வார வெளியீடு
மரணிக்கும் மனிதம்

ஜூன் 8, 1972ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘கிம் பக்’ எனும் வியட்நாமிய சிறுமியின், போர் பதட்டத்தால், ஆடைகளின்றி தெருவில் ஓடும் புகைப்படம் ஒன்று வியட்நாம் போரை நிறுத்தக் காரணமாகயிருந்தது என்பது வரலாறு. அதே போல் இன்று, பெண்கள் இருவர், ஆடைகள் களையப்பட்டு, காமச் சீண்டல்களுடன் தெருவில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்படும் காணொளி, சமூக ஊடகங்களில் பரவி, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், பெண்களின் நிலைமைக்கு அத்தாட்சியாகப் பதியப்பட்டுள்ளது. மிக வேகமாகப் பரவிய இந்தக் காணொளி உலக […]
மணிப்பூர்

மணிப்பூர் – இந்தியாவின் எட்டு வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று. இந்தாண்டு மே மாதம் துவக்கம் முதல் இங்கு மேத்தயி எனப்படும் மேத்தி மற்றும் குக்கி/நாகா இனப்பிரிவினருக்கிடையே பல காலமாகவே இருந்து வந்த பூசல்கள் வலுபெற்று போராட்டமாக மாறத் துவங்கியது. பிரிட்டிஷ்காரர்கள் வருவதற்கு முன்பிருதே இப்பகுதியில் இனக்கலவரங்கள் பரவியிருந்தது. கிபி 33 ஆம் ஆண்டிலிருந்தே மணிப்பூர் வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. அச்சமயத்தில் மேத்தி இனக்குழுவினர், பகாங்பா எனும் மன்னரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்ததாகச் சொல்லப்படுகிறது. சனாமயிசம் (Sanamahism) எனும் […]
மனம் நாடும் மனித போக்குகள்

முன்னேற்றம் என்பது செய்பவை யாவற்றையும் துரிதமாக செய்தல்; இதற்கு இலத்திரனியல் Digital தொழில் நுட்பங்களை உபயோகித்தல் என்பது சாதாரணமாகி விட்டது. இவ்வகை நுட்பம் தெரியாவிட்டால், நாம் பின்தங்கி விட்டதாகவும் ஒரு சிந்தனை எம்மிடையே காணப்படுகிறது. நாம் மனிதர்; எமது சுபாவம், குணாதிசயம் இரண்டும் இணைந்து சமூகவியல் வாழ்வை அமைத்துக் கொள்வதே எங்கள் நோக்கம். அண்மைக்காலத்தில் எதையும் திறமையாக, துரிதமாக, இலத்திரனியல் மென்பொருளூடு செய்து முடித்து விடவேண்டும் என்ற உந்தல் இருந்து கொண்டே இருக்கிறது, இருந்தாலும் மனம் […]
பணிவாய்ப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு

கல்லூரிப் படிப்பை முடித்து, பெருங் கனவுகளுடன் வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தில் காலெடுத்து வைக்கும் இளைஞர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு உதவப்போகிறது. டோக்கியோ, யப்பானை தளமாகக் கொண்ட ஃபோரம் இன்ஜினியரிங் கிரேடுகள் மற்றும் பலவற்றின் அடிப்படையில் பொருந்தக்கூடிய தன்மையை அளவிடுகிறது சென்ற நான்கு ஆண்டுகளில் நாடு முழுவதும் 1.2 மில்லியன் பயனாளிகளைப் பெறுவதை இலக்காகக் கொண்டு, யப்பானைச் சேர்ந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களை வேலை வாய்ப்புகளுடன் பொருத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது. ஃபோரம் இன்ஜினியரிங் நிறுவனத்தின் புதிய […]
நாசாவின் புவி அறிவியல் தரவுகளை ஆய்வு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட மினசோட்டா மாணவர்

மினசோட்டாவைச் சார்ந்த மாணவரான ஜெர்விஸ் ரூவின் பெஞ்சமின், தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்-நாசா (NASA) தொகுத்தளிக்கும் புவி அறிவியல் தரவுகளை ஆய்வு செய்யும் கோடைக்கால பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது, நாசா, டெக்சாஸ் பல்கலைக்கழகத்துடன் (ஆஸ்டின்) இணைந்து நடத்தும் ‘புவி மற்றும் விண்ணியல் துறையில் மாணவர் மேம்பாடு’ (Student Enhancement in Earth and Space Science (SEES)) நடத்தும் விசேடப் பயிற்சியாகும். இப்பயிற்சியில், செயற்கைகோள் / சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நாசா பெறும் தரவுகளை, மாணவர்கள் […]
‘ஃபெட்னா 2023’ – தமிழர் திருவிழா

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து நடாத்திய பேரவையின் 36 வது தமிழ்ப் பெருவிழா, சாக்ரமெண்டோ, கலிபோர்னியாவில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை 2 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து பல எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பங்கெடுத்திருந்தனர். 2017 ஆம் ஆண்டுக்கான விழா, நான் வசிக்கும் மின்னசோட்டா மாகாணத்தில் இருக்கும் மினியாபோலிசு செயின்ட்பால் இரட்டை நகரில், […]
தமிழ் புத்தாண்டு விழா 2023

தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக மினசோட்டா மாநிலத்தில் உள்ள மேப்பில் குரு நகரில் அமைந்துள்ள இந்து கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்ற மாதம் ஏப்ரல் 16ஆம் தேதி இந்த தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு வழிபாடுகளுடன் ஆரம்பித்து பின்பு பக்தர்கள் அனைவரும் கந்த சஷ்டியுடன் ஆரம்பித்து பின்பு இறைவன் பாடல்களை பாடி பின்பு இறைவனுக்கு அலங்காரம் செய்து பூஜை செய்து சிறப்பாக வழிபட்டனர். பூஜை முடிந்தவுடன் அனைவருக்கும் தமிழ் பண்பாடான வாழையிலை […]
அமெரிக்காவில் ஒரு ஆம்ஸ்டர்டாம்

பெல்லா, ஐயோவா மாநிலத்தில் இருக்கும் ஒரு சிறு நகரம். இங்குச் சுமார் பத்தாயிரம் பேர் வசிக்கிறார்கள். மூர்த்திச் சிறிதென்றாலும் கீர்த்திப் பெரிது என்பார்களே, அது போல் இது சிறு ஊர் என்றாலும் இந்த ஊருக்கும் ஊர் மக்களுக்கும் குறிப்பிட்டு சொல்லும்படியான ஒரு வரலாறு உள்ளது. 1840களில் நெதர்லாந்தில் மத வழிபாடு சார்ந்து, கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒரு இனக்குழுவிற்குத் தேவாலயங்களில் வழிபடும் உரிமை மறுக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளின் காரணமாக, அந்த டச்சு மக்கள் அங்கிருந்து […]
ஒரு மாவட்டம், பல குரல்கள்

ரோஸ்மவுண்ட், ஆப்பிள் வேலி, ஈகன் ஆகிய நகரங்களில் இருக்கும் பள்ளிகளை உள்ளடக்கிய கல்வி மாவட்டமானது, ISD 196. இந்தக் கல்வி மாவட்டம் சார்பில், இங்குள்ள பள்ளிகளில் சமீபத்தில் ‘ஒரு மாவட்டம், பல குரல்கள்’ (One District, Many Voices) என்ற நிகழ்ச்சியை நடத்தினார்கள். மே மாதம் 5 ஆம் தேதியன்று இந்த நிகழ்ச்சி, ஆப்பிள் வேலி உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இப்பகுதியில் உள்ள பல்வேறு சமூகத்தினரின் இசை, நடனங்கள், பாடல்கள் கொண்ட கலை படைப்புகள், […]