Tag: வைரமுத்து
திரைக் கவிஞர்கள் பார்வையில் அழகு
சென்ற பதிவில், பார்வையற்ற ஒர் இளைஞன், தனக்கு நெருக்கமான ஒரு பெண்ணின் அழகைத் தொட்டு, உணர்ந்து தான் கேள்விப்பட்ட பொருளோடு ஒப்புமை செய்த பாடலான ‘அழகே, அழகு’ பாடலைக் கண்டோம். ஒரு சாமான்யருக்கே காதல் வசப்பட்டவுடன், உலகமே அழகாக தோன்றத் துவங்கிவிடும்; பார்க்கும் பொருட்களை எல்லாம் இனிமை பொங்கிட, தனது காதலி/காதலனுடன் இணைத்துப் பார்க்கத் தூண்டும். ‘பாலிருக்கும், பழமிருக்கும் பசியிருக்காது; பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது’ என்ற நிலையே பொழுதெல்லாம் நீடிக்கும். இயற்கையின் படைப்புகளிலுள்ள அழகையெல்லாம் […]
திகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள் – 2
பாகம் 1 சென்ற மாதக் கட்டுரையில் கண்ணதாசனின் வியத்தகு பாடல்களில் ஒன்றான ‘பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா’ என்று ஐய வினாக்களால் தொடுக்கப்பட்ட பாடலைப் பார்த்தோம். ஐய வினாக்கள் (சந்தேகக் கேள்விகள்) பொதுவாக ‘ஆ’ என்ற விகுதியுடன் முடிவடையும். இது மலரா, அது மலையா போன்ற கேள்விகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த வகைக் கேள்விகளின் நீட்சியாக ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய இரண்டு பொருட்களைக் குறிப்பிட்டு இதுவா, அதுவா என்று கேட்பதுமுண்டு. ‘பழம் இனிக்கிறதா, கசக்கிறதா?’, […]