வார வெளியீடு
திரைக் கவிஞர்கள் பார்வையில் அழகு – 3

நமக்கு எது அழகாகத் தெரிகிறது? எது நமக்கு ஆனந்தத்தைத் தருகிறதோ அதைத்தான் அழகு என்கிறோம். நாம் திரும்பத் திரும்ப விரும்பிப் பார்க்கும்படியாக ஒன்று இருந்தால் அது அழகு என்று அர்த்தம். அதாவது, அழகு பார்வையில் மட்டுமே உள்ளதாக நினைக்கிறோம். கண்களின் வழியே நுகரப்படும் அனுபவம் இன்பமளித்தால் அதனை அழகு என வகைப்படுத்துகிறோம். ஆனால் அன்பு ஊற்றெடுக்கும் பட்சத்தில், புற ரூபத்தைக் கடந்த அழகை உணர்கிறோம். உலக அழகிகள் நிறைந்திருக்கும் மேடையில், அன்னை தெரசா வந்து நின்றால் மற்றவர்களைவிட […]
தமிழ் புத்தாண்டு விழா 2024

மினசோட்டா மாநிலத்தில் உள்ள மேப்பிள் குரோவ் நகரில் அமைந்துள்ள இந்து கோவிலில் தமிழ்ப் புத்தாண்டு விழா சிறப்பாக ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்பட்டது. தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகளுடன் இந்த விழா கொண்டாடப்பட்டது. தமிழர் விழா என்றாலே மிகவும் சிறப்பு சாப்பாடு இருக்கும் என்று எதிர்பார்ப்பை போல் இந்த வருட தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இந்துக் கோவிலில் தன்னார்வலர் குடும்பங்கள் சேர்ந்து வாழை இலை விருந்தைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் 800க்கு மேற்பட்டவர்கள் வாழை […]
நானோ பிளாஸ்டிக் எனும் அசுரன்

சமீபத்தில் ‘நானோ பிளாஸ்டிக்குகள்’ மனித உடலுக்குள் நுழைந்திருப்பதைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. உண்ணும் உணவு, குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று வழியாக மனித உடலுக்குள் நுழையும் இவ்வகை மிக நுண்ணிய (மீநுண்) பிளாஸ்டிக் துகள்கள் செரிமானப் பாதை அல்லது நுரையீரலின் திசுக்கள் வழியாக இரத்த ஓட்டத்தில் கலந்து, உயிரணுக்களுக்கு தீங்கு உண்டாக்கும் செயற்கை இரசாயனங்களைப் பரப்புகின்றன என்று நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள். கொலம்பியா பல்கலை (நியு யார்க்) மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலை […]
நானே சிந்திச்சேன் – ஜனநாயகத் திருவிழா

வீட்டுக் காலண்டர், அன்றைக்கு என்ன கிழமைன்னு சொல்லுதோ இல்லையோ, ஜனாவிடமிருந்து ஃபோன் வந்தால் அது ஞாயிற்றுக்கிழமையென்று அடித்துச் சொல்லலாம். ஃபோனை எடுத்து ‘ஹலோ’வென்று சொல்லும் முன்னரே “மச்சி .. லைன்ல யாரு இருக்குறதுன்னு சொல்லு?” என்றான். “இதென்னடா கேள்வி.. நீ ஃபோன் போட்டா நீ தான் லைன்ல இருப்ப .. கூட, வீணா போன வரது வேணா இருப்பான்..” “என்னடா இப்டி பொசுக்குனு இன்சல்ட் பண்ணிட்ட.. நல்ல வேளை அவன இன்னும் நான் ‘கான்ஃப்ரன்ஸ்’ பண்ணல.. இது […]
தமிழ் கலைகளைக் காக்கும் மினசோட்டா – திரு. பாவேந்தன் ராஜா

பன்முகத் தமிழ் மரபு கலை வித்தகர் திரு. பாவேந்தன் ராஜா பேட்டி பரதம், கரகம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறை, சிலம்பம் எனத் தமிழ் மரபு கலைகள் பலவற்றிலும் தேர்ச்சி பெற்று, ஆய்வுகள் செய்து, மாணவர்களுக்குக் கற்று கொடுத்து வரும் திரு. பாவேந்தன் ராஜா அவர்களுடன் ஓர் இனிய உரையாடல்.
சித்திரை வருடப் பிறப்பு

சூரியன் மேஷ இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். தமிழில் சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் வரும் “ஏப்ரல்” மாதம் 14 ஆம் நாள் முதல் “மே” மாதம் 14 ஆம் நாள் வரை தமிழில் “சித்திரை” மாதமாகும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும் என்ற நம்பிக்கை காலங்காலமாக எம்மவரிடம் நிலவி வருவதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் […]
மனத்தை ஆண்ட லட்சுமி தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா (மார்ச் 2024)!

இரு நண்பர்கள் வலைச்செயலி மூலம் வெகு நாட்களுக்குப் பின்னர் உரையாடுகிறார்கள். தமிழகத்தில் ஒன்றாகப் படித்து, வேலை பார்த்துப் பின்னர் உலகத்தின் இரு வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வேரூன்றியவர்கள். பேச்சு அலுவலக வேலை, சினிமா, வீட்டுப் பராமரிப்பு முதலியவற்றைக் கடந்து குழந்தைகள், அவர்களுடைய படிப்பு ஆகியவற்றை நோக்கிச் செல்கிறது. “எல்லாம் நல்லாப் போயிட்டு இருக்கு, ஆனா, பசங்க மெதுவாத் தமிழை மறந்திடுவாங்களோனு தோணுது.” “ஏன், உங்க ஊர்ல தமிழ்ப் பள்ளியோ இல்ல தமிழ்ச் சங்கம் மாதிரி அமைப்புகளோ இல்லியா?” […]