Tag: Halloween
வென்ச்சரஸ் வெகேஷன் – பகுதி 3
பகுதி 2 அத்துவானக் காட்டுக்கு மத்தியில், அழகாக அமைக்கப்பட்டிருந்த இரயில் நிலையம். சுற்றி கண்ணுக்கெட்டும் தொலைவு வரையில் கும்மிருட்டு. அந்த இரயில் நிலையத்திலும், அதன் உள்ளிருந்த ஒரு ரெஸ்ட்டாரண்டிலும் ஒளி மயமான விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. அவைதவிர எந்தவித வெளிச்சமும் எங்கும் காணப்படவில்லை. ஆனால் இரவு நேரமதிகமாகிவிட்டதால், அந்த ரெஸ்டாரண்ட் மூடப்பட்டு, ஓரிரு விளக்குகள் மட்டுமே எரிந்து கொண்டிருந்தன. இரயில் நின்று, கதவு திறந்தவுடன் கணேஷ் மெல்லமாகத் தலையை எட்டிப் பார்த்தான்; மனது முழுதும் யாரேனும் மனிதர்கள் […]
மால் ஒஃப் அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டம்
மின்னியாபொலிஸ் நகரில் உள்ள மிகப்பெரிய மால் ஒஃப் அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டம் நடைப்பெற்றது. -சரவணகுமரன்
ஹாலோவீன்
ஆதவன் சற்றே இளைப்பாற அந்திமம் சற்றே பவனி வர விருந்தா வித்தையா என அறிந்தும் அறியாமலே விந்தையாய் கேள்விதனைக் கேட்டபடி உலாவரும் குழந்தைகளை மகிழ்விக்க அக்டோபரில் வந்த ஹாலோவீனே இன்முகத்தை முகமூடிக்குள் மறைத்தே இடையினில் மந்திரக்கோலைக் கொண்டே விந்தைபல காட்டி வியக்கச் செய்தே இனிப்புகளை அள்ளிச் சென்ற ஹாரிபார்டரையும் அறிந்தும் அறியாமலே சாகசமாய் எண்ணி மகிழ்வித்த ஹாலோவீனே இல்லாத ஆவியையும் பிசாசையும் இன்பமாய் கொண்டாடி மகிழவே காண்பவருக்கு பயத்தினையும் அணிபவருக்கு இன்பத்தையும் […]
பண்டிகைகள் – அங்கேயும் இங்கேயும்
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரம் உள்ளது. அதற்கேற்ப வழிபாடுகள், தெய்வங்கள், பண்டிகைகள் போன்றவை வேறுபடும். ஆனால், யோசித்துப் பார்த்தால் இந்தப் பண்டிகைகளிடையே சில ஒற்றுமைகளைக் கவனிக்கலாம். ஹாலோவீன் (Halloween) – ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கொண்டாடப்பட்டு வந்த இந்தப் பண்டிகை, தற்சமயம் உலகமெங்கும் பரவி வருகிறது. உலகமயமாக்கத்தால் இந்திய நகரங்களுக்கும் இது அறிமுகமாகி உள்ளது. இது குளிர்காலத்தை வரவேற்பதற்கான, இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான, குழந்தைகளிடம் பயத்தைப் போக்குவதற்கான ஒரு பண்டிகை. அக்காலத்தில் மக்கள் பழங்களை இத்தினத்தில் பரிமாறிக் கொள்வர். […]