வார வெளியீடு
இலங்கை நிலவரம்

-பொருளாதாரத்தை நிலைப்படுத்த பல மாதங்கள் ஆகலாம்- இலங்கைத்தீவின் கடன்களை மறுசீரமைக்கவும், உதவி நிதிகளை மீளளிக்க முடியாமையாலும் பல மில்லியன் கணக்கான குடிமக்கள் அன்றாட வாழ்விற்கே போராடிக்கொண்டிருக்கின்றனர். இதை நாம் சாதாரண இலங்கைக் குடிமகன் வாழ்வு நிலை பற்றி எடுத்துப்பார்த்தால் பல உண்மைகள் தெரியவரும். அந்தோனிப்பிள்ளை யோசெப்பு மூன்று ஆண் மகன்மாரை உடைய அப்பா. இவர் சராசரி இலங்கை வாழ்வில் சிறந்த ஒரு தந்தையும், தமது குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள கடினமாக உழைத்து வாழும் குடிமகனும் ஆவார். பகலில் […]
டி.எம்.எஸ். 100 – எஸ்.எம்.சுப்பையா முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை

நூற்றாண்டு பிறந்தநாளைத் தொடும் பாடகர் திலகம் திரு. டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் கலை வாழ்வு பயணத்தை நினைவுகூறும் ஒரு கலந்துரையாடல். இந்தப் பகுதியில் டி.எம்.எஸ். அவர்களின் ஆரம்பக் கால வாழ்வு குறித்தும், திரையுலகில் அவர் பணியாற்றிய பல்வேறு இசையமைப்பாளர்கள் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. உரையாடியவர்கள் – ரவிக்குமார், மதுசூதனன், செந்தில்குமார், சரவணகுமரன்.
யூக்கிரேன் போரும் இந்தியாவின் போர்த்திறஞ் சார்ந்த சுயாதினமும்

ருஷ்யாவின் திட்டமிட்ட யூக்கிரேன் நாட்டின் ஆக்கிரமிப்பு உலகையே திகைக்க வைத்தது. இது பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஆசிய நாடுகளுக்கும் அதிர்வைத் தந்தது. இதனை விவரிக்க கம்போடிய பிரதமர் ஹுன் சென், நாம் தொலைதூரம் தாண்டியுள்ள சிறிய நாடு எனினும், இப்பேர்பட்ட சர்வதேச நாடுகள் மத்தியில் ஆக்கிரமிப்பு மிகவும் கவலையைத் தருகிறது என்று 2022 பிப்ரவரி மாதம் 24ம் தேதியில் குறிப்பிட்டார். ஹுன் சென் மலேசியப் பிரதமர் இஸ்மையில் சப்ரி யாக்கப் உடன் வியட்நாமிய நொம் பென் […]
விலங்கு

தமிழ் வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு நல்ல தீனி போடுவது டப்பிங் செய்யப்பட்டுத் தமிழில் வெளியாகும் ஹிந்தி வெப் சீரிஸ்கள் தான். அவற்றில் கண்டெண்ட், மேக்கிங் என்று ஒரு நேர்த்தி இருக்கிறது. தமிழில் எடுக்கப்படும் வெப் சீரிஸ் என்பது எண்ணிக்கையில் குறைவுதான். அதிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற சீரிஸ் என்பது மிகவும் குறைவு. ஆட்டோ சங்கர், நவம்பர் ஸ்டோரி, ட்ரிப்பிள்ஸ், புத்தம் புதுக் காலை, பாவக் கதைகள், நவரசா என முயற்சிகள் தொடர்ந்து அனைத்து பெரிய ஓடிடி தளங்களிலும் […]
செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2022

‘செயிண்ட் பாட்ரிக்ஸ் டே’ என்பது ஐரிஷ் நாட்டின் கொண்டாட்ட தினம். கடந்த பல வருடங்களாக மார்ச் 17ஆம் தேதி இந்த செயிண்ட் பாட்ரிக்ஸ் டே கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் பலரும் பல தினங்களுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்து இந்த விழாவைச் சிறப்பித்தனர். ‘செயிண்ட் பாட்ரிக்ஸ் டே’ தினத்தன்று நகரில் பல இடங்களில், மக்கள் பச்சைப் பசேலென்று உடைகள் அணிந்தும், பச்சை நிற அலங்காரப் பொருட்களைக் காட்சிப்படுத்தியபடியும் மிகவும் […]
ஹோலி 2022

வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள ‘மிலன் மந்திர்’ இல் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும், மார்ச் மாதம் 20ஆம் தேதியன்று ஹோலி திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஹோலி கொண்டாட்டம் குறித்த எங்களது முந்தைய ஆண்டு பதிவுகளை இங்கு காணலாம் : https://www.panippookkal.com/ithazh/archives/18284 ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் ஹோலித் திருவிழா இந்த ஆண்டும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்கவேண்டிய சூழல் மாறி, இப்பொழுது தான் வெளியே […]
ரஷ்யப் போரும் உலகப் பொருளாதாரமும்

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை, போராக உருவெடுத்து, இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்; உக்ரைனில் குழந்தைகள், வயதானோர், உடல் நலம் குன்றியோர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக அனுப்பப்பட்டு, மற்ற மக்கள் அனைவரும் ரஷ்யாவுக்கு எதிராகப் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தங்களுடன் எல்லையைப் பகிரும் உக்ரைன் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (NATO) சேருவது ரஷ்யாவின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் என ரஷ்யா அஞ்சுகிறது. கிரிமியாவை ஆக்கிரமித்து சொந்தமாக்கிக் கொண்டதைப் […]
25 ஆண்டுக் கால யுவனிசை

தமிழ் திரையுலகில் 25 ஆண்டுக் காலமாக இசையமைத்து வரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்களின் நீண்ட நெடிய இசை பயணம் குறித்த ஒரு விரிவான இசை அலசல்.
துருவக்கரடித் தோய்தல் (Polar Bear Plunge) 2022

வடஅமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் குளிர்காலம் கடந்த டிசம்பர் முதல் கடுமையாக இருந்தபோதிலும் துருவக்கரடித் தோய்தல் (Polar Bear Plunge) என்ற போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி ஜனவரி 29-ஆம் தேதி முதல் ஆரம்பித்து மே 7ஆம் தேதி வரை, ஒவ்வொரு ஊரிலுமுள்ள ஏரிகளில் நடைபெறுகிறது. போட்டி நடைபெறும் ஏரியின் விபரத்தை இந்த முகநூல் https://www.plungemn.org/ பக்கத்தில் காணலாம். இந்தப் போட்டிகளில் முக்கிய அம்சம் நிதி திரட்டுவது. விசேஷ ஒலிம்பிக் போட்டியாளர்கள் மற்றும் காவல்துறை, தீயணைப்பு […]
ஹிருதயம்

இன்றைய இணைய உலகில் கொண்டாட்டங்களுக்குப் பெரிய காரணங்கள் தேவையில்லை. மனிதர்களுக்கு மட்டும் பிறந்தநாள், திருமண நாள் கொண்டாடுவதில்லை. படங்களுக்கும் ஆண்டுவிழா கொண்டாடுகிறார்கள். அப்படிச் சமீபத்தில் ”பூவே உனக்காக” படம் வெளியாகி 26 ஆண்டுகள் எனச் சில பதிவுகளைக் காண முடிந்தது. அப்படத்தைத் திரையரங்கில் பார்த்த நினைவுகள் வந்தன. அவ்வயதில் படத்தின் நகைச்சுவைக் காட்சிகளை ரசித்தது நினைவுக்கு வந்தது. படத்தின் இறுதிகாட்சியில் விஜய் பேசும் வசனங்களுக்குத் திரையரங்கம் ஆர்பரித்தது நினைவுக்கு வந்தது. ஊருக்குள்ளே இவ்வளவு காதல் தோல்வி கேசுகள் […]