Tag: love
முதற் காதல்
எழுதி எழுதித் தீர்த்தாலும் இனி
எழுதுவதற்கு இல்லையென இருந்திட இயலாது….
அழுது அழுது தீர்த்தாலும் இனி
அழுவதற்கு ஏதுமில்லையென அமைந்திட இயலாது…
அரும்பாக இருக்கையிலே அழகாக அரும்பியது
துரும்பாக இருந்ததையும் தூசிதட்டி விரும்பியது
குறும்பாக நடந்ததெல்லாம் குறுகுறுத்துப் பருகியது
இரும்பான இதத்தையும் இளக்கிடவே திரும்பியது
எசப்பாட்டு – இரண்டாம் காதல்
உசுருக்கு உசுரா ஆச வச்சோம்
உறவா மாறிப்போக ஆச வச்சோம்
உடனே சேந்துவாழ ஆச வச்சோம்
உடலு வேற உயிரொண்ணுனு ஆச வச்சோம்
உலகம் சுத்திவர ஆச வச்சோம்
உலவும் தென்றலாக ஆச வச்சோம்
நேர்மைக் காதல்
கன்னியிவளைக் காதலிக்கும் வேளையிலே
கண்களிரண்டிருந்தும் காட்சியிலாக் குருடனாயிருந்தேன்
கண்ணொத்த கன்னியவள் காதலினால்
கருத்தொருமித்துக் கண்களாயிருப்பாளென்ற கற்பனையால்.
அகம்புறமென அறுபதுக்குமேல் செய்யுளறிந்தும்
அறிவிலியாய் இருப்பதே அவளின்கவனமென
அமைதியாய் வாழ்ந்திருந்தேன் அந்நாளில்
அணங்கவளின் கடைப்பார்வை என்மேல்விழுமென…
நிதர்சனம்
சரமென பொழிந்த நீர்த்துளி ஓடையில்
சுகித்து மகிழ்ந்து நீராடி ஓய்கையில்
சிப்பியென் இதழோரம் தங்கிய ஓர்துளியை
சிதறாது துடைத்திட ஓர் பணிப்பெண்!
கண்கள் இல்லாக் காதல்
கண்கள் இல்லாக் காதல் கண்கள் காணாக் காளையர் தமக்கும் கருத்தில் வந்து தோன்றும் காதல் பெண்கள் உறவு புரிந்தவர் எவர்க்கும் புறத்தில் நின்று போற்றும் காதல். தேசம் விட்டுத் தேசம் பெயர்ந்து காசது தேடிக் கடலும் கடந்த பாசம் மிக்க பலரும் போற்றும் சுவாசம் ஒத்த உணர்வே காதல். இளமையில் தோன்றி பூரித்து நின்று இனிமையே என்றும் வலம்வர இயைந்து வளமையும் தாண்டி வறுமையே வரினும் தனிமையது இன்றித் தழுவுவதே காதல். உடலின் அழகை உணர்வில் […]
காதலியே …
காரிகையே எந்தன் காதலியே
கண்ணில் ஏனிந்த காந்தம் கொண்டாய்?
கணைத் தொடுத்தாய் எனைக் கடைந்தெடுத்தாய்
காதல் கலையெனப் பெயரும் தந்தாய்-உன்
விழி யசைவில் எனை வீழ்த்திச் செல்லும்
வித்தையை எங்கு கற்றாய்?
என் காதலே
காதல் காவியம் படைத்தேன் உனக்கு
கண்ணே அருகில் வாராய்
உயிரெனும் ஓவியம் வடித்தேன் உனக்கு
உயிரே நீயும் பாராய்
எசப்பாட்டு – காதல்
காதல்.. கனவில் நினைந்து கண்ணில் மலர்ந்து கருத்தில் கலந்து கல்லறைவரை தொடர்ந்தது… காதல்… கன்னியை நினைந்து கருத்துடன் மணந்து கட்டிலில் இணைந்து கருக்களாய் மலர்ந்தது… காதல் களவினில் மலர்ந்து கவிபல புனைந்து கண்ணியம் கலந்து கல்யாணத்தில் முடிந்தது…. -வெ. மதுசூதனன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ காதல் கண்ணில் கனிந்து கருத்தில் கனத்து கானமாய் இசைந்து கானலாய் கரைந்தது. காதல் கனவில் மலர்ந்து காஞ்சனமாய் கவர்ந்து காந்தமாய் இழுத்து காலையில் மறைந்தது. காதல் காவியமாய் துளிர்த்து காமத்தில் எரிந்து காலமாகி பொய்த்து […]
கனவுக் கன்னி
கண் மூடி நான் நினைத்தால்
கனவு போல் நிழல் உருவம்
கலை நயம் மிகுந்த பிரம்மன்
கருவி கொண்டு செதுக்கிய சிற்பம்
காதலும் காமமும்
காதல்
கட்டிய சேலை சற்றே விலகினால்
காதில் சொல்லித் திருத்தச் செய்யும்!
காமம்
கண்ணில் கண்ட பெண்களை எல்லாம்
காந்தர்வமாய் துகில் உரிந்து மெல்லும்!