Tag: தை
இலங்கையில் தைப் பொங்கல்
தைப் பொங்கல் என்பது தமிழர்களின் பெருவிழா என்றே பொதுவாக அர்த்தப்படுத்தப்பட்டாலும் சிறப்பாக இவ்விழா விவசாயத்தோடும் விவசாயிகளோடும் தொடர்புள்ள ஒரு பண்டிகையாகவே ஈழத்து தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. விவசாயத்தை மையப்படுத்திய பண்டிகையாக தைப் பொங்கல் அடையாளப்படுத்தப் பட்டாலும் சர்வதேச ரீதியாகவோ அல்லது இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலோ தைப்பொங்கல் என்பது விவசாயம் சார்ந்த ஒரு பொது விழாவாகக் கொண்டாடப்படுவதில்லை. சங்க இலக்கிய காலத்தில் இருந்தே தைப்பொங்கல் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது. மழைக்கு அதிபதியாகிய இந்திரனைக் குறிக்கும் […]