Tag: American Election
யார் இந்த கமலா ஹாரிஸ்?

2020 அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திருமதி. கமலா ஹாரிஸ் அவர்களின் பின்புலம் குறித்தும், அவர் கடந்து வந்த பாதை குறித்தும் இந்த வலையொலிப் பகுதியில் திரு. ரவிக்குமார் அவர்கள் விவரித்துள்ளார். திருமதி. ஹாரிஸ் அவர்களின் தேர்வுக்கான காரணம் மற்றும் அவருடைய தேர்வு இந்தத் தேர்தல் களத்தில் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் போன்றவை குறித்தும் இந்த உரையாடலில் அலசப்பட்டுள்ளது. வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.
கொரோனா அலையில் அமெரிக்கத் தேர்தல்

கோவிட்-19 னால் இத்தேர்தலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளனவா? திட்டமிட்டபடி, இந்த தேர்தல் நடந்து முடிந்துவிடுமா? இந்த தேர்தலில் மக்களின் தீர்ப்பைத் தீர்மானிக்க போகும் முக்கிய காரணிகள் எவை ? போன்ற கேள்விகளுக்கு இந்த பகுதியில் பதிலளித்துள்ளார், திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்கள். வாருங்கள்… கேளுங்கள்… பகிருங்கள்… உரையாடியவர் – சரவணகுமரன்.
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 9

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 9 கடந்த சில வாரங்களாக, ஏணிகளும், பாம்புகளும் கொண்ட பரமபத விளையாட்டைப் போன்று அமைந்திருந்தது அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களின் நிலை. இந்தக் கட்டுரைத் தொடரின் முந்தைய பகுதியில், ஜனநாயகக் கட்சியின் ஹிலரி கிளிண்டன் கணிசமான வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதாகவும், இந்நிலை எப்போது வேண்டுமானாலும் மாறக் கூடும் என்றும் முடித்திருந்தோம். செப்டம்பர் மாத மத்தியில் நிலைமை மாறி, டானல்ட் ட்ரம்ப் வெகுவாக முன்னேறி, இரண்டு புள்ளிகள் வித்தியாசத்திலேயே பின்தங்கியிருந்தார். பின்னர் நடந்தேறிய […]