகவும் ரம்மியமானது. மரங்களுக்கான உணவைச் சூரிய ஒளியில் இருந்தும், காற்றில் இருந்தும் இலைகள் தயாரிக்கும் போது, இந்தச் சமையலில் ஈடுபடும் க்ளோரொஃபில் (Chlorophyll) எனும் ரசாயனம், இலைகளுக்குப் பச்சை நிறத்தை, சூரியன் அதிக நேரம் இருக்கும் வசந்தக் காலத்திலும், கோடை காலத்திலும் கொடுக்கிறது. இது போல், தாவரங்களில் இருக்கும் பிற வகை ரசாயனங்கள், மற்ற வண்ணங்களுக்குக் காரணமாக அமைகின்றன. கரோடெனாய்ட்ஸ் (Carotenoids) என்பது மஞ்சள், ஆரஞ்சு போன்ற வண்ணங்களை வாழைப்பழம், […]
ஸ்டஃப்டு குடைமிளகாய் (Stuffed Capsicum)
சில மெக்சிகன் ரெஸ்டாரண்ட்களில் ஸ்டஃப்டு குடைமிளகாய் உணவு பதார்த்தங்களைப் பார்த்திருக்கலாம், சுவைத்திருக்கலாம். அதை நம்மூர் சுவையில் எப்படிச் செய்யலாம் என்று இங்கே காணலாம். தேவையான பொருட்கள் குடைமிளகாய் – 2 காலிஃப்ளவர் – துருவியது ஒரு கைப்பிடி அளவு பனீர் – துருவியது ஒரு கைப்பிடி அளவு சீஸ் – அரைக் கப் வெங்காயம் – பாதி பச்சை மிளகாய் – 1 இஞ்சிப் பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன் […]