வார வெளியீடு
அயலகத்தில் வியத்தகு தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின் அட்லாண்டாவைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் லட்சுமி தமிழ் பயிலும் மையத்தின் 36ஆம் ஆண்டு விழா கடந்த ஏப்ரல் 1, 2023 அன்று இனிதுற நடந்தேறியது. திருமிகு. லஷ்மி ஷங்கர் அவர்களின் முன்னெடுப்பில் 1987இல் தொடங்கப்பட்ட இப்பள்ளியானது தொடர்ந்து இத்தனை ஆண்டுகாலமும் இடையறாது செயல்பட்டு வருகிறது. அவரே முதல்வராக முன்னின்று நடத்தும் இப்பள்ளி இன்று 19 தன்னார்வல ஆசிரியர்களோடும், 250க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள தமிழ்ப் பிள்ளைகளோடும் இயங்கி வருகிறது. மேலும், இவ்வாண்டு […]
அடுத்த மின்வலை இணையத்தை கற்பனை செய்தல்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, முதல் முறையாக இணையம் பொதுமக்களுக்குக் கிடைத்தது. தொழில்நுட்பத்தின் பின்னால் கொஞ்சம் மாறிவிட்டது, ஆனால் இன்று செயற்கை நுண்ணறிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். 1989 புரட்சிகளின் ஆண்டு. ஜேர்மனியில் சுவர் இடிந்து கொண்டிருந்த போது, டிம் பெர்னர்ஸ்-லீ என்ற மனிதனின் மனதில் மற்றொரு சரித்திரம் உருவாக்கும் வளர்ச்சி நடந்து கொண்டிருந்தது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள புகழ்பெற்ற CERN அணு உலை ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள பிரிட்டிஷ் இயற்பியலாளர், CERN இல் உள்ள பல்வேறு நிறுவனங்கள் […]
மினசோட்டாத் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா 2023

மினசோட்டாத் தமிழ்ப்பள்ளியின் 15வது ஆண்டு விழா, கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதியன்று ஹாப்கின்ஸ் நகரில் இருக்கும் ஈசன்ஹவர் சமூக அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நடனம், நாடகம், இசை, பட்டிமன்றம், சிலம்பம் எனப் பல்வேறு தமிழ் மொழி மற்றும் மரபு சார்ந்த கலை நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பங்குபெற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். மதியம் 1 மணிக்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சிகள் மாலை 7 மணி வரை தொடர்ச்சியாக நடைபெற்றன. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய […]
IAMன் 50 ஆவது ஆண்டு விழா

இந்த வருடம் IAMஇன் 50 ஆவது வருடம் ஆரம்பிக்கின்றது இதை முன்னிட்டு IAM 50வது ஆண்டு விழாவும் Connect India என்ற விழாவும் சேர்ந்து கொண்டாடப்பட்டது. இந்த விழா சென்ற மாதம் 15 ஆம் தேதி ப்ளூமிங்டன் உள்ள “டபுள் ட்ரீ” என்ற தங்கும் விடுதியில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் முக்கிய நோக்கமாக 50வது ஆண்டின் IAM எவ்வாறு வளர்ந்தது என்னென்ன சாதனைகள் செய்தது என்ற முக்கிய குறிக்கோளாக இந்த விழாவைச் ஏற்பாடு செய்யப்பட்டது. […]
பரதநாட்டியத்தில் உலகச் சாதனை

பரதநாட்டியம் எனும் செவ்வியல் நடன வடிவம், இந்தியாவின் மிகத் தொன்மையான, பாரம்பரிய நடனமாகவும், பல இந்திய நடன வடிவங்களின் மூலமாகவும் கருதப்படுகிறது. ‘பரதம்’, ‘நாட்டியம்’ எனும் சொற்களின் கூட்டாக வழங்கப்பெறும் இக்கலையில், சமஸ்கிருத கூற்றுப்படி பரதம் என்ற சொல், ப – பாவம் (உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மை), ர – ராகம் (இன்னிசை), த – தாளம் (ஒத்திசைவு) என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, பாரம்பரியமாக இந்த வார்த்தை பாவங்களை(உணர்வின் வெளிப்பாடு), ராகம்(இசை) மற்றும் […]
ஹோலி 2023

வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் உள்ள மிலன் மந்திரில் மார்ச் மாதம் 12ஆம் தேதி அன்று அன்று ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத பௌர்ணமி தினத்தில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும், மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதைக் குறிக்கோளாக் கொண்டும் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து, வாழ்த்துக்களைத் தெரிவித்து, கலர்ப் பொடிகளைத் தூவியும், வண்ண நீரைப் பீய்ச்சி அடித்தும், திலகமிட்டும் […]
தமிழ்த் திருவிழா 2023

உலகத் தாய்மொழி தினத்தையொட்டி மினசோட்டாத் தமிழ்ப் பள்ளி ஆண்டுதோறும் நடத்தும் ’தமிழ்த் திருவிழா’ கடந்த இரு வருடங்களாக நோய்தொற்றுக்காலத்தில் நடைபெறாமல் இருந்தது. இவ்வாண்டு, தமிழ்ப்பள்ளி நேரடி வகுப்புகளாக நடைபெற தொடங்கியதைத் தொடர்ந்து, தமிழ்த் திருவிழா தமிழ்ப்பள்ளி வளாகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள் தமிழர் உணவுகள், இடங்கள், விளையாட்டுகள், தொழில்கள், எழுத்தாளர்கள் என வெவ்வேறு தலைப்புகளில் கண்கவர் காட்சிப்பொருட்களைச் செய்து மக்களின் பார்வைக்குக் கொண்டு வந்திருந்தனர். […]
மடமையைக் கொளுத்துவோம்

ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதைப் போல இந்தாண்டும், மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் ஊடகங்களில், தாய், தமக்கை, தங்கை, மனைவி, மகள் என தத்தம் வாழ்வில் சந்தித்த அனைத்துப் பெண்களுக்கும் விதவிதமான வடிவில் வாழ்த்துகளைச் சொல்லித் தீர்த்தனர். மறுதினமே, தன் மனைவியை சிலாகித்துப் பேசும் கணவனிடம் ‘யோவ், நேத்தே வுமன்ஸ் டே முடிஞ்சி போச்சு..’ என்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பச் சொல்வதான ‘மீம்ஸ்’ வெளிவந்து ‘லைக்ஸ்களை’ அள்ளியது. வேடிக்கையாகயிருந்தாலும் இது தான் […]