வார வெளியீடு
தீபாவளிக் கொண்டாட்டம் 2023
அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில், மினியாபோலிஸ் நகரின் புறநகர்ப் பகுதியான மேப்பிள் க்ரோவில் அமைந்துள்ள இந்துக் கோவிலில் தீபாவளித் திருநாள் 2023 அக்டோபர் 15ஆம் திகதி கொண்டாடப்பட்டது. பல தலைவர்கள், உள்ளூர்ப் பிரமுகர்கள் மற்றும் இந்திய மக்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்த விழாவை மிகவும் சிறப்பித்தனர். கோவிலின் மூத்த அர்ச்சகரான திரு. முரளி பட்டரின் பூஜையுடன், தலைவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைக்க, இந்த விழா தொடங்கப்பட்டது. கோவில் நிர்வாகத்தினர் வரவேற்புரை வழங்க, உள்ளூர்ப் பிரமுகரான டாக்டர் […]
இறைத்தூதர்
அறைந்தேன் ஆணியதை மிகச்சிறிதாய், படம் மாட்ட! அது சற்றே விலகி சுண்டுவிரல் பதம் பார்க்க, அழுதேன் சுருண்டு விழுந்தே, விளைந்த வலி மாற! அந்த வலி சற்றே நீங்க, சடுதியில் மனம் நினைக்க, அகத்தினிலே திருவுருவாய் ஆண்டவர் மலர்ந்தருள, அவர்மேனி சிலுவையிலே ஆணிகளால் நிறைந்தறைய, அங்கமெலாம் உதிரமுமாய் அணிவித்த முள்கிரீடமென, அவயமெலாம் வலித்திருக்க அவைகருதா நகைப்புற்ற அவதார புருஷரவர் அமைதியாய் அகிலமுய்ய அபயமென்றே இறங்கிவந்த அன்புருவாம் இறைத்தூத! அவதரித்த நாளிதிலே அங்கமுழுதும் புழுதிபட அறிந்த […]
கிறிஸ்துமஸ் மனோநிலை
கிறிஸ்துமஸ் மதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கொண்டாட்டம். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் கொண்டாடப்படும் விடுமுறையான நத்தார் அல்லது கிறிஸ்துமஸ்மற்றும் அதனுடனான மனோதத்துவ மகிமை தமிழர்களாகிய எமக்கும், ஏனையவர்க்கும் ஆச்சரியத்தின் ஆழ்ந்த உணர்வைக் கொடுக்கக் கூடியது. இது பலருக்கு ஆழ்ந்த மத முக்கியத்துவத்தைக் காட்டுவதாக இருந்தாலும், கிறிஸ்துமஸ் மனோநிலையானது மத நம்பிக்கைகளின் எல்லைகளுக்கு அப்பால் நீண்டுள்ளது. மகிழ்ச்சி, இரக்கம், ஒற்றுமை மற்றும் கொடுக்கும் மனப்பாங்கு ஆகியவற்றின் உலகளாவிய கொண்டாட்டத்தைத் தழுவுகிறது. இந்தக் கட்டுரையில், கிறிஸ்துமஸ் ஆவியின் சாராம்சம், […]
இயேசு பிறப்பு நற்செய்தி
ஆண்டின் இறுதியும் – புதிய ஆண்டு புகுமுன் நிகழும் ஆண்டவர் பிறப்பு நற்செய்தியும் ஆவல் தூண்டிட ஆயிரம் வர்ண விளக்குகள் ஆதவன் அடங்க மின்னி ஆகாயம் ஒளிர்ந்து ஆனந்தம் பொங்கிட ஆடம்பரத் திருவிழா ஆட்டங்கள் களைகட்ட ஆன்ம இசை விருந்துகள் ஆசையாய் அரங்கேற ஆகம வார்த்தையானவரை ஆனந்த பாசுரம் பாடி ஆலயத்திலும் அகத்திலும் ஆராதித்துப் போற்றிட ஆதி இல்லாதோன் மகனே ஆன்ம நேசராய் அகிலம் காக்க ஆவியார் அன்னை மரியை ஆட்கொள்ள […]
மினசோட்டா மலையாளி சங்கத்தின் கிறிஸ்துமஸ் விழா 2023
மினசோட்டா மலையாளி அமைப்பு (Minnesota Malayalee Association) ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றது. டிசம்பர் 9ஆம் தேதி அன்று மினசோட்டாவில் அமைந்துள்ள ஹாப்கின்ஸ் சமுதாயக் கூடத்தில் (Hopkins Community Center) கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. மினசோட்டாவில் உள்ள கேரள மக்களும், இன்னும் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர். மதிய உணவுடன் ஆரம்பித்த விழாவில், அனைத்து விதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சுமார் மூன்று மணி நேரம் நாடகங்கள் மற்றும் பல்வேறு நடன […]
செம்புலம்
முன் குறிப்பு: நிஜங்களின் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் நினைவான நிழற்கதை! 1919 ஆம் வருடம், ஏப்ரல் மாதம் பதிமூன்றாம் திகதி, அறுவடை முடிந்து பஞ்சாப் மக்கள் சூரியனுக்கும், மற்ற தெய்வங்களுக்கும் நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடும் பைசாகித் திருநாள். மாலை சுமார் நான்கு மணி முப்பது நிமிடம்!!! அமிர்தசரஸ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அக்ரஹாரம். பெரும்பாலும் தென்னிந்தியாவிலிருந்து குடி பெயர்ந்த பல குடும்பங்கள் தங்கியிருந்த அந்த வீதியை அவர்கள் அக்ரஹாரம் என்று அழைத்தனர். அங்கிருந்து ஒரு ஃபர்லாங்க் தூரம் […]
விண்மீன்கள் வெடிப்பைக்களைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் முதல் செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கியுள்ளார்கள்
விண்மீன்கள் / நட்சத்திரங்கள் வெடிப்பைக்களை வெற்றிகரமாக அடையாளம் கண்டு உறுதிப்படுத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவு (A.I.) கருவியை உருவாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்மீன்கள் வெடிப்பைக்கள் ஆங்கிலத்தில் சூப்பர்நோவா (Supernova) என்பது ஒரு நட்சத்திரத்தின் மிகவும் பிரகாசமான, சக்திவாய்ந்த வெடிப்பு என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா (NASA) தெரிவித்துள்ளது. ஒரு நட்சத்திரத்தின் வாழ்நாளின் முடிவில் வெடிப்பு நிகழ்கிறது. விண்மீன்கள் வெடிப்பைக்களைக் கண்டுபிடிப்பதற்கான தற்போதைய செயல்முறை பொதுவாக இயந்திரங்கள் மற்றும் மக்கள் இரண்டையும் உள்ளடக்கியது. தொலைநோக்கிகள் இரவு வானத்தின் படங்களை […]
மினசோட்டா மாநில கட்டிடத்தில் தீபாவளி கொண்டாட்டம்
மினசோட்டா மாநிலம் முழுவதுமுள்ள இந்திய அமெரிக்கர்களுக்கு அக்டோபர் 18 ஆம் தேதி ஒரு வரலாற்றுத் தருணமாக அமைந்தது. மினசோட்டா மாநிலத்தின் மாநில ஆளுநரான கவர்னர் டிம் வால்ஸ் (Governor Tim Walz) மற்றும் துணை ஆளுநர் லெப்டினன்ட் கவர்னர் பெக்கி ஃபிளனகன் (Lt. Governor Peggy Flannigan) ஆகியோர் சேர்ந்து குத்து விளக்கு ஏற்றி இந்தத் தீபாவளி திருவிழாவைத் தொடங்கி வைத்தனர். விஷால் அகர்வால் பாடிய வேதங்களிலிருந்து சாந்தி மந்திரம் ஓதப்பட்டதுடன் கொண்டாட்டம் தொடங்கியது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு […]
டிவின் சிட்டிஸ் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி கொண்டாட்டம்
டிவின் சிட்டிஸ் தமிழ்ச் சங்கம் கடந்த அக்டோபர் மாதம், 28 ஆம் தேதியன்று “தீபாவளி கொண்டாட்டம்” என்ற நிகழ்ச்சியைத் தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த பல்சுவை கலைஞர்களுடன் இணைந்து நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பாடகர்களான மூக்குத்தி முருகன், வர்ஷா, வானதி, பாலாஜி, மற்றும் குழுவின் ஒருங்கிணைப்பாளரான கோபால் ஆகியோர் கலந்து கொண்டு இசைக்கச்சேரியினை நடத்தினர். பல புகழ்பெற்ற தமிழ்த் திரையிசைப் பாடல்களை, தங்களது அசர வைக்கும் […]