Tag: pumpkin carving
ஹாலோவீன் கார்த்திகை கவர்ச்சி விளக்குகள்

ஊருசனம் ஓய்ந்திருக்கு; ஊதல் காற்றும் அடிச்சிருக்கு. வெட்ப தட்ப மாற்றம் வழமை போல் வருகிறது வட அமெரிக்காவிற்கு. பகலவனாகிய சூரியன் பருவகாலம் தொட்டுப் பதுங்குகையிலும் பாங்காக வருகிறாள் இயற்கையன்னை. இலையுதிர்காலத்தை , அவள் தன் இயல் வண்ணத் தூரிகைகளுடன் வரைகிறாள். பனிப்பூக்கள் எழுத்தாளர் சரவணக்குமரன் அவரது வர்ணஜாலக் கட்டுரையில் வர்ணித்தது போல் மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, செவ்வூதா நிறங்கள் வட அமெரிக்கக் காடுகள், மேடுகள், ஏரிக்கரைகள், ஆற்றோரங்கள் என அனைத்தையும் எழிலோடு மின்ன வைக்கின்றன. இயற்கையன்னை […]