பலதும் பத்தும்
உலகச் செம்மொழி – அத்தியாயம் 15

அத்தியாயம் 14 செல்ல இங்கே சொடுக்கவும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதியது போன்று பல மொழிகள் தமிழில் இருந்து தோன்றின அவற்றில் கடைசியாக தோன்றிய மொழி மலையாளம். இதை ஒத்துக்கொள்ள சிலர் தயங்கினாலும் பெரும்பான்மையானோர் ஒத்துக்கொள்கிறார்கள். திராவிட மொழி வரலாற்றை முதன் முதலில் ஆராய்ந்த அறிஞர் கால்டுவெல் அவர்கள் மலையாளம் தமிழின் ஒரு பிரிவு என அபிப்ராயம் தெரிவித்தார். ஏ.ஆர்.ராஜராஜவர்மாவின் கருத்தின்படி, மலைநாட்டிலே பேசப்பட்டு வந்த தமிழே சம்ஸ்கிருதத்தின் தாக்கத்தினால் மலையாள மொழியானது என்ற கருத்தைத் தெரிவிக்கின்றார். இன்றும் […]
இயக்குனர் சிகரத்தின் இறுதிப் பயணம்

தமிழ்த் திரையுலகின் இயக்குனர் சிகரம் திரு. கே. பாலச்சந்தர் கடந்த செவ்வாய், டிசம்பர் 23ம் தேதி காலமானார். கைலாசம் பாலச்சந்தர் 1930 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஒன்பதாம் தேதி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்தில் பிறந்தவர். அறிவியலில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்று ஏ.ஜி.ஸ் (அக்கவுண்டன்ட் ஜெனரல்) அலுவலகத்தில் எழுத்தராக பணி புரிந்து வந்தார். இங்கு அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து நாடகங்கள் எழுதி, நடித்து அரங்கேற்றி வந்திருக்கிறார். ‘எதிர் நீச்சல்’, ‘நாணல்’, ‘மேஜர் சந்திரகாந்த்’ போன்ற […]
மிஸிஸிப்பி நதி

அமெரிக்க நாட்டின் மிகப்பெரிய ஆறு மிஸிஸிப்பி நதி ஆகும். அதை ஆங்கிலத்தில் உச்சரிப்பதே சிறுவருக்கு ஒரு தனி மகிழ்ச்சி. MiS-SiS-Sip-Pi என்று பிரித்துக் கூறும்பொழுது சற்று வேடிக்கையாக இருக்கிறதல்லவா?. இவ்விடம் நாம் மணிக்கூட்டில் வினாடிகளைச் சரியாக எண்ணவும், கண்ணாமூச்சி விளையாடவும் One-Mississippi Two-Mississippi என்று உரத்துக் கூறி விளையாடுவதும் உண்டு. மிஸிஸிப்பி ஆறு ஆனது மினசோட்டாவில் வாழும் சிறுவர்கள் அறிந்த, பார்த்திருக்கும் பெரும் ஆறு ஆகும். இது மினசோட்டா மாநில ஐதாஸ்கா (Itasca) ஏரியில் ஆரம்பித்துப் பெரும் […]
உமா மகேஸ்வரி

சங்கமம் 2014 தெருக்கூத்து நிகழ்சியின் அணிகலன்கள் வடிவமைப்பாளரும் ஒப்பனையாளருமான திருமதி உமாமகேஸ்வரி அவர்களை மின் அஞ்சல் மூலமாக ஒரு பேட்டி கண்டோம்.அவர் வடிவமைத்திருந்த அணிகலன்கள் மற்றும் ஒபனைகள், நிகழ்சியை கண்டுகளித்த அனைவரது பாராட்டையும் பெற்றது. 1. உங்களைப் பற்றியும் உங்கள் ஊர், குடும்பம் மற்றும் வளர்ந்த சூழல் பற்றி எங்கள் பனிப்பூக்கள் வாசகர்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்? என் பெயர் உமாமகேஸ்வரி . எனது ஊர் மதுரை. எனக்கு மூன்று அண்ணன்மார்கள் உள்ளனர். எங்களுக்கு ஒரு மகன் (13 வயது) […]
எழுதுங்கள் வெல்லுங்கள்

மேற்காணும் இரண்டு படங்களையும் பார்த்தவுடன் என்ன தோன்றுகிறது? உங்களின் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுங்கள். மனதில் தோன்றுவதை கவிதை வடிவில் எழுதி சமர்ப்பிக்கவும். எல்லாப் போட்டிகளுக்கும் உள்ளது போல சில விதி முறைகள் கீழே; படைப்புகளைச் சமர்ப்பிப்பதற்குக் கடைசி திகதி: 02/15/14. உங்களது படைப்பு இதற்கு முன் இணையத்திலோ பத்திரிகையிலோ வெளியாகி இருக்கக் கூடாது. கவிதை வடிவமாக இருத்தல் அவசியம் மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைகூ என்று எந்த வடிவத்தில் இருப்பினும் சரியே. இருபது வரிகளுக்கு […]
மினசோட்டா ஐரோப்பியத் தொடர்புகள் – ஸ்காண்டிநேவியா SCANDINAVIA

நமது மாநிலமாகிய மினசோட்டாவில் ஆசிய நிலப்பரப்புத் தொடர்பு காலத்தில் புலம் பெயர்ந்த ஆதிவாசி மக்களிற்கு அடுத்தபடியாக கடல்மூலம் புலம் பெயர்ந்த மக்கள் பெரும்பாலும் ஸ்காண்டிநேவியர்கள் ஆகும். ஸ்காண்டிநேவியா பிரதேசம் பொதுவாக டென்மார்க் Denmark, நோர்வே Norway, சுவீடன் Sweden நாடுகளைச் சாரும். வடதுருவப்பிரதேசக் கடலைச் Arctic Sea சார்ந்த பின்லாந்து, ஐஸ்லாந்து Iceland மற்றும் லப்லாந்து Lapland எனும் வடதுருவக் கலைமான் reindeer வர்க்கங்களை மந்தையாகப் பார்க்கும் நாடோடி மக்கள் பிரதேசமும் ஸ்காண்டிநேவியாவில் அடங்கும் . லப்லாந்து […]
செட்டிநாட்டு சம்பாஷணை

”அக்கா சொகமா இருக்கீயளா”….. வெள்ளை மனத்துக்குச் சொந்தகார செகப்பி, நடந்து வரும் வழியில் எதிரில் வரும் தெவ்வானை அக்காவைச் சந்தித்துக் குசலம் விசாரிக்கிறாள். “வாடி என்னயப் பெத்த ஆத்தா, நா நல்லாருக்கேனப்பு.. நீ எப்படி இருக்க? ஏது இந்தப்பக்கம் அதிசயமா காத்தடிக்குது?” அதே கரிசனத்துடன் பதிலளித்துக் கேள்வி கேட்கிறாள் தெய்வானை. “ஒண்ணுமில்லயக்கா, நம்ம பெரியாஸ்பத்திரி வரக்கும் ஒரு எட்டு போயாரலாமுன்னு”….. “அடியாத்தி, என்னாச்சுடி, உடம்புக்கு எதுவுஞ் சொகமில்லையா?” “எனக்கெதுமில்லயக்கா, நல்லாக் குத்துக் கல்லாட்டமாத்தேன் இருக்கேன். நம்ம கெளவிக்கு […]
களவினால் ஆகிய ஆக்கம்

வடிவேலு – பிறர் பொருளைக் கன்னமிட்டுப் பிழைப்பு நடத்துபவன். மாதத்தின் முதல் வாரத்தில் அளவுக்கு அதிகமாய் கையில் பணம்புரளும் – மற்றவர்களுக்கு சம்பள காலம் என்பதால். பேருந்தில் ஏறி ஒரு நிறுத்தத்தில் இருந்து இன்னொரு நிறுத்தம் வந்து சேரும் முன்னர் – கண் மூடி கண் திறக்கும் சிறு இடைவெளியில் – கால்சட்டைப் பையிலிருக்கும் பர்ஸோ, கட்கத்து மத்தியில் வைத்திருக்கும் மஞ்சள் பையோ, இவனின் கண்களிலிருந்து தப்புவது கடினம். மிகவும் சாமர்த்தியமாய் பணத்தை அடித்து விடும் “திறமைசாலி”. […]