Tag: இலங்கை
நினைப்பதெல்லாம் நடப்பதில்லை…

வெள்ளைத் தொப்பியணிந்து வியர்வையால் ஆடையெல்லாம் நிறம்மாறி அதிகரித்த வெயிலில் துவிச்சக்கரவண்டியை தனது சக்திக்கும்மீறி செலுத்தினான் ராசன். ”என்ன இது சைக்கிள் இண்டைக்கு ஓடுதில்ல பதினொரு மணிக்குள்ள மில்வோட்டுக்குப் போகலெண்ணா பாலும் திரண்டுறும்” என நினைத்துக்கொண்டு சைக்கிளின் வேகத்தை அதிகரித்தான். ஒவ்வொரு நாளும் பத்து மணிக்கெல்லாம் பெருமாவெளிக்கு வந்து குமரகுருவின் தேநீர்க் கடையில் தேநீரும் வடையும் உண்ணுவது ராசனின் வழக்கமான செயலாகும். ஆனால் அன்றைய தினம் உடலின் களைப்பு உற்சாகத்தைக் குறைக்க நேரத்திற்கு அவ்விடம் செல்ல முடியவில்லை. பதினொரு […]
மாங்குளம் வன்னியின் சுவை உணவகம்

வன்னிக் காட்டுக் சாலையில் இருந்து விடுபட்டு அயல் புழுதி கூடிய சிறு பாதையில் திரும்பி வாகனத்தை தரிப்பிடத்தில் நிறுத்தினார் வாகனச் சாரதியார் ராஜா. “அண்ணை இங்கேயும் ஒருக்கால் சாப்பிட்டுப் பாருங்கோவன்” என்றார் அவர். நாம் அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு வன்னிக் காட்டுப் பகுதிகள் சென்று மதியமளவில் வெய்யிலில் வந்ததால் பசி வேறு வயிற்றைத் துளைத்தது. சரி சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே என்று கூறி உடன் வந்த நண்பர்களுடன் அழகான அயல் பூஞ்செடிகள் பார்த்தவாறு விசாலமான ஓட்டுக் கூரையுடனான கட்டடத்தின் […]
இலங்கையில் தைப் பொங்கல்

தைப் பொங்கல் என்பது தமிழர்களின் பெருவிழா என்றே பொதுவாக அர்த்தப்படுத்தப்பட்டாலும் சிறப்பாக இவ்விழா விவசாயத்தோடும் விவசாயிகளோடும் தொடர்புள்ள ஒரு பண்டிகையாகவே ஈழத்து தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. விவசாயத்தை மையப்படுத்திய பண்டிகையாக தைப் பொங்கல் அடையாளப்படுத்தப் பட்டாலும் சர்வதேச ரீதியாகவோ அல்லது இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலோ தைப்பொங்கல் என்பது விவசாயம் சார்ந்த ஒரு பொது விழாவாகக் கொண்டாடப்படுவதில்லை. சங்க இலக்கிய காலத்தில் இருந்தே தைப்பொங்கல் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது. மழைக்கு அதிபதியாகிய இந்திரனைக் குறிக்கும் […]