Tag: Deepavali
பட்டாசில்லா தீபாவளி!!
பஞ்சணையில் நாம்துயில பஞ்சத்திலே தனையிழந்து பரிதவிக்கும் நிலையினிலே பலகுடும்பம் இருக்குதிங்கே! பட்சணங்கள் இனிப்புகளென பலவிதமாய்க் கொண்டாடுகையில் பசிக்கொடுமை தாங்காது பட்டிதொட்டி துடிக்குதங்கே! பட்டங்கள் பெற்றிட்ட பட்டிணத்து நீதியரசர்கள் பட்டாசுக்கு விதியமைக்க பட்டதுயர் விளக்கிடுமுன் பச்சிளஞ் சிறார்களும் பள்ளிக்குச் சென்றிடாமல் பட்டாசுத் தொழில்புரிவது பலகாலம் நடப்பதென்று பக்குவமாய் உணர்ந்துநாமும் பழிபாவம் ஒன்றறியா பச்சிளம் பாலகரின் படிப்பினை நெஞ்சிலிட்டு பலர்பேசும் வம்பதனை பயனில்லையென ஒதுக்கிவைத்து பட்டாசில்லா தீபாவளியை பண்போடு கொண்டாடிடுவோம்! – வெ. மதுசூதனன்
சுகமான தீபாவளி
”ஏன்னா… நான் சொன்னேனே.. ஜிலேபி ரெட் வாங்கிண்டு வந்தேளா?” மங்களம் மாமியின் கேள்வி தொடங்கியது. “நீ சொன்ன எல்லாம் வாங்கிண்டு வந்துட்டேண்டி.. அது ஒண்ணு தவிர… கடைக்காரா யாருக்கும் ரெட்டுனா என்னன்னே தெரியலடி… அது தமிழ் வார்த்தைதானா?” ஒரு சாதாரணத் துணிக்கு பதினைந்து ரூபாய் தர வேண்டுமா என்ற எண்ணத்தில் விட்டுவிட்டு வந்து, அதைச் சமாளிப்பதற்காக இழுத்தார் சுந்தரம் மாமா. “ஆமா.. உங்களுக்கு ஒண்ணு வாங்கிண்டு வர சாமர்த்தியமில்லன்னா, நேக்குத் தெரியாதுன்னு சொல்லிடுங்கோ… ஜிலேபி ரெட்டு தெரியாதவா […]