\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சுற்றுலாத் தலங்கள்

மாண்ட்ரீல் நோட்ர டாம் நெடுமாடக்கோயில் (Notre-Dame Basilica of Montréal)

மாண்ட்ரீல் நோட்ர டாம் நெடுமாடக்கோயில்  (Notre-Dame Basilica of Montréal)

கனடாவின் பிரஞ்சு மாகாணமாகிய கியூபெக்கில், பிரதான நகரங்களில் ஒன்று மாண்ட்ரீல் (Montreal).  மாண்ட்ரீல் கியூபெக் மாகாணத்தின் இரண்டாவது சனத்தொகை உடைய நகரமாகும். இந்த நகரம் மே மாதம் 17ம் தேதி, 1642 ஆம் ஆண்டு “மேரியின் நகரம்” (Ville-Marie) என்ற பெயரில் தாபிக்கப்பட்டது. மாண்ட்ரீல் நகரம் பழைய மாண்ட்ரீல், மாண்டரீல் என பிரதேச ரீதியில் பிரிக்கப்பட்டுள்ளது. பிரஞ்சு நாட்டு சல்பிசன் எனும் ரோமன் கத்தோலிக்கர் 1657 ஆம் ஆண்டு, ‘மேரியின் நகர்’ என்றழைக்கப்பட்ட  தற்போதைய மாண்ட்ரிலை வந்தடைந்தனர். […]

Continue Reading »

சாலப் பெருங்களி யிஃதே – பாகம் 1

சாலப் பெருங்களி யிஃதே – பாகம் 1

எல்லோரா குடைவரைக் குகைகள் சிறு வயதில் வரலாற்றுப் பாடத்தில் குடைவரைக் கோயில்கள் பற்றிப் படித்ததுண்டு. அவற்றில் முக்கியமானவைகளாக, உலகப் பிரசித்தி பெற்ற அஜந்தா மற்றும் எல்லோராக் குகைகளைப் படித்ததுண்டு. அவற்றை நேரில் பார்த்து மகிழும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. அந்த அனுபவம் பனிப்பூக்கள் வாசகர்களுக்காக! மஹாராஷ்ட்டிர மாநிலத்தில், ஔரங்காபாத் நகரம் ஓரளவுக்குப் பிரபலமானது. பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நகரம், இந்தியாவில் அதிவேகமாக வளரும் இரண்டாம் / மூன்றாம் ரக நகரங்களில் ஒன்றாகும். 1610 ஆம் […]

Continue Reading »

வர்ணத்தில் கிறிஸ்துமஸ்

வர்ணத்தில் கிறிஸ்துமஸ்

இருண்ட பனிக்கால விடியலின் சூரியோதயம். சோகமாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. அரை விழித்த பறவைகளின் ஆரவாரம், இன்னும் இரை தேடியபடி. இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் பாடசாலைகள் கூட வீட்டில் இருந்த படியே நடைபெறுவதால், கடந்த பத்து மாதங்களாகப் பிள்ளைகளுக்கு வீடு கிட்டத்தட்ட ஒரு சிறைச்சாலை போல மாறியிருந்தது. வீட்டுச் சிறையில் இருந்து அவர்களுக்கு ஒரு சிறிய விடுதலை கிடைப்பதையிட்டுப் பிள்ளைகள் இருவரும் காலையிலிருந்தே பெரும் ஆரவாரமாக இருந்தார்கள். எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் கொடுக்கக்கூடிய மிக மதிப்புமிக்க விஷயம் பணம் […]

Continue Reading »

மினுக்க மினசோட்டா மின்னொளி அலங்காரம் (Glow Festival)

மினுக்க மினசோட்டா மின்னொளி அலங்காரம் (Glow Festival)

மார்கழி மாத மந்த இருட்டைப் போக்கும் முகமாக வந்துள்ளது GLOW Holiday Festival. இது மில்லியன் கணக்கில் மின்னொளி அலங்காரங்களை மினசோட்டா மக்களுக்கு,குதூகலமாகத் தருகிறது. இந்த இருட்டில், ஒளி இன்பத்தை மனதில் தரும் என்பதில் ஐயமே இல்லை. இந்த நிகழ்வு மினசோட்டா fairgrounds இல் இந்த விடுமுறை காலத்தில் நடைபெறுகிறது.  Fair Grounds முகவரி: 1265 Snelling Ave. N., St. Paul, MN 55108  இதன் இன்னொரு நற்செய்தி என்னவென்றால், அதை வாகனத்தில் இருந்தவாறே குடும்பமாக, […]

Continue Reading »

அண்ணல் காந்தியின் அழகான ஆசிரமம் சேவாக்ராம்

அண்ணல் காந்தியின் அழகான ஆசிரமம் சேவாக்ராம்

தேசப்பிதா, அண்ணல் காந்தி அடிகளிடம் பற்றுக் கொண்டவர்கள்  கொல்லாமையை நேசிப்பவர்கள்,எளிமையை விரும்புவோர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் மகாராஷ்டிரா மாநிலத்தின் வர்தா (wardha)வின் அருகில் சேவாக்ராமம் எனும் கிராமத்தில் உள்ள காந்தி அடிகளின் ஆசிரமம் தான்.வாருங்கள், இதைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.12 மார்ச் 1930ல் உப்புச் சத்தியாக்ருஹத்திற்காகத் தன் 78 தொண்டர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து புறப்பட்ட காந்தி அடிகள் தண்டி யாத்திரைக்குக் கிளம்பும் போது,முழு வெற்றி கிடைத்தால்தான் இங்கு திரும்பி வருவேன் என்று முடிவெடுத்தார். 6 ஏப்ரல் […]

Continue Reading »

மினசோட்டாவில் பனிக்கால சிலை

மினசோட்டாவில் பனிக்கால சிலை

வட அமெரிக்காவில் அமைந்துள்ள மினசோட்டா மாநிலம் குளிர் மிகுந்த  பிரதேசமாகும். பனிப்பொழிவு மிக அதிகமிருக்கும். குளிர்காலத்தில் தொடர்ந்து சில நிமிடங்கள் வெளியே நின்றால் உறைந்து போய் விடக்கூடிய அளவுக்கு வெப்பநிலை பூஜ்யத்துக்கும் 50 டிகிரி குறைவாய் இருக்கும் தினங்களும் இங்குண்டு. குளிர்காலங்களில் சிறுவர்களும், பெரியவர்களும் விளையாட அவர்களுக்குத் தகுந்த வகையில் பல பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடைபெறும்,  அதில் ஒன்று தான் இன்று நாம் பார்க்கக்கூடிய பனி திமிங்கலம்.  இந்தப் பனி திமிங்கலத்தை ஆஸ்டின் (Austin),  ட்ரெவர் (Trevor), […]

Continue Reading »

சவுத் டக்கோடாவில் என்ன பார்க்கலாம்?

சவுத் டக்கோடாவில் என்ன பார்க்கலாம்?

ஒரு வழியா மினசோட்டாவில் சம்மர் தொடங்கிவிட்டது. மக்கள் எங்குப் போகலாம் என்று திட்டமிடலை ஏற்கனவே தொடங்கியிருப்பார்கள். மினசோட்டாவுக்குப் பக்கத்து மாநிலமான சவுத் டக்கோடா வாரயிறுதியில் பக்கோடா சாப்பிட்டுக்கொண்டே காரில் சென்று வருவதற்கு நல்ல சாய்ஸ். மினியாபொலிஸிலிருந்து மூன்று மணி நேரத்தில் சவுத் டகோடாவை அடைந்துவிடலாம் என்றாலும், அங்கு நாம் பார்க்க வேண்டிய இடங்களைக் காண இன்னும் அதிகத்தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்கும். அதனால், பயணத்தை அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்வது அவசியம். இனி சவுத் டக்கோடாவிலிருக்கும் காண […]

Continue Reading »

காமராஜர் இல்லம் – புகைப்படப் பதிவு

காமராஜர் இல்லம் – புகைப்படப் பதிவு

சமீபத்தில் சென்னை சென்றிருந்த சமயம், பெருந்தலைவர் காமராஜரின் இல்லத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மக்களின் பேரன்பைப் பெற்றவர் வாழ்ந்த வாழ்வின் சிறு துளியைக் காண்பதற்கு நிறைவாக இருந்தது. அங்கு கண்டதை விவரித்து எழுதத் தேவையில்லை. அங்கு எடுத்த இப்புகைப்படங்களே, விஷயங்கள் பலவற்றைக் கூறும். நகரின் மையத்தில் இருக்கும் இந்த இடத்திற்கு நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாகச் சென்று வாருங்கள். முகவரி – https://goo.gl/maps/wo18rn4YEcx 1/10, Thirumalai Pillai Road, Thirumurthy Nagar, T Nagar, Chennai, Tamil […]

Continue Reading »

2018 இலையுதிர் கால மினசோட்டா மாநில நிகழ்வுகள்

2018 இலையுதிர் கால மினசோட்டா மாநில நிகழ்வுகள்

என்ன? எங்கே? எப்பொழுது? Septobest Wabasha September 7 – October 27 Parade of Homes & Remodeling Showcase Twin Cities September 8 – 30 Grape Stomp Carlos Creek Winery, Alexandria September 14 – 16 New Ulm’s Oktoberfest New Ulm Oct 5th & 6th Oct 12th & 13th Medtronics Twin Cities Marathon St. Paul and Minneapolis October 7 […]

Continue Reading »

சிங்கப்பூரின் சிறு இந்தியா

சிங்கப்பூரின் சிறு இந்தியா

வர்த்தகக் வேலை காரணமாக பல்லாண்டுகள் கழித்து  சிங்கப்பூர் போயிருந்தேன். எனது வேலைகள் முடிந்த பிறகு சிங்கப்பூர் வாழ் நண்பன் கோபிக்குத் தகவல் அனுப்பியிருந்தேன். அவனும் மகிழ்வுடன் ஒரு மணித்தியாலத்தில் நான் இருந்த ஹோட்டலுக்கு வந்தான். என் நண்பன் கோபிக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். வேலைப் பயணங்களின் போது வேளா வேளைக்கு ஹோட்டலில் எதையாவது சாப்பிட்டுக் கொள்ளும் எனக்குத் தமிழ்ச் சமையல் தரமாகப் பிடிக்குமென்று அறிவான். எனவே நண்பன் கோபி, நாம் சிறு இந்தியாவைப் பார்க்க பாரம்பரிய […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad