Archive for November, 2016
அமெரிக்க நன்றி நவிலல் நாளும் அதன் சரித்திரமும்
ஆண்டுகள் புரண்டு ஓட ஆளுபவர், நாடுபவர், நடுவில் திளைத்தவர் எனப் பல்வேறு மக்களும் தமக்கென வழிமுறைக் கதைகளை உருவாக்கிக் கொள்ளுவர். வரலாறுகள் பெருமளவில் வெல்பவர்களால் எழுதப்படுபவை. இவையே காலகாலத்தில் சமூக இதிகாசங்களாக மாறுகின்றன; மேலதிக சிந்தனையின்றி நடைமுறை உண்மைகள் என்றும் திரிபுற்று மாறுகின்றன. ஆயினும் வரலாற்றுத் தகவல்களை தொடர்ந்தும் ஆய்வு செயப்பட்டு இது ஒரு சாரார்க்குச் சாதமானதோ இல்லையோ அடிப்படை உண்மைகளை பன்முனை ஆய்வு தரவு தகவல்கள் மூலம் வெளிக்கொண்டு வர முனையும். எனினும் சமூகங்கள் அந்தந்தக் […]
பகுத்து ஆராய்தல் வல்லமை
முக்கிய குறிப்பு :இது உங்களிற்கு ஏற்கனவே அறிந்து கொண்டுள்ள ‘ தெரிந்து கொண்டுள்ள அறிவியல் தகவல்களைத் தவிர்த்து – தரப்பட்டுள்ள தகவல்களை மாத்திரம் உபயோகித்து, பகுத்து அறிந்து, ஆராய்ந்து முடிவுகளைப் பெற்றுக் கொள்ள முனையவும். கீழே உள்ள கூற்றுக்களை நீங்கள் அடிப்படை என்று எடுத்துக் கொண்டால் அதை வைத்துக் மிகுதித்தரவுகளில் உண்மையானது எது என்று கூறவும். உதாரணம்: தானியங்கள் எல்லாம் புல் விதைகள் . நெல்லு ஒரு தானியம். ஆகவே, (1) தானியங்கள் எல்லாம் நெற்கள். (2) […]
டி.என். பாலமுரளி – கலந்துரையாடல்
பனிப்பூக்கள்: உங்களுக்குக் கர்நாடக சங்கீதத்தின் மேல் கொண்ட ஈர்ப்புக்குக் காரணம் என்ன? எப்படித் தொடங்கினீர்கள்? டி.என். பாலமுரளி: எனக்கு ஐந்து வயது இருக்கையில் அம்மா என்னையும் என் சகோதரியையும் பாட்டுக் கிளாசில் சேர்த்தார்கள். என்னுடைய அம்மாவும், மாமாவும் இசையில் ஈடுபாடு கொண்டவர்கள். அம்மா மகாராஜபுரம் சந்தானம் அவர்களிடம் சங்கீதம் கற்றுக்கொண்டவர். நான் பல பாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்றேன். Sri Lanka Broadcasting Corporation(SLBC) நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கினேன். இவர்கள் எல்லோரும் கொடுத்த உற்சாகம் என்னைச் […]
கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி 2016
மேபிள் குரோவ் இந்துக் கோவிலில் நவம்பர் 19ம் தேதி அன்று கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி நடைபெற்றது. மினசோட்டாவில் உள்ள இசைக் கலைஞர்கள் திருமதி நிர்மலா ராஜசேகர் (வீணை இசை & வாய்ப்பாட்டாளர்), ஸ்ரீ தஞ்சாவூர் கே முருகபூபதி (மிருதங்கம்), ஸ்ரீ ராம் நடராஜன் (கஞ்சிரா) மற்றும் தமிழ்நாட்டுக் கலைஞர்கள் ஸ்ரீ ஜெயந்த் (புல்லாங்குழல்), ஸ்ரீ கார்த்திக் சுப்ரமணியம் (கடம்), ஸ்ரீ பி உ கணேஷ் பிரசாத் (வயலின்) ஆகியோர் சேர்ந்து நடத்திய இந்த இசைச் கச்சேரி […]
சிறகவரை எண்ணெய்க் கறி
அவரை வகைகளில் தாவரப் புரதம் தரும் காய்கறிகளில் சிறகவரை சிறப்பானதொன்று . மினசோட்டா மாநிலத்தில் சீனக் கடைகளிலும், ரொரோன்ரோவில் தமிழ், சீன, தாய்லாந்துச் சந்தைகளிலும் கிடைக்கும். தேவையானவை 1/2 இறாத்தல் பிஞ்சு சிறகவரை 5 நறுக்கிய சின்ன வெங்காயம் 2 நறுக்கிய பச்சை மிளகாய் 1 சிறுகிளை கறிவேப்பிலை 4 நறுக்கிய உள்ளிப்பூண்டு நகம் 1 அங்குல இஞ்சி (தட்டி எடுத்தது ) 10-15 கடுகு ½ தேயிலை கரண்டி வெந்தயம் 1 தேயிலை கரண்டி சீரகம் […]
கண் முன் கடவுள்
காக்கிச் சட்டையில் மடிப்புக் கலைந்ததைப் பொருட்படுத்தாது உதறி விட்டு நடந்தார் கன்னியப்பர். அவர்கள் வீட்டு, சின்ன முகப்பில் இருந்த கண்ணாடியில் முகம் பார்த்தார். முன் நெற்றி வழுக்கையை மறைக்கும் விதமாக இருந்த சிறிய முடியை வலப்பக்கம் திருப்பி வாரினார். முகத்தின் சுருக்கங்கள் கண்ணாடியில் தெரிந்தன. ஆயிற்று வயது…. இந்தத் தை பிறந்தா 58 வயசு ஆயிடும். மிடுக்கு, வீம்பு எல்லாம் தளரும் வயது தொடங்கித் தான் விட்டது. சிவகாமி போன போதே பாதி ஆயுள் போயாச்சு. கண்ணாடிக்குப் […]
குழப்பத்தின் கோபுரம் பாபேல் – பைபிள் கதைகள்
வேற்றுமையில் ஒற்றுமை கொண்டது உலகம். இன, மொழி வேறுபாடுகள் நிறைந்தாதாயிற்று நாம் வாழும் உலகம். வீட்டில் பேச ஒரு மொழி, அலுவலகத்தில் ஒரு மொழி, வேலையின் நிமித்தம் வெளியூர் சென்றால் அங்கு வேறொரு மொழி. குழந்தைக்குச் சில நேரத்தில் வீட்டில் அப்பா என்றழைக்க வேண்டும் பள்ளியில் டாடி என்றழைக்க வேண்டும் …. அந்தச் சிறு உள்ளத்தில் ஒரு மொழிப் போராட்டம்…… டாடியா……. அப்பாவா… முடிவில் டப்பாவான தந்தை அம்மாவா…. மாம்மியா…… முடிவில் அம்மியான தாய்… […]
உடையாத கண்ணாடிக் கூரை
நடந்து முடிந்த தேர்தலில், அரசியல் கொள்கைகள், என்பதைக் கடந்து அமெரிக்க மக்கள் எதிர்பார்த்திருந்த விஷயம், ‘உடையாத அந்த கண்ணாடிக் கூரை’ உடையுமா என்பது தான். தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு, ஊடகங்களில் பல பெண்கள், குறிப்பாக சிறுபான்மையின பிரிவைச் சார்ந்த பெண்கள் மிகவும் வருத்தப்பட்டு ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருந்ததைக் காண முடிந்தது. முடிவுகள் வெளியான இரவன்று தூங்கச் சென்ற தங்கள் பெண் குழந்தைகளிடம், பலர் நாளைக் காலையில் அமெரிக்காவில் முதல் பெண் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்று சொல்லி இருந்ததாகவும், […]
பிரக்ஸிட்டும் கேலக்ஸிட்டும் (Brexit & Calexit)
சமீப காலங்களில் பிரபலமடையத் துவங்கியுள்ள ஒரு ஒட்டுச்சொல் ‘எக்ஸிட்’. அவற்றில் ஒன்று நம் வீட்டின் கொல்லைப் புறக் கதவைத் தட்டத் துவங்கியுள்ளது. உலக அரங்கில் நடந்த பல நேர்வுகள், அமெரிக்கத் தேர்தலால் அதிக முக்கியத்துவம் பெறாமல் போயின. அவற்றில் ஒன்று ‘பிரக்ஸிட்’ . பிரக்ஸிட் (Brexit) முதலாம், இரண்டாம் உலகப் போர்களுக்குப் பின்னர் உலகம் முழுதும் பெரும் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டன. பஞ்சம், பட்டினி, நோய்கள், வறுமை எனப் பல கொடுமைகள் பூதாகாரமாக வளர்ந்து உலக நாடுகளை […]
ஐநூறாம் ஆயிரமாம்
ஃப்ளைட் விட்டிறங்கி ஏர்ப்போர்ட் விட்டு வெளியில் வருகையில் டாக்ஸி எடுத்துக் கொண்டு செல்லக் கூடக் கையில் சல்லிக்காசில்லை என்ற நிலை சாதாரணமாக நம் போன்ற வணிகப்பயணிகளுக்கு ஏற்படுவதில்லை… ஆனால் சமீபத்தில் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டோம்… திடீரென, அறிவிக்கப்பட்ட நான்கே மணி நேரத்திற்குள் நம் பாக்கெட்டிலிருந்த ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வெறும் காகிதங்களாக மாறி எதற்கும் பயனில்லாதவையாகிப் போயின. இந்தியப் பிரதமர் நவம்பர் 8 ஆம் தேதியன்று இரவு, சரியாக 8 மணிக்குத் தொலைக்காட்சிகளில் தோன்றி, இன்று […]