Tag: விமர்சனம்
இரும்புத்திரை
ஒரே மாதிரி கதைக்களம் இல்லாமல் படம் எடுப்பது சிறப்பு, அதையும் பார்க்கும்படி எடுப்பது மேலும் சிறப்பு, அதில் ஒரு கருத்தைச் சொல்லி, பார்ப்பவர்களை அது குறித்து யோசிக்கச் செய்வது பெரும் சிறப்பு. இந்தச் சிறப்பினைச் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மித்ரன் அவர்கள். இரும்புத்திரை படத்தில் டிஜிட்டல் உலகின் பாதகங்களைச் சீரியஸாக அலசியிருக்கிறார் மித்ரன். முதலில் அவருக்கு நம் பாராட்டுகள். ராணுவப் பயிற்சி அளிக்கும் அதிகாரியாக வரும் விஷால், அடிக்கடி அதிகம் கோபம் அடைவதால், பணி நீக்கம் செய்யப்பட்டு […]
வேலைக்காரன்
தனி ஒருவன் படத்திற்குப் பிறகு இயக்குனர் மோகன் ராஜாவும், ரெமோ படத்திற்குப் பிறகு சிவகார்த்தி்கேயனும் இந்த வேலைக்காரனில் கைகோர்த்திருக்கிறார்கள். தங்கள் முந்தையப் படங்களில் வெற்றிப் பெற்ற இயக்குனரும் நாயகனும் தரும் அடுத்தப் படம் என்பதால் இயல்பாகவே இப்படத்தின் மீது ஒரு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்பைப் படம் பூர்த்திச் செய்ததா எனப் பார்ப்போம். கொலைகாரக் குப்பத்தில், குப்பத்து மக்களுக்கெனப் பிரத்யேக ஃஎப்.எம். சர்விஸ் தொடங்குகிறார், அம்மக்களுக்கான அக்கறையுடன் அங்கிருக்கும் படித்த வேலையில்லாத இளைஞரான சிவகார்த்திகேயன். அந்த வானொலிக்கான […]
விக்ரம் வேதா
மணிரத்னம் பாணியைக் கையில் எடுத்திருக்கிறார்கள் இயக்குனர்கள் இணை காயத்ரி புஷ்கர். மணிரத்னம் தான் மஹாபாரதம், சத்தியவான் சாவித்திரி, ராமாயணம் என நாம் கேட்டு அறிந்த புராணக் கதைகளை, நாட்டு நடப்புகளுடன் இணைத்து, படங்களைக் கொடுத்து வந்தார். ரௌடியான கர்ணன், காஷ்மீர் போன சத்தியவான், சந்தன மரக் கடத்தல் செய்த ராவணன் என்று புராண மிக்ஸ் கதாபாத்திரங்களை வடிவமைத்து வந்தார். அந்த வகையில், இதில் நாம் சிறு வயதில் கேட்ட, வாசித்த, ரசித்த விக்ரமாதித்தன் வேதாளம் கதையை என்கவுண்டர் […]