Tag: Mulvaney
இம்பீச்மென்ட் – இன்றைய நிலை

2019 ஆகஸ்ட் 12ஆம் நாள், அமெரிக்க அதிபரான டானல்ட் ட்ரம்ப், தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, சில தனிப்பட்ட காரணங்களுக்காக உக்ரைன் நாட்டுக்கு வழங்கப்படவிருந்த ராணுவ உதவியை நிறுத்தினார் என்று புகார் எழுப்பினார் அடையாளம் காட்டிக்கொள்ளாத நபர் ஒருவர். விசில் ப்ளோயர் (whistle blower) எனும் இடித்துரைப்பாளரான இவர் திருவாளர் ட்ரம்ப் அப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த உக்ரைன் அதிபர் வோளோடிமரிடம், அந்நாட்டுக்கு அளிக்க அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் தந்திருந்த $250 மில்லியன் ராணுவ உதவிக்கு மாறாக, அவரிடமிருந்து […]