Tag: New year
2018-ஆம் நிகழ்வுகள்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் உடல்நலக் குறைவால் நவம்பர் 30ஆம் தேதி, ஹூஸ்டனில் காலமானார். ஜூன் 12, 1924 ஆம் ஆண்டு பிறந்த புஷ், 1967 முதல் பல அரசுப் பதவிகளை வகித்து வந்தவர். 1981 முதல் 1989 ஆம் ஆண்டு வரை ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்தபோது, துணை அதிபராக செயல்பட்டார். பின்னர் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்று அமெரிக்காவின் 41ஆவது அதிபராக 1989 முதல் 1993 வரை பதவி […]
அமெரிக்காவில் விடுமுறை 2017 கொண்டாட்டங்கள்
அமெரிக்காவில் டிசம்பர் மாதம் என்றாலே நினைவுக்கு வருவது விடுமுறை கொண்டாட்டங்கள், நத்தார் (Christmas) தினக் கொண்டாட்டம் மற்றும் சிறப்பு விருந்துகள் ஆகியவையே ஆகும். இந்தக் கொண்டாட்டங்களின்போது வண்ண வண்ண அலங்கார விளக்குகள் பலவற்றை அலங்கரித்துச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு மையக் கருத்தை வைத்து அலங்காரம் செய்வார்கள். அதுபோன்ற அலங்காரங்களிலும், கொண்டாட்டங்களிலும் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்களுக்காக:
நியூ இயர் ரெஸொல்யூஷன்
”ஏன்னா… அடுத்த வாரம் வருஷப் பொறப்பு… என்ன ரெஸொல்யூஷன் எடுக்கறதா இருக்கேள்?..” ஏதோ பொடி வைத்துக் கேட்கிறாள் என்பதாக உணர்ந்த கணேஷ், உஷாரா இருக்கணும் என்ற உள் மனக் குரலுக்கு மதிப்பளித்து, “ஏன்.. ஏன் கேக்குற?” என்று பொதுப்படையாகக் கேட்டு வைத்தான். ”இல்லன்னா.. எல்லாரும் ஏதேதோ ரெஸொல்யூஷன் எடுத்துக்கறாளே.. அது போல நீங்களும் ஏதாவது கெட்ட பழக்கத்த விடப்போறேன்னு சொல்லுவேளோன்னு பாத்தேன்” என்றாள் லக்ஷ்மி. ”ஏண்டி, நோக்கு ஏன் இந்த வம்பு? நான் பாட்டுக்கு தேமேனு டி.வி. […]