Tag: தலையங்கம்
அரசுத் துறைகளின் பணி முடக்கம்

அமெரிக்க அரசாங்கத் துறைகளில் சில, கடந்த 29 நாட்களாக, பணி முடக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஏறத்தாழ எட்டு லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் தங்களது இரண்டாவது சம்பளத்தைத் தவறவிட்டுள்ளார்கள். இவர்களில் மிக அத்தியாவசியமில்லாத துறைகளில் பணி புரியும் நான்கு லட்சம் பேர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். பாதுகாப்பு, கல்வி, சட்ட ஒழுங்கு போன்ற அத்தியாவசியத் துறைகளிலும் பணிகள் மந்தமடைந்துள்ளன. பொதுவாக, வரப்போகும் ஆண்டுக்கான வரவு செலவுகள் கணக்கிடப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செப்டம்பர் இறுதியில், இரு அவைகளின் ஒப்புதலுடன் […]
தலையங்கம்

வாசகர்களுக்கு வணக்கம் ! அக்னிக் குஞ்சொன்று கண்டேன் – அதை அங்கொரு காட்டினில் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு – தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!!! – மகாகவி சுப்பிரமணிய பாரதி அன்றாட வாழ்வில் நாம் கணக்கற்ற அக்னிக் குஞ்சுகளைச் சந்திக்கின்றோம். எழுத்துத் திறமை, பேச்சுத் திறமை, ஓவியம் வரைதல், கதை சொல்வது, பாட்டுப் பாடுதல், அகழ்வாராய்ச்சி, வரலாற்று உண்மைகளின் தெளிவு, நிகழ்வுகளைத் திறனாய்வு செய்யும் திறமை என ஏதோவொரு துறையைக் கை வந்த […]