Tag: Drama
தெருக்கூத்து பயின்றால் நல்ல நடிகராகலாம்

நவீனத் தமிழ் மேடை நாடக மூத்த இயக்குனர், முனைவர் திரு. ராஜு ராஜப்பன் அவர்கள் இந்த நேர்காணலில் தனது நாடக உலக அனுபவங்களையும், தமிழ் நாடக உலகின் வளர்ச்சி குறித்தும் உரையாடி இருக்கிறார். பேட்டி எடுத்தவர் – சரவணகுமரன் ஒளிப்படக்கலைஞர் – ராஜேஷ் கோவிந்தராஜ்
நவீனத் தமிழ் மேடை நாடக இயக்குனர் முனைவர் திரு. ராஜு நேர்காணல்

சமீபத்தில் மினசோட்டா வந்திருந்த நவீனத் தமிழ் மேடை நாடக உலகின் மூத்த இயக்குனர், முனைவர் திரு. ராஜு ராஜப்பன் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நேர்காணலில் அவரது நீண்ட நெடிய மேடை நாடக அனுபவம் மற்றும் திரைப்படங்களில் நடித்த அனுபவம் குறித்து கேட்டு தெரிந்து கொள்ள முடிந்தது. நேர்காணலின் முதல் பகுதி பேட்டி எடுத்தவர் – சரவணகுமரன் ஒளிப்படக்கலைஞர் – ராஜேஷ் கோவிந்தராஜ்
காசேதான் கடவுளடா நாடகம்

அக்டோபர் ௮, 2017 , மினியாபொலிஸ் நகரைச் சிரிப்பு புயல் தாக்கியது. 1970 ல் வெளிவந்த காசேதான் கடவுளடா தமிழ்ப் படத்தை நாடகமாக்கியுள்ளார் Y Gee மகேந்திரன். அவர் நடத்தும் யுனைடெட் அமெசூர் ஆர்ட்டிஸ்ட் (United Amateur Artists) நிறுவனத்தினர் அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். ஷங்கர் கிருஷ்ணன் நடத்தும் மினசோட்டா பிரெண்ட்ஸ் கேரியோக்கி (Minnesota Friends Karaoke) என்னும் மினியாபொலிஸ் அமைப்பு இவர்களை அழைத்து வந்தது. திரு Y Gee மகேந்திரன் இந்த நாடகத்தில் தேங்காய் ஸ்ரீனிவாசன் […]