Tag: love
சுறை வேறு!
“ஏன்னா, நோட் பண்ணேளா நம்ம பாரதிய? நேத்து அந்த சினிமாவுக்குப் போய்ட்டு வந்ததுல இருந்து ஒரே டல்லா இருக்காளே?” ஹாலில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்த கணேஷைக் கேட்டுக் கொண்டே அடுக்களைக்குள்ளிருந்து வெளியே வந்தாள் லக்ஷ்மி. டி.வி.யில் ரங்கராஜ் பாண்டே வழக்கம்போல் அந்த தேவேந்திரனைப் பிரித்து மேய்வதை ரசித்துக் கொண்டே, கவனத்தை டி.வி.யை விட்டு விலக்காமல், சற்றும் ஈடுபாடில்லாமல் “என்னடி சொல்ற?” என்று கேட்டான் கணேஷ். “அதானே, நான் சொல்றதுல என்னக்கு கவனமிருந்துது உங்களுக்கு; எப்பப்பாத்தாலும் ஏதோ […]
காதல்
அந்தி சாயும் வேளையிது மல்லியின் வாசம் வருடுகிறது தென்றல் என்னை இழுக்கிறது காதலன் வரவிற்காக ஏங்குகிறது …! சோலைக்குயில் கூவும் நேரமிது உறைபனியின் நடுக்கம் குறைகிறது பால்நிலவு அவளால் எரிகிறது கண்ணாளனை நோக்கியே காலம் கனிகிறது..! காதலில் இன்பம் பொங்குகிறது மோகத்தின் வேதனை பொங்குகிறது இதழில் கவியெழுதத் துடிக்கிறது காதலனின் நெஞ்சில் சாய்ந்திடத் துடிக்கிறது …! மோகத்தின் உச்சத்தில் உறைகிறது மனம் இன்பத்தின் லயத்தில் லயிக்கிறது இரவின் நீலத்தை வேண்டுகிறது காதலனின் வரவை […]
மணியோசை
அறையில் ஏர் கண்டிஷனர் ‘ஹுஸ்ஸ்ஸ்’ என்ற சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. சவிதாவின் நீள விரல்கள் லேப்டாப்பில் சடசடவென்று தட்டிக் கொண்டிருந்த சத்தமும் கூடவே சேர்ந்து கேட்டது. அவ்வளவு ஏன், அடுத்து என்ன எழுதுவது என்று சவிதா தன் கட்டைவிரல் நகத்தால் தனது லிப்ஸ்டிக் உதட்டை வருடியது கூட தெளிவாகக் கேட்டது. ‘ட்ரிங்… ட்ரிங்…’ …காலிங்பெல். யாராக இருக்கும்? ரூம் சர்விஸ் கூட எதுவும் சொல்லவில்லையே. ஒரு வேளை விஸ்வா ஏதாவது சொல்லியிருப்பானோ? ‘ட்ரிங்…. ட்ரிங்… ட்ரிங்… ட்ரிங்…’ […]
காதல் விளம்பல்கள்
காதல் கொண்டேன் ! தொடாமலே பார்க்கிறேனடி கண்ணாலே கொல்றியேடி துண்டு துண்டா ஆகிறேனடி ஒரே பார்வை பாரேண்டி! எனைக் களவாடியே போறியேடா உன்னாலே உசிறே போகுதடா ஊரார் பார்வை எரிக்குதடா உன் பார்வைக்கு ஏனோ ஏங்குதடா! காதல் காவியம் படைத்திடத் தானடி கடல்கடந்து பொருள் ஈட்ட வந்தேனடி ஊராரை உன் பார்வையால் எரித்துடுடி உன்னாலே உயிர் வாழ்கிறேனடி! எனைக் கவர்ந்த கள்வனடா கரையோரம் விழி வைத்தேனடா கனவினிலே கட்டியணைக்கக் கண்டேனடா கனவு நனவாக சித்தம் கொண்டேனடா! அந்த […]
ஏ புள்ள……!!!
கஞ்சிக் கலயம் கொண்டு கடைக்கண்ணால் எனைக் கட்டி இழுத்துக் கொண்டு களத்து மேட்டில் நடந்து வயக்காட்டுப் பக்கம் போற புள்ள ….! கட்டழகு மேனியால் இந்த மாமன் மனதை களவாடியவளே வழியில் கள்ளர் பயமிருந்தால் சொல்லு புள்ள கள்ளழகராய் ; கட்டிளங் காளையாக வழித் துணையாக நானும் வாறேன் புள்ள …! கண்ணாலே கதை பேசி கயவரைக் காலால் புறந்தள்ளிவிட்டு கண் நெறஞ்ச மச்சானைக் கண்ணுக்குள்ளே பூட்டி வைச்சு….. கருமேகக் கூட்டம் வருமுன்னே விரசா வீடு வந்து […]
அறிந்தும் அறியாமலே….!!!
உணர்வுகள் மறந்த உடலொன்று
உறக்கம் கொள்ளும் பகலையும்
உன் நினைவைச் சுமந்த ஞாபகங்கள்
இரவிலும் விழித்திருக்கும் என்பதை
உணர்ந்தாயோ?
கட்டழகு மேனியில் கரைந்த பொழுதையும்
கள்ளச்சிரிப்பில் உறைந்த கனத்தையும்
முகமறியாக் காதல்
முகம் தேவையில்லை
முகவரியும் தேவையில்லை
முகமறியா முகப்புத்தகத்தில்
முதல்வனாய் என்னுள் முளைத்த
மூன்றெழுத்துக் காதலுக்கு …!!
மனதில் தோன்றிய முதல் காதல்
மனிதனாய்ப் பிறந்ததன் பயனை அறியச் செய்த காதல் …
மனிதனுள் புதைந்த சுவடுகளை
மனதினுள் புகுந்து வெளிக்கொணரும்
மகத்துவமே காதல் ….!!
காதல் கொண்டேனடி !
நீ காஷ்மீர் சென்றால்
இமயமலையே திரும்பிப் பார்க்கும்
நீ கன்னியாகுமரி சென்றால்
கடலும் எழுந்து பார்க்கும்
யார் இந்த ( கன்னிய)குமாரி என்று
நீ எல்லையில் நடந்தால்
தீவிரவாதமோ தவிடு பொடியாகும்
சேலையின் தகதகப்பில் கடுங்குளிரும்
தென்றலாய் வருடிடும்
கன்னியும் காதலியும் !
கருணை இல்லாத
காட்டுமிராண்டி
நாட்டுக்குள்ளே
புகுந்தது போல்
விம்மி நிற்கும்
விரதாபம் !
உள்ளே பதுங்கும்
வெண்புலியாய்
அவனது
விரகதாபம் !