வார வெளியீடு
மினசோட்டா மலையாளி சங்கத்தின் கிறிஸ்துமஸ் விழா 2023

மினசோட்டா மலையாளி அமைப்பு (Minnesota Malayalee Association) ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றது. டிசம்பர் 9ஆம் தேதி அன்று மினசோட்டாவில் அமைந்துள்ள ஹாப்கின்ஸ் சமுதாயக் கூடத்தில் (Hopkins Community Center) கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. மினசோட்டாவில் உள்ள கேரள மக்களும், இன்னும் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர். மதிய உணவுடன் ஆரம்பித்த விழாவில், அனைத்து விதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சுமார் மூன்று மணி நேரம் நாடகங்கள் மற்றும் பல்வேறு நடன […]
செம்புலம்

முன் குறிப்பு: நிஜங்களின் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் நினைவான நிழற்கதை! 1919 ஆம் வருடம், ஏப்ரல் மாதம் பதிமூன்றாம் திகதி, அறுவடை முடிந்து பஞ்சாப் மக்கள் சூரியனுக்கும், மற்ற தெய்வங்களுக்கும் நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடும் பைசாகித் திருநாள். மாலை சுமார் நான்கு மணி முப்பது நிமிடம்!!! அமிர்தசரஸ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அக்ரஹாரம். பெரும்பாலும் தென்னிந்தியாவிலிருந்து குடி பெயர்ந்த பல குடும்பங்கள் தங்கியிருந்த அந்த வீதியை அவர்கள் அக்ரஹாரம் என்று அழைத்தனர். அங்கிருந்து ஒரு ஃபர்லாங்க் தூரம் […]
விண்மீன்கள் வெடிப்பைக்களைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் முதல் செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கியுள்ளார்கள்

விண்மீன்கள் / நட்சத்திரங்கள் வெடிப்பைக்களை வெற்றிகரமாக அடையாளம் கண்டு உறுதிப்படுத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவு (A.I.) கருவியை உருவாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்மீன்கள் வெடிப்பைக்கள் ஆங்கிலத்தில் சூப்பர்நோவா (Supernova) என்பது ஒரு நட்சத்திரத்தின் மிகவும் பிரகாசமான, சக்திவாய்ந்த வெடிப்பு என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா (NASA) தெரிவித்துள்ளது. ஒரு நட்சத்திரத்தின் வாழ்நாளின் முடிவில் வெடிப்பு நிகழ்கிறது. விண்மீன்கள் வெடிப்பைக்களைக் கண்டுபிடிப்பதற்கான தற்போதைய செயல்முறை பொதுவாக இயந்திரங்கள் மற்றும் மக்கள் இரண்டையும் உள்ளடக்கியது. தொலைநோக்கிகள் இரவு வானத்தின் படங்களை […]
மினசோட்டா மாநில கட்டிடத்தில் தீபாவளி கொண்டாட்டம்

மினசோட்டா மாநிலம் முழுவதுமுள்ள இந்திய அமெரிக்கர்களுக்கு அக்டோபர் 18 ஆம் தேதி ஒரு வரலாற்றுத் தருணமாக அமைந்தது. மினசோட்டா மாநிலத்தின் மாநில ஆளுநரான கவர்னர் டிம் வால்ஸ் (Governor Tim Walz) மற்றும் துணை ஆளுநர் லெப்டினன்ட் கவர்னர் பெக்கி ஃபிளனகன் (Lt. Governor Peggy Flannigan) ஆகியோர் சேர்ந்து குத்து விளக்கு ஏற்றி இந்தத் தீபாவளி திருவிழாவைத் தொடங்கி வைத்தனர். விஷால் அகர்வால் பாடிய வேதங்களிலிருந்து சாந்தி மந்திரம் ஓதப்பட்டதுடன் கொண்டாட்டம் தொடங்கியது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு […]
டிவின் சிட்டிஸ் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி கொண்டாட்டம்

டிவின் சிட்டிஸ் தமிழ்ச் சங்கம் கடந்த அக்டோபர் மாதம், 28 ஆம் தேதியன்று “தீபாவளி கொண்டாட்டம்” என்ற நிகழ்ச்சியைத் தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த பல்சுவை கலைஞர்களுடன் இணைந்து நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பாடகர்களான மூக்குத்தி முருகன், வர்ஷா, வானதி, பாலாஜி, மற்றும் குழுவின் ஒருங்கிணைப்பாளரான கோபால் ஆகியோர் கலந்து கொண்டு இசைக்கச்சேரியினை நடத்தினர். பல புகழ்பெற்ற தமிழ்த் திரையிசைப் பாடல்களை, தங்களது அசர வைக்கும் […]
இஸ்ரேல்-ஹமாஸ் போர்

வெப்பச் சூழ்நிலை காரணமாக உலகம் கொதிநிலையை அடைந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் உணர்கிறோமோ இல்லையோ, ஆனால் கண்ணுக்கெதிரே பகை, வன்மம், பழிவாங்கும் மனப்பான்மை ஆகியவற்றால் பூமி கொப்பளித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. பல நூறாண்டுகளாக அடக்குமுறையில் சிக்கிச் சிதறுண்டு போன பாலஸ்தீனர்களின் கோபம் மற்றும் ஆற்றாமையால் துடித்துக் கொண்டிருந்த ‘டைம் பாம்’ ஒன்று பயங்கரவாதிகளின் கையில் சிக்கி வெடித்துச் சிதறியுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பியாவில் கிளம்பிய யூத எதிர்ப்பு, சியோன் இயக்கம் உருவாகக் காரணமாகயிருந்தது. இவர்களின் […]
நானே சிந்திச்சேன் – திரைப்படக் குறியீடுகள்

நேற்று நானும், ஜனாவும் வரதுவைப் பார்க்கப் போயிருந்தோம். அவன் வீட்டருகிலிருக்கும் ‘ஸ்வீட் வாட்டர் டிரெய்லில்’, ‘டிரக்கிங்’ கிளம்பினோம். கொஞ்ச தூரம் நடந்ததும் ஜனா பேச்சைத் துவங்கினான். ‘என்ன மச்சி.. உங்காளு படத்துக்குப் பூஜை போட்டாங்க போலிருக்கு?’ என்றான் என்னைப் பார்த்து. ‘எந்தப் படத்தடா சொல்ற?’, அறிந்தும் அறியாமல் கேட்டேன் நான். ‘உங்காளுன்னு அவன் என்ன ஆலியா பட்டையா சொல்லப்போறான்.. ஆண்டவரத்தான்..’, வரது பல்ஸைப் பிடித்துவிட்டான். ‘ஓ.. ‘தக் லைஃபை’ சொல்றியா. அப்டியே ‘தக்’ லுக்கு இல்ல?..’ ‘என்ன […]
இயற்கையின் அமைதியான அழகைத் தழுவுதல்

மாறிவரும் பருவங்கள் முழுவதும் அதன் அழகை வெளிப்படுத்த இயற்கை ஒரு நேர்த்தியான வழியைக் கொண்டுள்ளது. ஆறுகள், பள்ளத்தாக்குகள் மற்றும் நன்னீர் ஏரிகளில், இயற்கை உலகிற்கு ஒரு தனித்துவமான, எழில் மிகுந்த அழகியலைச் சேர்க்கும் வண்ண இலைகளின் மயக்கும் மாற்றத்தை எவரும் காணலாம். இந்த நிகழ்வு புலன்களைக் கவர்வது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுடன் ஆழமான தொடர்பைத் தூண்டுகிறது. இந்த நீர் நிலப்பரப்புகளில் மாறிவரும் இலைகளின் நிறங்கள் எவ்வாறு நம் வாழ்க்கையை வளப்படுத்துகின்றன என்பதை ஆராய்வோம்; மற்றும் இயற்கைக்கும் நமது இருப்புக்கும் […]
தமிழ்க் கலாச்சாரக் கண்ணோட்டத்தில் அமெரிக்காவில் நன்றி நவிலல்

‘நன்றி நவிலல்’ (Thanks giving) என்பது அமெரிக்கர்கள் ஒன்று கூடி தங்கள் வாழ்வில் கிடைத்த ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நேரம். நாம், தமிழ்க் கலாச்சாரக் கண்ணோட்டத்தில் இந்த நேசத்துக்குரிய விடுமுறையைச் சற்றே மாற்றியமைப்பதன் மூலம், நமது மரபுகள், சடங்குகள் மற்றும் மதிப்புகளுடன் இக்கொண்டாட்டத்தை வளப்படுத்தலாம். தமிழர் பண்பாட்டைப் பொறுத்தவரையில், கோலக் கலை, கர்நாடக இசை மற்றும் பல கலாச்சார விருந்துகள் போன்ற கூறுகளை இணைப்பது, எந்தவொரு விழாவின் ஆழத்தையும் பன்முகத்தன்மையையும் அதிகரிக்கும். இவை பலரும் ஒருங்கிணையும் சகிப்புத்தன்மையை […]