Tag: Movie Review
இரும்புத்திரை

ஒரே மாதிரி கதைக்களம் இல்லாமல் படம் எடுப்பது சிறப்பு, அதையும் பார்க்கும்படி எடுப்பது மேலும் சிறப்பு, அதில் ஒரு கருத்தைச் சொல்லி, பார்ப்பவர்களை அது குறித்து யோசிக்கச் செய்வது பெரும் சிறப்பு. இந்தச் சிறப்பினைச் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மித்ரன் அவர்கள். இரும்புத்திரை படத்தில் டிஜிட்டல் உலகின் பாதகங்களைச் சீரியஸாக அலசியிருக்கிறார் மித்ரன். முதலில் அவருக்கு நம் பாராட்டுகள். ராணுவப் பயிற்சி அளிக்கும் அதிகாரியாக வரும் விஷால், அடிக்கடி அதிகம் கோபம் அடைவதால், பணி நீக்கம் செய்யப்பட்டு […]
மெர்சல்

ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. அட்லீயின் ஸ்டைல், ஏற்கனவே ஹிட்டான ஒரு படத்தைத் தற்போதைய ட்ரெண்டிற்கு மீள் – உருவாக்கம் செய்வது. மௌனராகம், சத்ரியன் என முதல் இரண்டு படங்களில் மணிரத்னத்தை ஃபாலோ செய்தவர், மூன்றாம் படமான மெர்சலில் அபூர்வ சகோதரர்கள் சாயல் கதையை, தனது குருநாதர் ஷங்கர் பட பாணியில் படமாக்கியிருக்கிறார். முதல் முறையாக, மூன்று வேடங்களில் விஜய். பத்து வேடங்களில் நடித்தாலும், விஜய் வித்தியாசம் காட்ட மாட்டார் என்று தெரியும். அவரென்ன வச்சுக்கிட்டா […]
குரங்கு பொம்மை

தமிழ் சினிமாவின் போக்கும், வளர்ச்சியும் அந்தந்தக் காலக்கட்ட இயக்குனர்களின் வரவைப் பொறுத்தே அமைந்துள்ளது. மேடை நாடகப் பின்னணியில் இருந்த வந்த இயக்குனர்கள், இலக்கியத் துறையில் இருந்து வந்த இயக்குனர்கள், ஃப்லிம் இன்ஸ்ட்டியூட்டில் படித்து வந்த இயக்குனர்கள், பிரபல இயக்குனர்களிடம் பாடம் பயின்ற இயக்குனர்கள் எனப் பலவகை இயக்குனர்களிடம் இருந்து பலவகைச் சினிமாக்களை நாம் கண்டிருக்கிறோம். தற்சமயம் நாம் காண்பது சின்னத்திரை குறும்படப் போட்டியில் ஜொலித்த யூ-ட்யூப் இயக்குனர்களின் படைப்புகளை. இவர்களிடம் பெரிய நடிகர்கள் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு […]
ரெமோ

ரெமோ வளரும் இளம் கதாநாயகன் என்பதில் இருந்து முன்னணி இளம் கதாநாயகன் நிலைக்குச் சென்று விட்டார் சிவகார்த்திகேயன் எனலாம். காமெடி, நடனம் போன்றவற்றில் மட்டும் திறமை காட்டிக் கொண்டிருந்த சிகா, அவரின் ஒன்பதாவது படமான ரெமோவில் மேக்கப், நடிப்பு, டப்பிங் போன்றவற்றிலும் தனது திறமையைக் காட்டியிருக்கிறார். அவருக்கான ரசிகர் கூட்டம் கூடிக்கொண்டே செல்கிறது. கூடவே, கடுப்பில் பிற முன்னணி நடிகர்களது ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதும் சமூக ஊடகங்களைச் சுற்றி வரும் போது தெரிகிறது. தமிழர்களுக்கு ஒரு நடிகர் […]