Tag: டி.எம்.எஸ்
டி.எம்.எஸ். 100 – எஸ்.எம்.சுப்பையா முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை

நூற்றாண்டு பிறந்தநாளைத் தொடும் பாடகர் திலகம் திரு. டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் கலை வாழ்வு பயணத்தை நினைவுகூறும் ஒரு கலந்துரையாடல். இந்தப் பகுதியில் டி.எம்.எஸ். அவர்களின் ஆரம்பக் கால வாழ்வு குறித்தும், திரையுலகில் அவர் பணியாற்றிய பல்வேறு இசையமைப்பாளர்கள் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. உரையாடியவர்கள் – ரவிக்குமார், மதுசூதனன், செந்தில்குமார், சரவணகுமரன்.
திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்

கிராமியச் சூழலை, மண்மணம் மாறாது வெளிக் கொணர்பவை நாட்டுப் புறப்பாடல்கள். மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளை, ஆசாபாசங்களை எளிமையான சொற்களால் விளக்கிடும் பாடல் வரிகள் இவை. எழுத்திலக்கியப் பாடல்களைப் போன்று யாப்பிலக்கணக் கட்டுப்பாடுகள் இல்லையென்றாலும் பெரும்பாலான நாட்டுப்புற வகைப் பாடல்கள் எதுகை, மோனை, இயைபு கொண்டிருப்பது ஆச்சரியமான விஷயம். தெம்மாங்கு நாட்டுப்புறப் பாடல் வகைகளுள் ஒன்றாகும். தென்னகத்தின் பாங்கு , தென் + பாங்கு, தெம்மாங்கு ஆகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இப்பாடல்கள் வேலைப் பளு தெரியாமலிருக்க வயல்களிலும், […]