Tag: ரஹ்மான்
ஏ. ஆர். ரஹ்மான் – 25
ஏ.ஆர்.ரஹ்மானுக்குத் திரையுலகில், இது இருபத்தைந்தாவது ஆண்டு. 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று ரோஜா வெளியான சமயம், அவருடைய வயது 25. இந்த இளைஞன் தான் இந்திய இசையைப் புரட்டிப் போடப் போகிறான் என்றும், இவன் உள்ளூர் இசையை உலகிற்கும், பலவகை உலக இசையை நம்மூருக்கும் பரப்பவிருக்கும் ஆஸ்கர் நாயகனாக இருப்பான் என்று யாரும் எண்ணியிருக்கவில்லை. சாதனைகளுக்கு எந்த நிறுத்தமும் இல்லாமல், ஓடிக் கொண்டிருக்கும் ரஹ்மானின் இசைப்பயணத்தை, அவருடைய சிறந்த 25 பாடல்களைக் கேட்டுக்கொண்டே […]