Archive for November, 2016
உருவகங்களின் தொடர்புகள் புதிர்
கீழே உள்ள ஒவ்வோரு நிரையிலும் (every row) உள்ள 5 பெட்டிகளில் 4 பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று ஒத்திருக்கும். வேற்று இருக்கும் பெட்டிகளை அடையாளம் காணவும்.
அறிந்தும் அறியாமலே….!!!
உணர்வுகள் மறந்த உடலொன்று
உறக்கம் கொள்ளும் பகலையும்
உன் நினைவைச் சுமந்த ஞாபகங்கள்
இரவிலும் விழித்திருக்கும் என்பதை
உணர்ந்தாயோ?
கட்டழகு மேனியில் கரைந்த பொழுதையும்
கள்ளச்சிரிப்பில் உறைந்த கனத்தையும்
காத்திருப்பு
காத்திருப்பு சுகமானது காதலில்
காதலியின் வரவை எதிர்பார்த்துக் காதலனும்
காதலனுக்காக அவளும் காத்திருப்பாள்
கருவாச்சி மனதினுள் பொங்கிடுவாள்….!
கட்டிய கணவனைக் கனிவோடு வரவேற்றிட
கட்டைவிரலால் கோலமிட்டே வாசலிலே நின்றிடுவாள்
அட்சய பாத்திரம்
எண்ணங்கள் நினைவுகள்
கற்பனைகள் கவலைகள்
காதல்கள் மோதல்கள்
பழக்கங்கள் வழக்கங்கள்
சிந்தனைகள் சிரிப்புகள்
உறவுகள் பிரிவுகள்
மினசோட்டாவில் “கறி விருந்து”
உண்டிக் கழகு விருந்தோ டுண்டல்! (நறுந்தொகை) இனி வரும் தை(சனவரி) திங்கள்கள் தமிழ் மரபுத் திங்களாகக் கொண்டாடப்படும் என்ற கனேடிய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து “வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை” அனைத்துத் தமிழ்ச் சங்கங்களையும் தமிழ் மரபுத் திங்களைக் கொண்டாடுமாறு அறிவுறுத்தியுள்ளது. நமது மரபுகளும் பல தலைமுறைகளாக ஒன்றிலிருந்து மறு தலைமுறைக்குக் கடத்தப்பட்டுத் தழைத்து, இன்று மரபு எச்சங்களாக நம்மிடம் புழக்கத்தில் இருப்பவற்றில் முதன்மையானதான விருந்தையும் விருந்தோம்பலையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சொல்லவேண்டியது ஒவ்வொரு தமிழரின் […]
மினியாபொலிஸில் இருந்து யாழ்ப்பாணம் வரையான பயணப் பாதையில்…
( பயணக் கட்டுரை) மிகவும் நெருக்கடியான ஒரு மாலைப் பொழுதில் அன்றொருநாள் எனது தாய் நிலத்தை விட்டு நீங்கியே ஆக வேண்டிய கட்டாயச் சூழலில் இரவோடு இரவாக ஊர்விட்டு நீங்கினோம். எனது தாய்நாட்டையும் உறவுகளையும் பிரிந்து சரியாகப் பத்து வருடங்கள் கழித்து மீண்டும் தாயகம் நோக்கிய எனது பயணம் மினியாபொலிஸ் விமான நிலையத்தில் இருந்து தொடங்கியது சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு தான் ஆண்டுப் பலன் நன்றாக எனக்கு வேலை செய்திருக்கின்றது போல.… இந்தப் […]