Tag: Russia
2024 இல் ஜனநாயகம்
இந்த ஆண்டு 80 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள், அதாவது உலக மக்கட்தொகையில் ஏறத்தாழ 50 சதவிகிதத்தினர் தங்கள் நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்க வாக்களித்துள்ளனர். ஏதோவொரு வகையில், தாங்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்கள், தங்கள் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பளித்து, நலம் புரிவார்கள் என்ற நம்புகிறார்கள். அதே நேரத்தில் இந்த தலைவர்கள் அனைவரும் நியாயமான முறையில், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்களா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. அல்ஜீரியா, வெனிசுவேலா, துனிசியா உட்பட சில நாடுகளில் தேர்தலுக்கு முன்பே […]
விளாடிமிர் புடின் – புதிய சாதனை
“நாம் ஒன்றுபட்ட சிறந்த மக்கள்; நாம் ஒருமனதுடன் ஒன்றாக இணைந்து, அனைத்து தடைகளையும் கடந்து, திட்டமிட்டபடி வெற்றி பெறுவோம்” – சமீபத்தில் தனது ஐந்தாவது பதவிக் காலத்தை கிரெம்ளின் மாளிகை பதவியேற்பு விழாவில் தொடங்கிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேசியதன் ஒரு பகுதி இது. ரஷ்ய முன்னாள் அதிபர் ஸ்டாலினுக்கு பின்னர், நீண்ட காலம் பதவியிலிருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார் புடின். 1999 ஆம் ஆண்டு, ரஷ்யாவின் செயல் தலைவராக (தற்காலிக அதிபர்) […]
முடிவுக்கு வருகிறதா பொருளாதார உலகமயமாக்கம்?
இந்தக் கட்டுரையை நீங்கள் எந்தக் கருவியில் – கணினி, மடிக்கணினி, கைக்கணினி, கைப்பேசி – படிக்கிறீர்களோ தெரியாது, ஆனால் அந்தக் கருவியில் குறைந்தது ஐந்து நாடுகளின் உதிரிப் பாகங்களாவது கலந்திருக்கும். மிக நேர்த்தியான, இலகுவான, இன்றியமையாத பொருளாக மாறிவிட்ட கருவி, உங்கள் கைகளில் தவழ்வதற்குக் காரணமாக அமைந்தது உலகமயமாக்கல் சாத்தியப்படுத்திய பூகோள எல்லைகளைக் கடந்த விநியோகச் சங்கிலி எனலாம். இன்று நாம் அன்றாட வாழ்வில், காலையில் எழுந்ததும் பல்துலக்கும் ப்ரஷ், பேஸ்ட், குளிக்க சோப்பு, துடைக்கும் டவல், […]
ரஷ்யப் போரும் உலகப் பொருளாதாரமும்
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை, போராக உருவெடுத்து, இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்; உக்ரைனில் குழந்தைகள், வயதானோர், உடல் நலம் குன்றியோர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக அனுப்பப்பட்டு, மற்ற மக்கள் அனைவரும் ரஷ்யாவுக்கு எதிராகப் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தங்களுடன் எல்லையைப் பகிரும் உக்ரைன் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (NATO) சேருவது ரஷ்யாவின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் என ரஷ்யா அஞ்சுகிறது. கிரிமியாவை ஆக்கிரமித்து சொந்தமாக்கிக் கொண்டதைப் […]