Tag: ஐயப்பன்
பக்தர்களும் பதர்களும்
பகுத்தறிவுச் சுடரென்று பகட்டு வார்த்தைபேசி பணங்காசு ஈட்டுதற்குப் பழிபாவம் நினைத்தறியாப் பரிவில்லா ஒருகூட்டம் பகர்ந்த சொல்லதனால் பயிரான கவிதையிது! பலர்முன்னே அவருரைத்த பண்பில்லாச் சொல்தானென்ன? பதினெட்டாம் படியினைப் பலவிரதமிருந்து கடப்பவர் பலகாதம் நடந்துசெல்வது படியரிசி கடத்திடவாம், பல்லிளித்து உதிர்த்திட்டார் பழியான இச்சொல்லை! பயனில்லாச் சொல்லாராய்வோம்!! விரதம் பலவிருந்து விஸ்வசுகம் அதுமறந்து வில்லாளன் தரிசனத்திற்கு விரைந்தே சென்றிடுபவரை விளைநெல்லைக் கடத்தும் வித்தையிது என்றே விரோதமாய்ப் பேசுகின்றார் வித்தகராய்க் கருதிக்கொண்டு!! வாகனங்கள் வழியாக விளைநெல்லைக் கொண்டுசெலல் வாகாகத் தடுத்ததனால் வழிப்போக்கர் […]