Tag: கவிதை
பனிப்பூக்கள் அகவை 13

உலகத் தாய்மொழி தினமான இன்று நமது பனிப்பூக்கள் சஞ்சிகைக்கு 13 அகவையாகிறது. வாசகர்கள் அனைவருக்கும் உலகத் தாய்மொழி தின வாழ்த்துகள். பனிப்பூக்கள் கடந்து வந்த பாதையை வெ.மதுசூதனன் அவர்கள் கவிதையாக எழுதி, வாசித்த காணொலியை இங்கு காணலாம். எமது பயணத்தில் உறுதுணையாக இருக்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த நன்றிகள்.
தமிழ் கவிதாயினிகள்

உலக மகளிர் தினத்தையொட்டி தமிழ் கவிதாயினிகள் குறித்து மதுசூதனனும், சரவணகுமரனும் பேசிய பனிப்பூக்கள் அரட்டை.
கடவுளைக் காண்பீர்!

பொன் கொண்டோர், பொருள் கொண்டோர், மண், மாளிகை கொண்டோர், பூமியை ஆண்டோரையும் கண்டீர்! பூவையர் மனம் வென்றோரைக் கண்டீரோ? மங்கையரின்றி ஒரு மார்க்கம் உண்டோ – இந்த மானிட உலகில்? அன்பைப் பொழியும் தாயாக, காதலால் கசிந்துருகும் தாரமாக, சோதனையில் தோள்தாங்கும் உற்ற சகோதரியாக, தாயோ தந்தையோ மூப்படைந்ததும் மடிதாங்கும் சேயாக … பெண்ணைக் கண்டோர் உண்டிங்கு! ஆனால், சமூகப் பாகுபாடின்றி, கருணையே வடிவாக மானிட உயிரைக் காத்திட அச்சமின்றி, அருவெறுப்பின்றி அன்போடு அரவணைக்கும் […]
அன்னையர்க்கு அர்ப்பணம்

கையினிலே கல்லொன்று கனத்திட்டால் களைந்திடுவோம் தோள்களிலே தொங்கியதை தேவையென்றால் தவிர்த்திடுவோம் முதுகில்சிறு மூட்டையென்றால் முழுவதுமாய் மறுத்திடுவோம் அவ்வளவேன், அரைக்கிலோ அரிசிதூக்க அழுதே அலறிடுவோம்!! மாதமும் மாறிவர மாதவளுள் மகவுதோன்ற வருகின்ற வாரங்களில் வயிறதுவும் வளர்ந்துவர இயல்பது இல்லாததாகி இடுப்புவலி இயல்பென்றாக பின்னெலும்பு பிளக்கும்வகை பிள்ளையதைப் பிரசவித்தவள்!!! உள்ளிருந்து உருவாகி உணர்வுகளை உரித்தாக்கி உதரத்தில் உறைந்திருந்து உதிரத்தை உறிஞ்சியுண்டு உயர்வான உண்மைக்கு உவகையான உறவுமாக உயிரும் உடலுமாய் உன்னதமாய் உதித்ததது!! சிசுவது சிரிப்பதற்கும் சிரந்தூக்கிச் […]
திகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள் – 2

பாகம் 1 சென்ற மாதக் கட்டுரையில் கண்ணதாசனின் வியத்தகு பாடல்களில் ஒன்றான ‘பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா’ என்று ஐய வினாக்களால் தொடுக்கப்பட்ட பாடலைப் பார்த்தோம். ஐய வினாக்கள் (சந்தேகக் கேள்விகள்) பொதுவாக ‘ஆ’ என்ற விகுதியுடன் முடிவடையும். இது மலரா, அது மலையா போன்ற கேள்விகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த வகைக் கேள்விகளின் நீட்சியாக ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய இரண்டு பொருட்களைக் குறிப்பிட்டு இதுவா, அதுவா என்று கேட்பதுமுண்டு. ‘பழம் இனிக்கிறதா, கசக்கிறதா?’, […]
மறு பிறவி

சிவந்த மண்ணில் புதைந்தேன். தளிர் விட்டு முளைத்தேன். தண்ணீர் குடித்து வளர்ந்தேன். உரம் உண்டு செழித்தேன். கிளைகள் பல விட்டேன். நிழலைப் பலருக்குக் கொடுத்தேன். பூக்கள் பலர் கவரப் பூத்தேன். தேனீக்களைத் தேடி வரச் செய்தேன். சுவையான கனியானேன். சிறார்களிடம் கல்லெறி பட்டேன். அணில்கள் சுவைக்கும் பழமானேன் ரசித்து உண்ண பழம் கொடுத்தேன் இறைவனுக்கு என்னை அற்பணித்தேன் புயலில் நான் சரிந்தேன் கேட்பார் அற்று கிடந்தேன் என் முடிவை நெருங்கினேன் அடுப்புக்கு காய்ந்த விறகானேன் சுவைத்து […]
கவித்துளிகள்

இயற்கையின் சாரல் வறட்சியின் வெற்றி மழைத்துளி மண்ணைத் தொடும் வரை… வந்தபின் வறட்சியின் சுவடு மறைந்தே போய்விடும்…. மண்ணின் வாசமும் மழையின் சாரலும் மகிழ்ச்சியில் மனம் இலேசாகி நம் நாசித் துவாரங்களை ஊடுருவும் ….!! தளிர்கள் செழித்து செடியாகி செடி நுனியில் வண்ணமிகு மொட்டுக்கள் நாணி மலர்ந்து தலை துவட்டும் …..!! மொட்டுக்கள் நனைந்திடக் கூடாதென இலைகள் கேடயக் குடைகளாகும் காற்றின் சலசலப்பில் இலைக் குடைக்குள் மறைந்தபடி கண்ணாமூச்சி விளையாடும் மழைத்துளிகளோடு…..!! மனம் கமழ் பூமணங்கள் காற்றில் […]