Tag: ரஜினி
காலா!!

வாரணம் பொருத மார்பு.. வரையினை எடுத்த தோள்கள் … நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நா… தாரணி மௌலி பத்து, சங்கரன் கொடுத்த வாள், வீரம் …. இவையெல்லாம் கவிச்சக்ரவர்த்தி கம்பன் வில்லன் ராவணன் குறித்துப் புகழ்ந்து எழுதியவை. இவை தவிர, தனது கம்பராமாயாணத்திலே இன்னும் சொல்லலங்காரமாய் ராவணனைப் புகழ்ந்து – திரும்பவும் படிக்கவும், புகழப்பட்டது ராமனல்ல, ராவணன் – கம்பன் எழுதி எழுதி மாய்ந்துள்ளான். அவ்வளவு சிறப்புகள் மிக்கவன் ராவணன் என்பதில் கவிச்சக்கரவர்த்திக்கு எந்தச் சந்தேகமும் […]
காலா சொல்லும் பத்துப் பாடங்கள்

இது காலா படத்தில் சொன்ன பாடங்கள் அல்ல. காலாவைச் சுற்றி நடப்பதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 10 பாடங்கள், தெரியாத விஷயங்களில் தலையை நுழைக்காதே – இந்தப் படத்திற்காகத் தான் ரஜினி தூத்துக்குடி சென்றிருப்பாரென்றால் அது முட்டாள்த்தனமான முடிவு என்று ரஜினியே இப்போது அறிந்திருப்பார். அதனால் இருந்த இமேஜும் டேமேஜ் ஆனது தான் மிச்சம். சினிமாவும் ரியலும் வேறு – இது ரஜினி ஒத்துக்கொண்ட விஷயம். ரஜினி படத்தில் பேசுவதை அவர் கருத்து என்று எடுக்கக் […]
வந்தார் ரஜினி!!

கடந்த ஒரு வாரமாகத் தனது ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துவந்த ரஜினிகாந்த், டிசம்பர் 31 ஆம் தேதியன்று தனது அரசியல் நிலைபாட்டை அறிவிப்பதாகக் கூறியிருந்தார். அதனால் 31 தேதியன்று ரஜினி அறிவிக்கப்போகும் முடிவின் மீது மீடியா மற்றும் அவரது ரசிகர்களது பார்வை குவிந்து இருந்தது. இதுவரை பலமுறை தனது அரசியலைக் குறித்துச் சூசகமாகப் பேசிவந்த ரஜினிகாந்த், இந்த முறையாவது அழுத்தம்திருத்தமாக ஏதேனும் கூறுவாரா அல்லது நழுவும் மீனாகவே இருந்துவிடுவாரா என்ற கேள்வி அனைவருக்கும் இருந்தது. இதுவரை அரசியல் […]
ரஜினி Vs கமல் – யாருக்கு ஓட்டுப் போடலாம்?

கடந்த டிசம்பர் மாதம் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்த அதே சமயத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களும் தீவிர அரசியலில் இருந்து உடல் நிலை காரணமாக விலகினார். தமிழகத்தின் அசைக்க முடியாத ஆளுமைகளாக இருந்த இந்த இருவரும் விட்டுச் சென்ற வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பலரும் முயலுகிறார்கள். ஏற்கனவே களத்தில் இருப்பவர்கள், களத்திற்கு வர நினைத்தவர்கள், எங்கிருந்தோ வந்தவர்கள் எனப் பல வகையினரை இப்போது காண முடிகிறது. அதில் முக்கியமாக ரஜினி, கமல் இருவரையும் […]