ஆதரவாளர்கள் பக்கம்
அந்திப் பூக்கள்
தாராபாய் முதியோர் இல்லத்திற்கு அந்த சிட்டியில் நல்ல பெயரும் புகழும் உள்ளது. இரண்டு முறை தன் சமுதாயத் தொண்டுகளுக்காக தேசிய விருது பெற்ற நிறுவனமும் கூட. பெரிய மாளிகை, நாலு பக்கமும் விசாலாயமாய் வளர்ந்த தென்னை , மா வேப்ப மரங்கள். பக்கத்தில் தாமரைகளுடன் ஓர் அழகிய குளம், அதைச் சுற்றி பூங்கா. அதில் நாற்காலிகள், பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. மரத்தோடு இணைந்த பூக்கொடிகள், அதில் அழகாய்ச் சத்தம் செய்து கொண்டுள்ள வண்ண வண்ணப் பறவைகள். சுமார் காலை […]
பானு டீச்சர்
பானு டீச்சர் – எல்லோரையும் தலை நிமிர்ந்து பார்க்கவைத்த ஒரு நபர். ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்கிற இலக்கணம் வகுத்தவர் என்றால் அது டாக்டர் ராதாகிருஷ்ணன் என எல்லோரும் சுலபமாக சொல்லிவிடுவார்கள். ஆனால் ஒருஆசிரியை எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை புதியதாக வகுத்துக்கொண்டு இருப்பவர் பானு டீச்சர் என்றுதான் அங்கு இருப்பவர்கள் சொல்வார்கள். ஒரு நடிகர் எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் , என்ன அடை மொழி வைத்துக் கொண்டாலும் , பொது மக்கள் […]
அபியும்..அம்மாவும்..
நாய் வளர்க்க வேண்டும் என்று திடீரென்று ஒரு நாள் அபிக்குத் தோன்றி விட்டது. ” அம்மா..நம்ம வீட்டுல நாய் வளர்க்கலாம்மா..” என்றாள் சமையலறையில் வந்து கொஞ்சிக் கொண்டு. ‘அதான் உன்னை வளர்க்கிறோமே..போதாதா..” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் சொல்லவில்லை.. ” நாயெல்லாம் ரொம்பக் கஷ்டம் அபி..நம்மால் முடியாதும்மா.. ” “ஏன் முடியாது..என் ஃப்ரெண்ட்ஸ் எல்லார் வீட்டுலேயும் வளர்க்கிறா ? ஸ்கூல்ல அவங்கவங்க அவங்கவங்க நாயைப்பத்திச் சொல்லும்போது எனக்கு எத்தனை ஆசையா இருக்கு தெரியுமா..” ” நீ ஸ்கூலுக்கு […]
இங்கேயும் … இப்போதும் ….
“டேய்… உங்க பாண்டிச்சேரியில தெருவுக்கு நாலு ஆஸ்பிட்டல் கூட இருக்கலாம். ஆனா… அங்க எத்தன ஆஸ்பிட்டல் இருந்தாலும், பெரியப் பெரிய சர்ஜெரிக்கெல்லாம் அங்க இருந்து பெரும்பாலானவங்க சென்னைக்குத்தாண்டா வராங்க. மாஸ்டர் செக்-அப் செஞ்சிக்கப்போறேன்னு சொல்ற…. பேசாம கெளம்பி இங்க வாடா. ஒரே நாள் தான். எட்டு ரூவால இருந்து பத்து ரூவாக்குள்ள முடிஞ்சிடும். ” குமரேசன், சந்தானத்திடம் வம்படித்தான். “குமரேசா… நீ சொல்றதெல்லாம் சரிதான். இங்கியே கூட எனக்கு தெரிஞ்ச நர்ஸ் ஒருத்தவங்க, சென்னைல போய் செய்துக்கிட்டா… […]
நிழல் படங்களும்…. நிஜ ஜடங்களும்….!
இந்தச் சிறுகதையானது, தமிழர் வாழ்வியலில், வசதி – வாய்ப்புக்களின் அடிப்படையால், தோன்றும் போலித்தனமான ஏற்றத்தாழ்வு மனப்பான்மையானது, ஆங்கே கீழ்மட்ட நிலை சார்ந்தோரை, உண்மையிலேயே எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதையும்….. ஆங்காங்கே, பரவலாகப் பட்டுக்கொண்ட – கேள்விப்பட்ட – சொரியலான அனுபவங்கள், ஆகியன உள்ளத்தில் தோற்றுவித்த வலிகளின் உந்துதலாலும், பிறந்த கற்பனையாகும். “பாரும்மா…. இன்னைக்கு நாங்க உமேசுவீட்டுக்கு வெளையாடப் போனோமா, அப்போ என்னையும் தம்பிப் பயலையும் பாத்து பசங்க எல்லாரும் , “கிழிஞ்ச சட்டை…. கிழிஞ்ச சட்டை”ன்னு சொன்னாங்கம்மா….” ஏழுவயசுக் […]
அப்பா…
டெஸ்பாட்ச் சுந்தரம் தான் அப்பா ரிசப்ஷனில் வந்து காத்திருக்கிற விஷயம் சொன்னான். அப்பா எப்போதாவது இப்படி ரிசப்ஷனில் வந்து உட்காருபவர் தான். பெரும்பாலும் அம்மாவோடு சண்டை போட்ட நாட்களாக அவை இருக்கும். சண்டை என்றால், அம்மா பாட்டுக்கு பேசிக்கொண்டே போவாள். அப்பா மௌனமாக கேட்டுக் கொண்டிருப்பார். பொறுக்க முடியாது போகிற சில நாட்களில் மட்டும் சட்டையை மாட்டிக்கொண்டு இப்படி ரிசப்ஷனில் வந்து உட்கார்ந்து கொள்வார். அதைப் போன்ற சமயங்களில் அப்பாவைப் பார்ப்பதற்கு ரொம்பப் பாவமாக இருக்கும். அவன் […]
கலாட்டா – 8
இது பதிவு செய்த வாசகர்களுக்கான பக்கம். இலவச பதிவீட்டிற்க்கு இங்கே சொடுக்கவும். This page is only available to registered users. Please click here to register. Its free.
ஹைக்கூ கவிதைகள்
முதல் காதல் …! முகப் பொலிவோடு நான் முதலாய் அவன் …! முகமறியாக் காதலில் முழுவதுமாய் அவன் …! முப்பொழுதும் அவன் நினைவால் முழுநிலவாய் நான் …! முதல் காதல் முகவுரை ஆகுமா..? முடிவுரை ஆகுமா …?! மூர்ச்சையாகிறேன் நானே…!! **** உலகமயமாக்கல் ! முதுகெலும்பை முறித்து முடக்கியது விவசாயம் உலகமயமாக்கல் …! **** கருக்கலைப்பு கல்யாண நாளன்று கருக் கலைப்பு செய்தாள் தன் காதலை பெற்றோருக்காக…! **** மது – மாது …..! […]