அன்றாடம்
விநாயகர் சதுர்த்தி | உரையாடல்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் குறித்தும், பண்டிகை குறித்தும் திரு. மதுசூதனன், திரு. சரவணகுமரன் அவர்கள் உரையாடிய பாகம்.
டைகர் கா ஹுக்கும் ..

72 வருடங்கள், எட்டு மாதங்கள், 10 நாட்கள் – இந்தப் படம் வெளியாகும் தினம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வயது. முக்கால்வாசி மனிதர்களுக்கு, அந்த வயதில் கழிப்பறை செல்வதற்கே துணை வேண்டும். இவரால் மட்டும், இன்னும் அந்த லட்சக்கணக்கான ரசிகர்களை வசீகரிக்க முடிகிறது என்பதை நினைத்தால் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 1978இல் வெளிவந்த ‘பைரவி’ கதாநாயகனாக அவரின் முதல் படம். அதைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்துப் பெற்று, கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் என்று வைத்துக் கொள்ளலாம். […]
மரணிக்கும் மனிதம்

ஜூன் 8, 1972ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘கிம் பக்’ எனும் வியட்நாமிய சிறுமியின், போர் பதட்டத்தால், ஆடைகளின்றி தெருவில் ஓடும் புகைப்படம் ஒன்று வியட்நாம் போரை நிறுத்தக் காரணமாகயிருந்தது என்பது வரலாறு. அதே போல் இன்று, பெண்கள் இருவர், ஆடைகள் களையப்பட்டு, காமச் சீண்டல்களுடன் தெருவில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்படும் காணொளி, சமூக ஊடகங்களில் பரவி, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், பெண்களின் நிலைமைக்கு அத்தாட்சியாகப் பதியப்பட்டுள்ளது. மிக வேகமாகப் பரவிய இந்தக் காணொளி உலக […]
மணிப்பூர்

மணிப்பூர் – இந்தியாவின் எட்டு வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று. இந்தாண்டு மே மாதம் துவக்கம் முதல் இங்கு மேத்தயி எனப்படும் மேத்தி மற்றும் குக்கி/நாகா இனப்பிரிவினருக்கிடையே பல காலமாகவே இருந்து வந்த பூசல்கள் வலுபெற்று போராட்டமாக மாறத் துவங்கியது. பிரிட்டிஷ்காரர்கள் வருவதற்கு முன்பிருதே இப்பகுதியில் இனக்கலவரங்கள் பரவியிருந்தது. கிபி 33 ஆம் ஆண்டிலிருந்தே மணிப்பூர் வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. அச்சமயத்தில் மேத்தி இனக்குழுவினர், பகாங்பா எனும் மன்னரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்ததாகச் சொல்லப்படுகிறது. சனாமயிசம் (Sanamahism) எனும் […]
‘ஃபெட்னா 2023’ – தமிழர் திருவிழா

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து நடாத்திய பேரவையின் 36 வது தமிழ்ப் பெருவிழா, சாக்ரமெண்டோ, கலிபோர்னியாவில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை 2 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து பல எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பங்கெடுத்திருந்தனர். 2017 ஆம் ஆண்டுக்கான விழா, நான் வசிக்கும் மின்னசோட்டா மாகாணத்தில் இருக்கும் மினியாபோலிசு செயின்ட்பால் இரட்டை நகரில், […]
தமிழ் புத்தாண்டு விழா 2023

தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக மினசோட்டா மாநிலத்தில் உள்ள மேப்பில் குரு நகரில் அமைந்துள்ள இந்து கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்ற மாதம் ஏப்ரல் 16ஆம் தேதி இந்த தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு வழிபாடுகளுடன் ஆரம்பித்து பின்பு பக்தர்கள் அனைவரும் கந்த சஷ்டியுடன் ஆரம்பித்து பின்பு இறைவன் பாடல்களை பாடி பின்பு இறைவனுக்கு அலங்காரம் செய்து பூஜை செய்து சிறப்பாக வழிபட்டனர். பூஜை முடிந்தவுடன் அனைவருக்கும் தமிழ் பண்பாடான வாழையிலை […]
அமெரிக்காவில் ஒரு ஆம்ஸ்டர்டாம்

பெல்லா, ஐயோவா மாநிலத்தில் இருக்கும் ஒரு சிறு நகரம். இங்குச் சுமார் பத்தாயிரம் பேர் வசிக்கிறார்கள். மூர்த்திச் சிறிதென்றாலும் கீர்த்திப் பெரிது என்பார்களே, அது போல் இது சிறு ஊர் என்றாலும் இந்த ஊருக்கும் ஊர் மக்களுக்கும் குறிப்பிட்டு சொல்லும்படியான ஒரு வரலாறு உள்ளது. 1840களில் நெதர்லாந்தில் மத வழிபாடு சார்ந்து, கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒரு இனக்குழுவிற்குத் தேவாலயங்களில் வழிபடும் உரிமை மறுக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளின் காரணமாக, அந்த டச்சு மக்கள் அங்கிருந்து […]
ஒரு மாவட்டம், பல குரல்கள்

ரோஸ்மவுண்ட், ஆப்பிள் வேலி, ஈகன் ஆகிய நகரங்களில் இருக்கும் பள்ளிகளை உள்ளடக்கிய கல்வி மாவட்டமானது, ISD 196. இந்தக் கல்வி மாவட்டம் சார்பில், இங்குள்ள பள்ளிகளில் சமீபத்தில் ‘ஒரு மாவட்டம், பல குரல்கள்’ (One District, Many Voices) என்ற நிகழ்ச்சியை நடத்தினார்கள். மே மாதம் 5 ஆம் தேதியன்று இந்த நிகழ்ச்சி, ஆப்பிள் வேலி உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இப்பகுதியில் உள்ள பல்வேறு சமூகத்தினரின் இசை, நடனங்கள், பாடல்கள் கொண்ட கலை படைப்புகள், […]
அயலகத்தில் வியத்தகு தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின் அட்லாண்டாவைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் லட்சுமி தமிழ் பயிலும் மையத்தின் 36ஆம் ஆண்டு விழா கடந்த ஏப்ரல் 1, 2023 அன்று இனிதுற நடந்தேறியது. திருமிகு. லஷ்மி ஷங்கர் அவர்களின் முன்னெடுப்பில் 1987இல் தொடங்கப்பட்ட இப்பள்ளியானது தொடர்ந்து இத்தனை ஆண்டுகாலமும் இடையறாது செயல்பட்டு வருகிறது. அவரே முதல்வராக முன்னின்று நடத்தும் இப்பள்ளி இன்று 19 தன்னார்வல ஆசிரியர்களோடும், 250க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள தமிழ்ப் பிள்ளைகளோடும் இயங்கி வருகிறது. மேலும், இவ்வாண்டு […]
தமிழ் புத்தாண்டு விழா 2023

தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக மினசோட்டா மாநிலத்தில் உள்ள மேப்பில் குரு நகரில் அமைந்துள்ள இந்து கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்ற மாதம் ஏப்ரல் 16ஆம் தேதி இந்த தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு வழிபாடுகளுடன் ஆரம்பித்து பின்பு பக்தர்கள் அனைவரும் கந்த சஷ்டியுடன் ஆரம்பித்து பின்பு இறைவன் பாடல்களை பாடி பின்பு இறைவனுக்கு அலங்காரம் செய்து பூஜை செய்து சிறப்பாக வழிபட்டனர். பூஜை முடிந்தவுடன் அனைவருக்கும் தமிழ் பண்பாடான வாழையிலை […]