Tag: அரசியல்
தேர்தல் சத்தியங்களும் சாத்தியங்களும் – பாகம் 2

தேர்தலுக்குச் சில நாட்களே இருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதியையும் வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்து அறிந்து கொள்ள இந்த வலையொலி நிகழ்ச்சி உதவும். தேர்தலில் யாருக்கு வாக்களிக்கலாம் என்று முடிவெடுக்கவும் இது உதவும் என்று நம்புகிறோம். கேளுங்கள்.. பகிருங்கள்.. ஜனநாயகக் கடமையைச் சரிவரச் செய்திடுங்கள்.. நிகழ்ச்சியின் முதல் பகுதி. பங்கேற்றோர் – திரு. ரவிக்குமார் சண்முகம், திரு. சரவணகுமரன்.
தமிழகத் தேர்தல் – சத்தியங்களும் சாத்தியங்களும்

2021 ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுப்பிடித்திருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கும் வாக்குறுதிகள் குறித்து திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்கள் இந்த வலையொலி நிகழ்ச்சியில் விரிவாக பேசியுள்ளார். நிகழ்ச்சியைத் தொகுத்தளித்திருப்பவர், திரு. சரவணகுமரன். முதல் பாகமான இதில் தேர்தல் அறிக்கையின் முக்கியத்துவம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு முறை ஆகியவற்றுடன் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்து விவரிக்கிறார் […]
வந்தார் ரஜினி!!

கடந்த ஒரு வாரமாகத் தனது ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துவந்த ரஜினிகாந்த், டிசம்பர் 31 ஆம் தேதியன்று தனது அரசியல் நிலைபாட்டை அறிவிப்பதாகக் கூறியிருந்தார். அதனால் 31 தேதியன்று ரஜினி அறிவிக்கப்போகும் முடிவின் மீது மீடியா மற்றும் அவரது ரசிகர்களது பார்வை குவிந்து இருந்தது. இதுவரை பலமுறை தனது அரசியலைக் குறித்துச் சூசகமாகப் பேசிவந்த ரஜினிகாந்த், இந்த முறையாவது அழுத்தம்திருத்தமாக ஏதேனும் கூறுவாரா அல்லது நழுவும் மீனாகவே இருந்துவிடுவாரா என்ற கேள்வி அனைவருக்கும் இருந்தது. இதுவரை அரசியல் […]
ரஜினி Vs கமல் – யாருக்கு ஓட்டுப் போடலாம்?

கடந்த டிசம்பர் மாதம் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்த அதே சமயத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களும் தீவிர அரசியலில் இருந்து உடல் நிலை காரணமாக விலகினார். தமிழகத்தின் அசைக்க முடியாத ஆளுமைகளாக இருந்த இந்த இருவரும் விட்டுச் சென்ற வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பலரும் முயலுகிறார்கள். ஏற்கனவே களத்தில் இருப்பவர்கள், களத்திற்கு வர நினைத்தவர்கள், எங்கிருந்தோ வந்தவர்கள் எனப் பல வகையினரை இப்போது காண முடிகிறது. அதில் முக்கியமாக ரஜினி, கமல் இருவரையும் […]