Tag: H1B
அமெரிக்கா வருபவர்களுடைய முதல் 10 வேலைகள்
பணி நிமித்தம் புதிதாக அமெரிக்கா வருபவர்கள், வந்தவுடன் முதல் வாரத்தில் செய்ய வேண்டிய 10 முக்கிய வேலைகள் இவை. அமெரிக்கப் பயணத் திட்டத்தில் உங்கள் குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ இருந்தால், தவறாமல் இதைப் பகிரவும். I-9 வேலைக்குச் சேர்ந்து முதல் மூன்று நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டியது – I-9 பாரம் (Form I-9). ஒரு ஊழியரைப் பணியில் அமர்த்துவதற்கு முன் அவருடைய வேலை செய்வதற்குரிய தகுதியுடன் இருக்கிறாரா என்று அந்த நிறுவனம் சரிபார்க்கும் நடைமுறை இது. முதலில் […]
பச்சையட்டைப் போட்டி
தற்காலிக அடிப்படையில் பணி நிமித்தம் நுழைவுச்சான்று (H1 VISA) பெற்ற ஆசியர்களுக்கு அமெரிக்கக் குடிவரவுச் சட்டம் ஏற்கனவே மிகத் தலையிடித் தரும் விடயம். 2019 ஆம் கொணரப்பட்ட நிரந்தர வதிவிட உரிமைத் திருத்தங்கள், அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியைக் கொண்டுவந்துள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட விண்ணப்ப பரிசீலனை தாமதங்கள் பலரை, குறிப்பாக அரை மில்லியன் இந்தியர்களையும், பல நூறாயிரம் சீனர்களையும் பாதித்துள்ளன. நிரந்தர வதிவிட விண்ணப்ப பின்தங்கல்களை நிவர்த்தி செய்ய பல்வேறு அமெரிக்கத் தொழில்நுட்ப […]
அமெரிக்கக் குடிவரவு மாற்றங்கள் 2017
2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்கக் குடிவரவு சட்டக் கையாளல்கள் பல்வேறு மாற்றங்களிற்கும் உள்ளாகியுள்ளது. இது சென்ற வருட சனாதிபதி தேர்தல் வாக்களிப்புகளின் பிரதி விளைவாக உருவாகியுள்ளது எனலாம். புதிய அமெரிக்க சனாதிபதி டோனல்ட் டிரிம்ப் பதவியேற்றதிலிருந்து ஏறத்தாழ 21 குடிவரவுத் தணிப்புக் கட்டளைகள் அமுலுக்கு வந்துள்ளன. இது சில அரசியல் ஐதீகங்கள் அடிப்படையில் அமைந்திருப்பினும் இந்தத் திருப்பம் அமெரிக்கப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு வழி வகுக்கும் என்பது கேள்விக்குரிய விடயமே. சென்ற ஐம்பது ஆண்டுகளில் […]