அன்றாடம்
மினசோட்டாத் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா 2023

மினசோட்டாத் தமிழ்ப்பள்ளியின் 15வது ஆண்டு விழா, கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதியன்று ஹாப்கின்ஸ் நகரில் இருக்கும் ஈசன்ஹவர் சமூக அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நடனம், நாடகம், இசை, பட்டிமன்றம், சிலம்பம் எனப் பல்வேறு தமிழ் மொழி மற்றும் மரபு சார்ந்த கலை நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பங்குபெற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். மதியம் 1 மணிக்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சிகள் மாலை 7 மணி வரை தொடர்ச்சியாக நடைபெற்றன. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய […]
IAMன் 50 ஆவது ஆண்டு விழா

இந்த வருடம் IAMஇன் 50 ஆவது வருடம் ஆரம்பிக்கின்றது இதை முன்னிட்டு IAM 50வது ஆண்டு விழாவும் Connect India என்ற விழாவும் சேர்ந்து கொண்டாடப்பட்டது. இந்த விழா சென்ற மாதம் 15 ஆம் தேதி ப்ளூமிங்டன் உள்ள “டபுள் ட்ரீ” என்ற தங்கும் விடுதியில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் முக்கிய நோக்கமாக 50வது ஆண்டின் IAM எவ்வாறு வளர்ந்தது என்னென்ன சாதனைகள் செய்தது என்ற முக்கிய குறிக்கோளாக இந்த விழாவைச் ஏற்பாடு செய்யப்பட்டது. […]
பரதநாட்டியத்தில் உலகச் சாதனை

பரதநாட்டியம் எனும் செவ்வியல் நடன வடிவம், இந்தியாவின் மிகத் தொன்மையான, பாரம்பரிய நடனமாகவும், பல இந்திய நடன வடிவங்களின் மூலமாகவும் கருதப்படுகிறது. ‘பரதம்’, ‘நாட்டியம்’ எனும் சொற்களின் கூட்டாக வழங்கப்பெறும் இக்கலையில், சமஸ்கிருத கூற்றுப்படி பரதம் என்ற சொல், ப – பாவம் (உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மை), ர – ராகம் (இன்னிசை), த – தாளம் (ஒத்திசைவு) என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, பாரம்பரியமாக இந்த வார்த்தை பாவங்களை(உணர்வின் வெளிப்பாடு), ராகம்(இசை) மற்றும் […]
ஹோலி 2023

வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் உள்ள மிலன் மந்திரில் மார்ச் மாதம் 12ஆம் தேதி அன்று அன்று ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத பௌர்ணமி தினத்தில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும், மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதைக் குறிக்கோளாக் கொண்டும் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து, வாழ்த்துக்களைத் தெரிவித்து, கலர்ப் பொடிகளைத் தூவியும், வண்ண நீரைப் பீய்ச்சி அடித்தும், திலகமிட்டும் […]
தமிழ்த் திருவிழா 2023

உலகத் தாய்மொழி தினத்தையொட்டி மினசோட்டாத் தமிழ்ப் பள்ளி ஆண்டுதோறும் நடத்தும் ’தமிழ்த் திருவிழா’ கடந்த இரு வருடங்களாக நோய்தொற்றுக்காலத்தில் நடைபெறாமல் இருந்தது. இவ்வாண்டு, தமிழ்ப்பள்ளி நேரடி வகுப்புகளாக நடைபெற தொடங்கியதைத் தொடர்ந்து, தமிழ்த் திருவிழா தமிழ்ப்பள்ளி வளாகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள் தமிழர் உணவுகள், இடங்கள், விளையாட்டுகள், தொழில்கள், எழுத்தாளர்கள் என வெவ்வேறு தலைப்புகளில் கண்கவர் காட்சிப்பொருட்களைச் செய்து மக்களின் பார்வைக்குக் கொண்டு வந்திருந்தனர். […]
மடமையைக் கொளுத்துவோம்

ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதைப் போல இந்தாண்டும், மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் ஊடகங்களில், தாய், தமக்கை, தங்கை, மனைவி, மகள் என தத்தம் வாழ்வில் சந்தித்த அனைத்துப் பெண்களுக்கும் விதவிதமான வடிவில் வாழ்த்துகளைச் சொல்லித் தீர்த்தனர். மறுதினமே, தன் மனைவியை சிலாகித்துப் பேசும் கணவனிடம் ‘யோவ், நேத்தே வுமன்ஸ் டே முடிஞ்சி போச்சு..’ என்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பச் சொல்வதான ‘மீம்ஸ்’ வெளிவந்து ‘லைக்ஸ்களை’ அள்ளியது. வேடிக்கையாகயிருந்தாலும் இது தான் […]
வீழும் வங்கிகள்

அண்மையில் பெரு வங்கிகள் சில நொடித்து, திவால் நிலைக்குத் தள்ளப்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது. பொதுவாகப் பங்கு வர்த்தகம், பத்திரங்கள், வீடு / மனை போன்ற அசையாச் சொத்துகளில் முதலீடு செய்யுமளவுக்குப் பொருள், அனுபவமில்லாத இல்லாத மக்கள் இருப்பதைப் பாதுகாப்பாக வைக்கவும், எதிர்காலத் தேவைகளுக்காகவும், வங்கிகளில் சேமிப்பதுண்டு. அத்தகையோரது நம்பிக்கைகளை அசைத்துள்ளது தொடர்ந்து நிகழும் வங்கிகளின் வீழ்ச்சி. அமெரிக்காவில் இதற்கு முன்பும் சில தனியார் வங்கிகள் திவாலானதுண்டு. ஆனால் ஏற்கனவே மந்தநிலை நோக்கி நகர்ந்து வரும் அமெரிக்கப் […]
துருவக்கரடித் தோய்தல் (Polar Bear Plunge – Woodbury) 2023

வடஅமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் குளிர்காலம் கடந்த டிசம்பர் முதல் கடுமையாக இருந்தபோதிலும் துருவக்கரடித் தோய்தல் (Polar Bear Plunge) என்ற போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி ஜனவரி 28-ஆம் தேதி முதல் ஆரம்பித்து மே 10ஆம் தேதி வரை, ஒவ்வொரு ஊரிலுமுள்ள ஏரிகளில் நடைபெறுகிறது. போட்டி நடைபெறும் ஏரியின் விபரத்தை இந்த முகநூல் https://www.plungemn.org/ பக்கத்தில் காணலாம். இந்தப் போட்டிகளில் முக்கிய அம்சம் நிதி திரட்டுவது. விசேஷ ஒலிம்பிக் போட்டியாளர்கள் மற்றும் காவல்துறை, தீயணைப்பு […]
சங்கமம் 2023

பொங்கல் திருநாளையொட்டி மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் சங்கமம் கலை விழா, இந்தாண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று Osseo Senior High School அரங்கத்தில் நடைபெற்றது. சிறுவர் முதல் பெரியவர் வரை பலர் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், மதியம் 1 மணி முதல் மாலை 8 மணி வரை நடந்தன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, மினசோட்டா மாநில மேலவை உறுப்பினர் திரு. ஜான் ஹாப்மேன் (John Hoffman) அவர்கள் […]