வார வெளியீடு
எண்பதிலும் ஆசை வரும்

என்னது எண்பதில் ஆசையா? அது என்ன ஆசை? இந்தியாவில் ஐம்பத்தெட்டு அல்லது அறுபது வயதில் வேலையிலிருந்து ஓய்வு பெற்று நிம்மதியான வாழ்க்கை வாழ்பவர்களைப் பார்த்து வளர்ந்த நமக்கு இந்தப் புதிய உலகம் வியப்பாக உள்ளது. நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்று புரிந்திருக்கும் என நம்புகிறேன். வாருங்கள், இந்த வியப்பைப் பார்க்க உலகைச் சுற்றி வருவோம். அமெரிக்கா அமெரிக்க அதிபர் பைடன் இந்த ஆண்டு எண்பத்தோரு வயதை எட்டுகிறார். அவருக்கு ஞாபக மறதி அதிகம் உள்ளது என […]
நானே சிந்திச்சேன் – கிரகப்பிரவேசங்கள்

சென்ற ஞாயிறன்று ஃபோன் போட்டு அரட்டையடித்துக் கொண்டிருந்த ஜனா, திடிரென்று, “வரதுக்கு ஃபோன் பண்ணா எடுக்கவே மாட்டேன்றான்.. ஒரு நிமிஷம் இரு.. கான்ஃப்ரன்ஸ் போட்டுப் பாக்கலாம் “ என்று சொல்லிவிட்டு என் பதிலுக்குக் கூட காத்திராமல் வரதுவை அழைத்துவிட்டான். சில நிமிடங்களில் “சொல்லுங்கடா..எப்டி இருக்கீங்க” என்று கேட்டுக் கொண்டே வரது இணைந்துகொண்டான். “என்ன மாப்ளே … ஆளப் பிடிக்கவே முடில .. பயங்கர பிசி போல” என்றான் ஜனா. “ஆமாடா மச்சி .. வரிசையா கிரகப்பிரவேசமா […]
பன்முகத் தமிழ் மரபு கலை வித்தகர் திரு. பாவேந்தன் ராஜா பேட்டி

பன்முகத் தமிழ் மரபு கலை வித்தகர் திரு. பாவேந்தன் ராஜா பேட்டி பரதம், கரகம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறை, சிலம்பம் எனத் தமிழ் மரபு கலைகள் பலவற்றிலும் தேர்ச்சி பெற்று, ஆய்வுகள் செய்து, மாணவர்களுக்குக் கற்று கொடுத்து வரும் திரு. பாவேந்தன் ராஜா அவர்களுடன் ஓர் இனிய உரையாடல்.
கலைக்கு மயங்காதவர் மனிதரே அல்ல!! – வேலு ஆசான்

பறை கலைஞர் மற்றும் ஆசிரியர் திரு. வேலு ஆசான் அவர்களுடனான உரையாடலின் இப்பகுதியில் திரைத்துறையில் அவருக்குக் கிடைத்த வாய்ப்புகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். இந்த உரையாடலின் காணொலியை இங்கு காணலாம்.
ஆரூர் பாஸ்கர் எழுதிய “வனநாயகன்’’ இது ஒரு சதிவலை

உலகில் எல்லோருடைய தலைகளுக்குள்ளும் நிறையக் கதைகள் தேங்கிக் கிடக்கின்றன, சிலர் அவற்றை அவ்வப்போது மற்றவர்களுடன் பகிர்ந்து தங்கள் தலைப் பாரத்தைக் குறைத்துக்கொள்கின்றனர், இன்னும் பலர் அதை வெளியில் சொல்லத் தெரியாமல் அப்படியே தலைக்குள் குப்பையாகத் தேக்கி வைத்து தம்முடனேயே அதையும் புதைத்து விடுகின்றனர். இதில் நான் சொன்ன முதல்ரகம்தான் இந்த ‘வனநாயகன்’ நாவல், 2016 இல் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்த இந்த நாவலை இன்றுதான் வாசிக்கும் வாய்ப்பு பெற்றேன். இதை எழுதியவர் ஆரூர் பாஸ்கர், இவர் […]
சங்கமம் 2024

மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் பொங்கல் விழாவான ‘சங்கமம்’, இந்தாண்டு ஹாப்கின்ஸ் மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி மாதம் 13ஆம் தேதியன்று நடைபெற்றது. மதியம் 12:30 மணியளவில் தொடங்கிய இவ்விழா, இரவு ஒன்பது மணி வரை நடைபெற்றது. தமிழ் மரபு சார்ந்த கலை நிகழ்ச்சிகள், திரைப்பாடல்களுக்கான நடன நிகழ்ச்சிகள், குழந்தைகள் பங்கேற்ற மலரும் மொட்டும், தன்னார்வலர்களுக்கான விருது, போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு என இடைவிடாமல் ஆட்டம், பாட்டம், பாராட்டு, அங்கீகாரம் என நிறைவாக இவ்விழா நடைபெற்றது. […]
சுறை வேறு!

“ஏன்னா, நோட் பண்ணேளா நம்ம பாரதிய? நேத்து அந்த சினிமாவுக்குப் போய்ட்டு வந்ததுல இருந்து ஒரே டல்லா இருக்காளே?” ஹாலில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்த கணேஷைக் கேட்டுக் கொண்டே அடுக்களைக்குள்ளிருந்து வெளியே வந்தாள் லக்ஷ்மி. டி.வி.யில் ரங்கராஜ் பாண்டே வழக்கம்போல் அந்த தேவேந்திரனைப் பிரித்து மேய்வதை ரசித்துக் கொண்டே, கவனத்தை டி.வி.யை விட்டு விலக்காமல், சற்றும் ஈடுபாடில்லாமல் “என்னடி சொல்ற?” என்று கேட்டான் கணேஷ். “அதானே, நான் சொல்றதுல என்னக்கு கவனமிருந்துது உங்களுக்கு; எப்பப்பாத்தாலும் ஏதோ […]
பறை கலைஞர் வேலு ஆசான் பேட்டி

சமீபத்தில் தமிழ்நாட்டில் இருந்து மினசோட்டா வந்திருந்த பறை கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பறை கலைஞராகவும், பறை ஆசிரியராகவும் பல நாடுகளுக்கு சென்று வரும் அவருடன் பறை குறித்தும், அவருடைய பிற அனுபவங்கள் குறித்தும் இந்த உரையாடலில் பேசினோம். இந்த உரையாடலின் முதல் பகுதியை இங்கு காணலாம்.
தமிழ் மொழிப் பயன்பாடு அது வாழும் கலாச்சார கலைப்பொருள்

எமது மொழி, ஒரு சிக்கலான மற்றும் ஆற்றல்மிக்க தகவல்தொடர்பு அமைப்பாக, மனித கலாச்சாரத்தின் வளமான திரைச்சீலைக்கு, வாழும் சான்றாக செயல்படுகிறது. காலப்போக்கில் உறைந்திருக்கும் செயலற்ற அருங்காட்சியகத்தைப் (நூதனசாலை) போலன்றி, மொழி தொடர்ந்து உருவாகி, தழுவி, அதன் பேச்சாளர்களின் சமூக மாற்றங்கள் மற்றும் மதிப்புகளைப் பிரதிபலிக்கிறது. மொழியியல் அருங்காட்சியகத்தில் (நூதனசாலை) காட்சிக்குத் தள்ளப்படுவதற்குப் பதிலாக, மொழிப் பயன்பாடு என்பது ஒரு கலாச்சார, உயிருள்ள பொருளாகும் என்ற கருத்தை இந்தக் கட்டுரை ஆராய்கிறது. மொழியின் வாழும் இயல்பு மொழி என்பது […]