Tag: Fishing
பனி ஏரியில் மீன் பிடிக்கலாமா?
மினசோட்டாவின் நிலப்பரப்பெங்கும் ஏரிகள் நிறைந்து இருக்கின்றன. இந்த நிலப்பரப்பிற்கேற்றாற்போல் இங்குள்ள மக்களின் முக்கியப் பொழுதுபோக்காக மீன் பிடித்தல் உள்ளது. மீன் பிடித்தல் என்றால் கோடைக்காலத்தில் நீர்நிலைகள் நிரம்பியிருக்கும் போது மட்டுமில்லாமல், குளிர்காலத்தில் நீர்நிலைகள் பனியாக உறைந்திருக்கும் போதும் அதைத் தொடர்வது தான் இங்குள்ள சிறப்பு. வெப்பமான நிலப்பரப்பிலிருந்து வந்திருக்கும் இந்தியர்களுக்கு, குளிர்காலத்தில் கடைகளுக்குச் சென்று வருவதே பெரிய சாகசமாக இருக்கும். அதுவே மினசோட்டாவின் கடுங்குளிருக்குப் பழகிய உள்ளூர்காரர்கள், பொழுது போகவில்லை என்று குளிரில் உறைந்திருக்கும் ஏரியில் மீன் […]
மினசோட்டா மீன் தேடல்
தூத்துக்குடி போகும்போதெல்லாம் காலையில் எழுந்து துறைமுகம் பக்கமிருக்கும் கடற்கரைக்குச் செல்லும் வழக்கமுண்டு. அச்சமயத்தில் அங்குக் கடலுக்குள் சென்றிருக்கும் சிறு சிறு படகுகள் கரை திரும்பி வரும் நிகழ்வைக் காணும் வாய்ப்பு கிடைக்கும். படகுகள் சிறியதாக இருந்தாலும், அவற்றில் நிறைய மீன்கள் பிடிக்கப்பட்டுக் கரைக்கு வந்து சேரும். கடற்கரையில் அந்த மீன்கள் மற்றும் இதர பிடிபட்ட கடழ்வாழ் உயிரினங்கள் கொட்டப்பட்டு, வகைவாரியாகப் பிரிக்கப்பட்டு, ஏலம் விடப்படும். நடைபயிற்சிக்கு வந்தவர்கள், வீட்டிற்கு மீன் வாங்க வந்தவர்கள், கூடையில் போட்டு வீதி […]