வார வெளியீடு
இலகுவான ஆப்பிள் பை (Apple Pie)
இந்த எளிதான ஆப்பிள் பை விஸ்கொன்சின் மாநில பல்கலைக்கழக தோழியின் தாய் அளித்த சமையற்குறிப்பு. ஆப்பிள் அறுவடை ஆரம்பிக்கும் செப்டெம்பர் மாதத்தில், இந்த இலகு முறை ஆப்பிள் பையை செய்ய விரும்புவதுண்டு. நான் பெரும்பாலும் நறுமணத்திற்கு ஜாதிக்காய் (nutmeg) சிறிதளவு சேர்க்கிறேன்; நீங்கள் விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம். தேவையானவை 9 அங்குல இரட்டை மேலோடு ஆப்பிள் பைக்கு, 1 தொகுப்பு (14.1 அவுன்ஸ்) பேஸ்ட்ரி தேவை. உள்ளூர் மளிகைக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். […]
உட்பெரி டேஸ் 2022 (Woodbury Days)
வட அமெரிக்காவில் கோடை காலம் வந்து விட்டால் போதும் மக்கள் தங்களுக்கும் சிறப்பான கொண்டாட்டங்கள், விழாக்கள் என பலவிதமான விழாக்களை சிறப்பாக கொண்டாடுவார்கள். வடஅமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள உட்பரி நகரில் ஆண்டு தோறும் உட்பெரி டேஸ் என்ற பெயரில் பெரிய திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்கு மத்தியில், பொழுதுபோக்கு விளையாட்டுக்கள், […]
மினியாபொலிஸில் ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரியை நேரில் பார்க்க வேண்டும் என்பது ஒரு பெரும் ஆசையாக ஒரு காலத்தில் இருந்தது. 2015 ஆம் ஆண்டு, சிகாகோ சென்று அந்த ஆசையைப் பூர்த்திச் செய்தாகிவிட்டது. 2020 ஆம் ஆண்டுத் திட்டமிடப்பட்டிருந்த ஏ.ஆர். ரஹ்மானின் அமெரிக்கா இசை பயணத்தில் மினியாபொலிஸ் இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சியை அளித்தது. கச்சேரிக்கு என்று வேறு ஊருக்குப் பயணம் செல்ல வேண்டாம் என்பது இதிலுள்ள உபரி மகிழ்ச்சி செய்தி. கொரோனா காரணமாக அப்பயணம் ரத்துச் செய்யப்பட்டது. இப்போது கொரோனா நிலைமை […]
வேர்களை வெறுக்காதீர்!
காலையிலிருந்து மனது சற்று பாரமாய் இருப்பதாய் உணர்ந்தாள், கோமதி. என்ன காரணம் என்று நிதானமாக சிந்தித்துப் பார்த்தபோது கூட, திடமான காரணங்கள் ஏதும் பிடிபடவில்லை. எப்போதாவது இவ்வகையான உணர்வு அவளுக்குள் மேலோங்கும். அதை அனுபவிக்கும்போதெல்லாம், வாழ்க்கை என்ன வழவழவென்று இருக்கும் தேசிய நெடுஞ்சாலையா? ஒரே சீராய் மனம் பயணிக்க. மேடு பள்ளங்கள் நிறைந்த கிராமத்து மண் ரோடுதானே என்று சமாதானம் செய்து கொள்வாள். அவள் மேசை மீதிருந்த தொலைபேசி ஒலித்தது. எடுத்தாள். […]
கருக்கலைப்புத் தடைச் சட்டம்
சில வாரங்களுக்கு முன்னர், கருக்கலைப்பு உரிமைகளுக்கான சட்டப் பாதுகாப்பை, அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ‘ரோ – வேட்’ வழக்கின் தீர்ப்பு அடிப்படையில், 1973ஆம் ஆண்டு மத்திய அரசு நிறுவியிருந்த கருக்கலைப்பு பாதுகாப்புச் சட்டம், தொடக்க நாள் முதலே பல சர்ச்சைகளைக் கிளப்பி வந்தாலும், கருத்தடைத் தொடர்பான பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து வந்தது. மத்திய அரசமைப்பின் இச்சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டதால், கருக்கலைப்பு தொடர்பான சட்டங்களை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் […]
பண்ணை வீடு
நேரம், அதிகாலை மணி இரண்டு முப்பது. பண்ணை வீட்டின் வெளிப்புற வீடாக அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த அறையில் கண்மூடிய நிலையிலேயே விழித்திருந்தார் புண்ணியமூர்த்தி. பனிரெண்டு முப்பது மணி வாக்கில் திரும்பிப் படுத்தபொழுது முதுகுக்கு கீழே ஏதோ உறுத்துவது போல் தோன்ற, கண்விழித்து துழாவியவரின் கையில் அகப்பட்டது, பேத்திக்காக வாங்கியிருந்த விரல் நீள அழகிய மார்பிள் சிற்பம். கையில் வைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தவர் அப்படியே உறங்கிப் போயிருந்தார். அப்பொழுது வந்த விழிப்புதான் இன்னமும் அவரை உறங்கவிடாமல் தொடந்துகொண்டேயிருந்தது. எண்ண […]
சாலைகளைத் தத்தெடுப்போம்
மினசோட்டாவின் சாலைகளில் பயணிக்கும் போது கவனித்திருப்பீர்கள்!! இந்தச் சாலையைத் தத்தெடுத்திருப்பது என்று ஒரு நபரின் பெயரோ, நிறுவனத்தின் பெயரோ அல்லது அமைப்பின் பெயரோ குறிப்பிடப்பட்டிருக்கும். சாலையைத் தத்து எடுப்பது என்றால் என்ன? பொதுவாக, சாலைகளை அமைப்பது, பழுது பார்ப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளை அரசு எடுத்து செய்யும். இதில் சுத்தம் செய்து பராமரிக்கும் வேலையில் பொதுமக்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் வாய்ப்பு அளிப்பதே, இந்தத் திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின்படி மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ப் பள்ளி […]
மினசோட்டாவில் இந்திய சுதந்திர தின விழா 2022
இந்தியாவின் 75வது சுதந்திரத் தினத்தை மினசோட்டாவில் உள்ள ‘இந்தியன் அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா’ (IAM) அமைப்பினர், செயின்ட் பாலில் உள்ள மாநில தலைமைக் கட்டிட மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி நடத்தினர். விழா மைதானத்தில் பல வகையான இந்திய உணவகங்கள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடங்கள், குழந்தைகள் விளையாட பல்வேறு விளையாட்டுப் பகுதிகள், மெஹந்தி கூடங்கள் என நிரம்பி வழிந்தன. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் சங்கங்களும் […]
உட்பெரி கிரிக்கெட் கோப்பை 2022
இந்தியர்களுக்கு கிரிக்கெட் என்றாலே பிடித்த விளையாட்டு என்றே கூறலாம். இந்தியாவில் அனைத்து கிராமம் முதல் நகரம் வரை, சிறுவர் முதல் பெரியவர் வரை இந்த விளையாட்டு சிறப்பாக விளையாடப்படுகிறது. இதேபோல் இப்பொழுது அமெரிக்காவிலும் இந்த விளையாட்டு மிகவும் பிரபலம் பெற்று வருகிறது. ஒவ்வொரு நகரிலும் அதற்கென்றே தனிப்பட்ட பயிற்சிப் பள்ளிகளும் மற்றும் நகரின் ஒத்துழைப்பும் கூடி பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்னும் ஒரு சில நகரங்களில் கிரிக்கெட் விளையாடுவதற்கு, தனிப்பட்ட மைதானம் அமைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வடஅமெரிக்காவில் […]