Tag: கதை
மணியோசை
அறையில் ஏர் கண்டிஷனர் ‘ஹுஸ்ஸ்ஸ்’ என்ற சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. சவிதாவின் நீள விரல்கள் லேப்டாப்பில் சடசடவென்று தட்டிக் கொண்டிருந்த சத்தமும் கூடவே சேர்ந்து கேட்டது. அவ்வளவு ஏன், அடுத்து என்ன எழுதுவது என்று சவிதா தன் கட்டைவிரல் நகத்தால் தனது லிப்ஸ்டிக் உதட்டை வருடியது கூட தெளிவாகக் கேட்டது. ‘ட்ரிங்… ட்ரிங்…’ …காலிங்பெல். யாராக இருக்கும்? ரூம் சர்விஸ் கூட எதுவும் சொல்லவில்லையே. ஒரு வேளை விஸ்வா ஏதாவது சொல்லியிருப்பானோ? ‘ட்ரிங்…. ட்ரிங்… ட்ரிங்… ட்ரிங்…’ […]
சுதந்திரம் ஒரு முறை தான்
“சார்ள்ஸ்டன் கரோலைனா” என்னும் ஊரில் “கெனத்” எனும் இளைஞன் புகையிலைகள் மத்தியில் கொட்டும் வெய்யிலில் களை எடுத்துக் கொண்டிருந்தான். அவன் பாதங்கள் மண்ணில் வெறுமையாகப் பரவியிருந்தன. கருங்கல் போன்ற தோல் உருவம், அடர்த்தியற்ற கருமைத் தலைமுடிகள்… அவன் வியர்வைத் துளிகள் வெய்யிலில் உலர்கின்றன. துணிமணி இல்லாத… ஆங்காங்கே கை, கால், முதுகு, தொடை என பல இடங்களில் காயத் தழும்புகள் கொண்ட பரிதாப இளம் உடல். ஆமாம் பாவம் ‘கெனத்’, அவன் ஒரு வெள்ளை எசமானது […]
அசௌகரிய வீடு
இலையுதிர் காலத்தில் ஏரிக்கரை மரங்களின் நிறம் மாறுகின்றது. இலைகள் மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பாக மாறுகின்றன. சில்லென்ற குளிரில் சில புற்களும் உலருகின்றன. ஏரிக்கு அருகே பல குட்டைகளும், வாய்க்கால்களும் உள்ளன. இவற்றில் மிதக்கும் அல்லிப்பூக்களும், அயல் நீர்த் தாவரங்களும் பூத்து ஓய்கின்றன. அல்லிக் கொடிகள் குட்டை மேல் நீர் கடந்து தெரிகின்றன. வட்ட இலைகள் வாடுகின்றன. இது இலையுதிர் கால இறுதியில் குட்டைகளின் தன்மை. நீரில் வளரும் தாவரங்கள் கோடை வெய்யிலில் பெருகும். பின்னர் அடுத்த வருடத்திற்கு உதவும் உக்கல் மண்ணாக […]