Tag: irrigation
நான்மணிக்கடிகை காட்டும் நீர் மேலாண்மை

உலக வரலாற்றினை நோக்குமிடத்து, தமிழரின் வரலாறும் பண்பாடும் தனித்துவம் வாய்ந்தது. மனிதகுல நாகரிக வளர்ச்சிக்கும் இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் முன்னோடிகள் தமிழர்களே! இதனை நம் பழந்தமிழ் இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. இவ்விலக்கியங்கள் மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய அறத்தையும் நீதியையும் எடுத்துரைப்பதோடு, அவன் உயிர் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரமாகிய நீர் சேகரிப்பின் இன்றியமையாமையையும் கூறுகின்றன. அவ்வகையில், நீதி இலக்கியமென்று போற்றப்படும் நான்மணிக்கடிகை நீர் சேகரிப்பின் மகத்துவத்தையும் அதன் அவசியத்தையும் முன் வைக்கிறது. இதனை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. […]