Tag: Corona
தன்னார்வலர்களின் முகக் கவசத் தயாரிப்பு

இன்றைய தினம் உலகையே ஸ்தம்பிக்கச் செய்து மனிதர்களைப் பயமுறுத்தி, வீட்டில் அடைப்பட்டிருக்கச் செய்த, கொடிய நோயாக கொரோனா வைரஸ் உள்ளது. அவசியக் காரணங்களுக்காகக் கூட வெளியில் செல்வதற்கு மிகவும் பயந்து போய் உள்ளனர். இந்த நோய் எப்படி பரவுகிறது என்று தெரியாத சூழ்நிலையில் மக்கள் வெளியே செல்வதற்கு முகக் கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முகக் கவசத் தயாரிப்பில் பல நிறுவனங்கள் இருந்தாலும் அனைத்து தொழிலாளிகளும் பணிக்கு வர முடியாத நிலையில், பல நிறுவனங்களில் […]
வளரும் வணிகங்கள்

உலகெங்கும் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் இக்காலகட்டத்தில் சில வணிகங்கள் பெரிதும் வளர்ந்து வருகின்றன. கொரோனாவினால் பலவகைப் பிரச்சினைகள் உருவாகி, பல வணிகங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளானாலும், பல வணிகங்களுக்குப் புதுப் பிறப்பாக இக்காலகட்டம் அமைந்துள்ளதையும் காணமுடிகிறது. மக்களின் முன்னுரிமையில் உருவாகியுள்ள மாற்றம், இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. பல நாடுகள் லாக்-டவுன் எனப்படும் ஊரடங்கு முறையில் பல்வேறு நிலைகளில் உள்ளன. பொதுவாக, மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. பயணங்கள் குறைந்துள்ளன. வீட்டில் இருந்தே பல்வேறு பணிகளைச் செய்யத் […]
சாபம் பொய்யாகட்டும் ….

மகா அசுரன் கொரோனாவின் கோரத்தாண்டவத்திலும் இனிய பல சம்பவங்கள் நிஜமாய் நிகழும்போது,,,, கல்மனம் கொண்ட மனிதனே உதவும் உள்ளங்களாக உலவும் போது,,,, கடவுளே கதவைச் சாத்திக்கொண்டபோதும், எமனே அஞ்சி ஒதுங்கிட, மருத்துவர்களோ…. கொரோனாவையும் நோயாளியையும் சவாலோடு சந்திக்கும்போது…. (சில )மனிதனே உன் இதயத்தில் இன்னுமா இரக்கம் பிறக்கவில்லை??? நீ காட்டுவாசியானதேனோ? மிருகத்தனமாய் தாக்குதல் தொடுத்து மருத்துவரின் மரண உடலையே கதறவைத்தாயே… சர்வ வல்லமையும் கொண்ட சமூகமே அதிர்ந்து போனதே… நீ , கொரோனாவை […]
நாகரீகம்..!!!

“இந்தியாவிடம் மருந்து அனுப்ப வேண்டுமாய்க் கேட்டுள்ளோம். அவர்கள் தரவில்லை என்றால் பரவாயில்லை .. ஆனால் அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம்.. There may be a retaliation, why wouldn’t there be?” – உலகத்தின் வளர்ந்த நாடான அமெரிக்காவின் அதிபர் மேதகு டிரம்ப் அவர்கள். — ஆகா என்ன ஒரு நாகரீகம், நட்புணர்வு, தலைவனுக்கான பேச்சு பாருங்கள். ஊரில் பொறுக்கித் தனம் செய்து கொண்டு திரியும் மூன்றாந்தர குடிமகனைப் போல பேசியுள்ளார் .. இந்தப் பைத்தியக்காரப் […]
கொரோனா

மென்மை எனும் இப்பூவுலகின் உண்மை நிறம் தன்மை மாற வன்மை கொண்ட மண்ணை ஆள்பவன் திண்மை நிரம்பி அதனை மாற்ற வந்ததோர் பிணி உலகில் மரித் தோர் பிண லட்சம் தரித் தோர் நுனி உயிரில் காத் தோர் எனக் கடவுள் நெஞ்ச மது பதைப தைக்க அச்ச மது அதைச்சி தைக்க தஞ்ச மது தனிமை யிருக்க மிஞ்சி யது மனிதம் காக்க காப் பாய் மனித சேனா வாழ்! தீய […]
உலகைப் புரட்டிப் போட்ட கொரோனா

கொரோனா வைரஸ் குறித்த நமது முந்தைய கட்டுரை (கொடூர கொரோனா) வெளிவந்து இரு மாதங்கள் ஆகின்றன. அதற்குள் எவ்வளவு மாற்றங்கள்? அச்சமயம் அமெரிக்காவில் 8 பேருக்குத் தான் இந்தப் பாதிப்பு இருந்தது. இன்றைய நிலையில் இரண்டு லட்சம் என்ற எண்ணிக்கையை நோக்கி மீட்டர் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இடையில் ஈரான், இத்தாலி எனப் பல நாடுகள் ஆயிரக்கணக்கான மக்களை இழந்திருக்கின்றன. இந்தியா இழப்புக் கணக்கைத் தொடங்கி, மொத்த நாடும் வீட்டிற்குள் முடங்க முயன்றுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நேற்றைய செய்தி […]
கொரோனா… கொரோனா…

குறிப்பு: உலகம் முழுவதையும் பீதியில் ஆழ்த்தியிருக்கிறது இந்த கொரோனா வைரஸ். இது குறித்துப் பலவிதமான புள்ளி விவரங்களும், பாதுகாப்புக் குறிப்புக்களும் வந்த வண்ணமுள்ளன. அவையனைத்தையும் படித்துப் பயன்பெறும் அதே வேளையில், இதனையே சற்று நகைச்சுவையாக அணுகலாம் என்ற எண்ணத்தில் விளைந்த கற்பனையே இது. “வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்ற நம்பிக்கையில் படிக்க வேண்டிய, சாதாரணப் பொழுது போக்கு மட்டுமே!. “ஏன்னா… இருபத்தியோரு நாள் ஆத்துக்குள்ளயே மொடங்கிண்டு இருக்கிறது எப்டி?” நீட்டி முழக்கிக் கேட்டுக் கொண்டே, […]